BREAKING NEWS
Search

‘தி ஒன் அன்ட் ஒன்லி ஒன்’ ரஜினிகாந்த்! – சத்ருகன் சின்ஹா

‘தி ஒன் அன்ட் ஒன்லி ஒன் ரஜினிகாந்த்!’ – சத்ருகன் சின்ஹா

Rajini-sinha copy

ன்றைக்கு மிகவும் ஸ்டைலான நடிகர் ஒரே ஒருவர்தான், அவர் ரஜினிகாந்த் எனக் கூறியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா.

எழுபது மற்றும் எண்பதுகளில் பாலிவுட்டில் பிரபல வில்லனாகவும், ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சத்ருகன் சின்ஹா.

சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரைத் தன் ஸ்டைலுக்கு முன்மாதிரி என்று புகழ்ந்துள்ளார். இருவரும் சில இந்திப் படங்களில் இணைந்து நடித்தும் உள்ளனர்.

சமீபத்தில் பிலிம்பேர் சினிமா இதழில் சத்ருகன் சின்ஹா வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார்.

அதில், ‘இன்றைய நடிகர்களில் மிகவும் ஸ்டைலான நடிகர் யார்? என்ற கேள்விக்கு, தி ஒன் அன்ட் ஒன்லி ஒன் ரஜினிகாந்த் (The One and Only one Rajinikanth) என்று பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா நடிகர்களுமே ரஜினியின் இடத்தைப் புரிந்து வைத்து, கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

-என்வழி ஸ்பெஷல்

 




6 thoughts on “‘தி ஒன் அன்ட் ஒன்லி ஒன்’ ரஜினிகாந்த்! – சத்ருகன் சின்ஹா

  1. s.vasanthan

    அனா நம்ம நடிகர்களுக்கு ரெண்டு படம் ஓடின என்ன நினைப்பு எல்லாம் வருது ,அட அட

  2. kumaran

    எல்லா விஷயத்திலும் தலைவருக்கு நிகர் இல்லை (ஸ்டைல் மட்டும் அல்ல )

  3. enkaruthu

    //பாலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா நடிகர்களுமே ரஜினியின் இடத்தைப் புரிந்து வைத்து, கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.//

    உண்மைதான்.இதுவரை எனக்கு தெரிந்து எந்த ஒரு மாநில நடிகரையும் பாலிவுட் உலகம் இந்தளவு புகழ்ந்ததில்லை.

  4. மிஸ்டர் பாவலன்

    //உண்மைதான்.இதுவரை எனக்கு தெரிந்து எந்த ஒரு மாநில நடிகரையும் பாலிவுட் உலகம் இந்தளவு புகழ்ந்ததில்லை.// (என் கருத்து)

    கமல் ஹாசனும் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் பெரும் புகழ்
    பெற்று, விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றையும் இயக்க இருப்பது
    உலகம் அறியும். நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *