BREAKING NEWS
Search

தலைவா யூ ஆர் கிரேட்..! – பீட்சா இயக்குநர்

தலைவா யூ ஆர் கிரேட்..! – பீட்சா இயக்குநர்  

றிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு இதை விட பெரிய பாராட்டு – விருது எதுவும் இருக்காது. ஆம்… அவரது பீட்சா படத்தை தனது ஹோம் தியேட்டரில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, படம் முடிந்ததும் போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் வெளியான படங்களில் நல்ல பெயரை மட்டுமல்ல… சத்தமில்லாமல் வசூலையும் அள்ளிய படம் பீட்சா. நல்ல படங்களைப் பார்ப்பதில் முதல் ரசிகர் சூப்பர் ஸ்டார்தான்.

அந்த வகையில் இந்தப் படத்தையும் பார்த்துவிட்ட ரஜினி, கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்துள்ளார். ஆனந்த் அதிர்ச்சியில் அவருக்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை.. வாயும் பேச முடியவில்லையாம்.

பீட்சா வெற்றியை விட அதிக சந்தோஷம் தரும் விஷயம், தலைவர் பாராட்டியதுதான் என்று அந்த பரம ரஜினி ரசிகர் பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் சிலாகித்ததோடு, ட்விட்டரிலும் இப்படித் தட்டி விட்டுள்ளார்.

“தலைவர் (ரஜினிகாந்த்) என்னை அழைத்து, பீட்சா படம் பார்த்ததாகச் சொன்னார். படம் எக்ஸலென்டாக உள்ளது என்றார். ஆஹா.. என்ன அற்புதமான தருணம்… தேங்ஸ் தலைவா… யூ ஆர் கிரேட்!”

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *