BREAKING NEWS
Search

ரஜினி ஒரு கிங், கடவுள், மிகச் சிறந்தவர்.. யாரோடும் ஒப்பிடாதீர்கள்! – தனுஷ்

ரஜினி ஒரு கிங், கடவுள், மிகச் சிறந்தவர்.. யாரோடும் ஒப்பிடாதீர்கள்! – தனுஷ்

rajini-dhanush

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுள் மாதிரி. அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்றார் நடிகர் தனுஷ்.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான கால கட்டம் இது. அகில இந்திய அளவில் பிரபல நாயகனாகிவிட்டார் அவர். நாளை வெளியாகும் ஷமிதாப் அவருக்கு மிக முக்கியமான படம்.

அடுத்த ஒரு வாரத்தில், தமிழில் அவரது அனேகன் வெளியாகிறது. அதற்கடுத்த இரு வாரங்களில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள காக்கிச் சட்டை வெளியாகிறது.

இப்போதுள்ள எந்த நாயகர்களுக்கும் இதுபோல முக்கியமான படங்கள் ஒரே மாதத்தில் வெளியானதில்லை.

ஷமிதாப் படத்துக்காக தொடர்ந்து நாட்டின் முன்னணி மீடியாக்களுக்கு பேட்டிகள் அளித்து வருகிறார். அவற்றில் தவறாமல் தலைவர் ரஜினி பற்றிய கேள்விகள் இடம் பெறுகின்றன.

ஒரு பத்திரிகையில் ரஜினி – அமிதாப்.. யாருடைய குரல் சிறப்பாக இருக்கும் என்று கேட்டிருந்தார்கள்.

rajini-dhanush2

அதற்கு பதிலளித்த தனுஷ், “இருவரும் பெரும் சிகரங்கள், சாதனையாளர்கள். அவர்களை ஒப்பிடவே முடியாது.. தேவையற்றதும் கூட,’ என்று கூறியிருந்தார்.

இன்னொரு பேட்டியில், “என்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிடாதீர்கள். ரஜினிகாந்த் சாதித்ததில் நான் ஒரு சதவீதம் கூட சாதிக்கவில்லை. அதனால் அவருடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க எந்தவித காரணமும் இல்லை.

ரஜினி ஒரு கிங், அவர் ஒரு கடவுள். அவர்தான் எப்பொழுதும் சிறந்தவர்.. அவருக்கு நிகராக யாரையும் நான் பார்க்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

-என்வழி




2 thoughts on “ரஜினி ஒரு கிங், கடவுள், மிகச் சிறந்தவர்.. யாரோடும் ஒப்பிடாதீர்கள்! – தனுஷ்

  1. Rajini Arul

    Super Star Rajini ia my God. Thalaivar Rajini is a icon of Indian Cinema.
    Long Live our Super Star Rajini.

  2. lingaa karthi keyan

    படம் ரிலீஸ் ஆக போகுது இல்ல அதான் பாஸ் புகழ்ந்து தல்ரான் நம்ப தலைவரப் பத்தி சின்ன பசங்க பாஸ் இவனுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *