BREAKING NEWS
Search

இந்திய சினிமாவின் அடையாளம் ரஜினி சார்.. பாகுபலியை அவர் முதலில் பார்ப்பதுதான் கவுரவம்! – அனுஷ்கா

இந்திய சினிமாவின் அடையாளம் ரஜினி சார்.. பாகுபலியை அவர் முதலில் பார்ப்பதுதான் கவுரவம்! – அனுஷ்கா

lingaa-HQ-Pic-7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம்.. அதனால்தான் எங்கள் பாகுபலி படத்தை அவருக்கு முதலில் திரையிட்டு மரியாதை செய்ய விரும்புகிறோம்”, என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 10-ம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற அறிவிப்போடு வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

இந்தியா சினிமா மட்டுமின்றி, உலகமே பெரும் ஆர்வத்துடன் இன்றைக்கு எதிர்நோக்கும் படமாக பாகுபலி மாறிவிட்டது.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போது, இந்தப் படத்தை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என்று நடிகை அனுஷ்காவிடமும், நாயகன் பிரபாஸிடமும் கேட்டபோது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குதான் முதலில் திரையிட்டுக் காட்ட விரும்புகிறோம்,” என்று கூறினர்.

Anushka-Shetty-Rajnikanth-Sonakshi-Sinha

ஏன் ரஜினிக்குதான் படத்தை முதலில் காட்ட வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அனுஷ்கா சொன்ன விளக்கம் இது:

“ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர். இந்திய சினிமாவுக்கான சந்தையை உலக அளவில் பெரிதாக்கித் தந்தவர்.

அவரை நமது சினிமாவின் அடையாளமாகப் பார்க்கிறோம். இந்தப் படத்தை அவருக்கு முதலில் திரையிட்டுக் காட்டி மரியாதை செய்ய விரும்புகிறோம்,” என்றார்.

தலைவர் ரஜினிக்காக ஹைதராபாதில் உள்ள ஐமேக்ஸ் அரங்கில் பாகுபலி சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

-என்வழி




6 thoughts on “இந்திய சினிமாவின் அடையாளம் ரஜினி சார்.. பாகுபலியை அவர் முதலில் பார்ப்பதுதான் கவுரவம்! – அனுஷ்கா

  1. கதிரவன்

    தலைவர் ரஜினியின் செல்வாக்கு உலகம் அறிந்த ஒன்று. இங்குள்ள சில குமுட்டைகள் கண் இருந்தும் குருடர்கள் காது இருந்தும் செவிடர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் செல்வாக்கை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உலகம் உள்ளமட்டிலும் தமிழர்கள் உள்ளமட்டிலும் நம் ஸ்டைல் மன்னனின் செல்வாக்கு புகழ் நீடித்து இருக்கும்.
    வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

  2. srikanth1974

    தலைவர் அனுஷ்காவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
    என்பது எனது விருப்பம்.

  3. srikanth1974

    பாகுபலி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *