BREAKING NEWS
Search

இந்தியாவின் இணையற்ற சாதனையாளர் சூப்பர் ஸ்டார் ரஜினி! – வித்யுத் ஜம்வால்

இந்தியாவின் இணையற்ற சாதனையாளர் சூப்பர் ஸ்டார் ரஜினி! – வித்யுத் ஜம்வால்

rajini4
னக்கென தனி வழியை அமைத்து, அதில் உறுதியுடன் பயணித்து இந்தியாவின் இணையற்ற சாதனையாளராக மாறியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என தெரிவித்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால்.

அஜீத்தின் பில்லா 2 பட வில்லனாக தமிழில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இவர்தான் பின்னர் விஜய் நடித்த துப்பாக்கியிலும் வில்லனாக வந்தார்.

ஒரு தேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் இவர். சந்தர்ப்ப வசமாக இந்தியில் தன் வாழ்க்கையை வில்லனாகத் தொடங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவருக்கு ஏக மவுசு.

அலட்டிக் கொள்ளாத வில்லத்தனம் காட்டுவதுதான் இவர் பாணி. Vidyut Jamwal Photo Shoot Stills

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ‘நீங்கள் யாருடன் நடிக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்று கூறினார்.

மற்றொரு கேள்வி, “இந்திய சினிமாவில் உங்களைக் கவர்ந்த நடிகர் அல்லது நடிகை?” என்ற கேள்விக்கு, “சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். காரணம், எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, தனக்கென ஒரு வழியை உருவாக்கி, அதை உறுதியுடன் நடைபோட்டு இந்த நாட்டின் இணையற்ற சாதனையாளராக மாறியுள்ள அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்,” என்று கூறியுள்ளார்.

-என்வழி சினிமா




One thought on “இந்தியாவின் இணையற்ற சாதனையாளர் சூப்பர் ஸ்டார் ரஜினி! – வித்யுத் ஜம்வால்

  1. varadhu

    எதிர்மறை பாத்திரங்களில் நடித்து …
    தனக்கென ஒரு வழியை உருவாக்கி…
    இன்று ஈடு இணையற்ற சாதனையாளர் …

    தலைவரை பற்றி எந்த அளவு புரிந்து வைத்திருந்தால் இந்த மாதிரி வார்த்தைகள் வரும் . வித்யுத் உங்களின் கருத்துக்கு நாங்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இங்குள்ள எந்த ஒரு தமிழ் நடிகரும் தலைவரை பற்றி இப்படி கூறியதில்லை .நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல நடிகராக வருவீர்கள் என்று வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *