BREAKING NEWS
Search

ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தலைவர் ரஜினிகாந்த்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி உடல் முதலில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சிஐடி காலனியில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து ராஜாஜி அரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது.

அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி லதா, மகள் சௌந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

முன்னதாக நேற்று இரவே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் சென்றார் ரஜினிகாந்த். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிவிட்டார்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *