BREAKING NEWS
Search

‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க!’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

என்னை மிஞ்சிய வில்லனா இருக்கீங்களே.. – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

மிழகத்தில் ஈ -தான் இப்போது லேட்டஸ்ட் ஹீரோ. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்துள்ள நான் ஈ மற்றும் தெலுங்கு ஈகா படங்கள் தரம், வசூல் என அனைத்திலுமே டாப் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நானி, சுதீப், சமந்தா நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் நான் ஈ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்பையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:

“படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் ‘நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை  மிஞ்சிட்டீங்க…’ என்று வாழ்த்தினார்!”

இந்தப் படத்தை தேவி திரையரங்கில் பார்த்த இயக்குநர் ஷங்கர், கடுமையான உழைப்பு, அருமையான படம் என பாராட்டினார்.

-என்வழி செய்திகள்




6 thoughts on “‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க!’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

  1. மு.முத்துக்குமார்

    நான் ஈ நல்ல படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

  2. enkaruthu

    சில வேலை காரணமாக ரொம்ப நாள் கழித்து நம் தளத்தை பார்கிறேன்.தலைவா உங்களின் மனதை போலவே எல்லோரின் மனதும் இருந்தால் பொறமை என்ற ஒரு வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்கிவிடலாம்.நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் இதே சுதீப்(ஒருவருக்கும் இவரை தெரியாத நிலையில்) இதற்க்கு முன்பு ஒரு முறை தலைவரின் குணத்தை தெரியாமல் தாக்கி பேட்டி கொடுத்தார்.ஆனால் இன்று பாருங்களேன் சுதீப் பேச்சை.அமைதியாகவே மனதை மாற்றும் வித்தையை எங்கே கற்றுகொண்டாய் தலைவா.

  3. Raj

    எவனும் திருந்த மாட்டான்.. படம் ஓட வேண்டாமா.. வியாபாரி

  4. srikanth

    பகைவனுக்கும் arulvaay
    என்ற kolkai வுடையவன் nee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *