BREAKING NEWS
Search

தலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்!

சென்னை: தலைவர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் பரவிவந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதிய படங்களின் ஷூட்டிங், அரசியல் வேலைகள், கஜா புயல் நிவாரணப் பணிகள் என பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதால், இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்த் வீட்டிலிருந்து கூறுகையில், “ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம்,” என்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *