‘ஹாலிவுட்டில் உள்ள யாரையும் விட பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி!’- ஜாக்கி ஷராப்
Wednesday, February 15, 2012 at 4:36 pm | 1,337 views
ரஜினிக்காக எதையும் செய்வேன்- ஜாக்கி ஷராப்

ஹாலிவுட் நடிகர்கள் யாரையும் விட மிகப் பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் கோச்சடையானில் நடிப்பது பெருமையாக உள்ளது, என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப்.
ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தவர் ஜாக்கி ஷராப். பல வெற்றிப் படங்களின் நாயகன். இப்போதும் பிஸியான நடிகர்.
தமிழில் முதல்முறையாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். அடுத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷராப் அளித்துள்ள பேட்டி:
கோச்சடையான் வாய்ப்பு எப்படி வந்தது?
சில வாரங்களுக்கு முன் நாயர் என்பவர் போன் செய்து, என்னுடன் சௌந்தர்யா ரஜினி பேச விரும்புவதாகத் தெரிவித்தார். கோச்சடையானில் நடிக்குமாறு பின்னர் சௌந்தர்யா கேட்டுக் கொண்டார்.
ரஜினிக்காக எதையும் செய்வேன் என்று கூறியவர் நீங்கள். அதற்காகத்தான் கோச்சடையானில் ஒப்பந்தமானீர்களா?
ரஜினி ஒரு benchmark. என்னுடைய நெருங்கிய நண்பர். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன், அவர் மீது மதிப்பு கொண்டுள்ளேன். அவர் கேட்டால் நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன்.
கோச்சடையான் ஸ்கிரிப்ட் மிக அருமையாக இருந்தது. எனது கேரக்டரும் வலுவானது. எல்லோருமே ஏ கிரேடு தொழில்நுட்பக் கலைஞர்கள். சௌந்தர்யா பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறார். எனக்கு இந்தப் படம் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும் என நம்பிக்கை உள்ளது.
ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?
அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் எப்போதாவது எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் பரஸ்பர அன்பு, மரியாதையை தெரிவித்துக் கொள்ளத் தவறுவதில்லை.
உங்கள் பிறந்த நாளன்று சென்னையில் இருந்தீர்கள்.. எப்படி கொண்டாடினீர்கள்?
அன்றைக்கு (பிப் 1) நான் சௌந்தர்யாவை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கே நான் எதிர்ப்பார்க்காத இனிய அதிர்ச்சி… சௌந்தர்யா ஒரு கேக் வாங்கி வைத்திருந்தார். உள்ளூர், சர்வதேச திரைக்கலைஞர்கள் பலரும் சூழ்ந்து வாழ்த்துப் பாடல் பாட, கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினேன்.
நான் ஒருபோதும் பிறந்த நாள் கொண்டாடியதில்லை. ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரம் ரஜினியுடன் கோச்சடையானில் பணியாற்ற ஆரம்பித்த அந்த முதல் நாளே எனக்கு எப்படி அமைந்துவிட்டது பாருங்கள். என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான தருணம் அது.
ஆரண்ய காண்டம் பட வேலைகளுக்குப் பிறகு மீண்டும் அன்றுதான் சென்னைக்கு வந்திருந்தேன்.
ரஜினி அன்று என்னோடு சிறிது நேரம் போனில் பேசினார். அடுத்த முறை அவரை வீட்டில் சந்திப்பதாகக் கூறினேன்.
ரஜினியுடன் கடைசியாக உத்தர் தக்ஷணில் நடித்தீர்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் இணைவதை எப்படி உணர்கிறீர்கள்?
எக்ஸலென்ட். என் சகோதரரை நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதைப் போன்ற உணர்விலிருக்கிறேன்!
அவரை இந்த அளவு உங்களுக்குப் பிடிக்கக் காரணம் என்ன?
அவரது எளிமை பிடிக்கும். அவரது உச்ச நட்சத்திர அந்தஸ்து ரொம்பப் பிடிக்கும். இந்தியாவின் நட்சத்திரமான அவர், ஹாலிவுட்டின் எந்தப் பெரிய நடிகரையும் விட உயர்வானவர். என்னைத் தவிர, என் மனைவி விரும்பும் ஒரே நடிகர் ரஜினிதான். அவர் மீது அந்த அளவு அன்பு!
கோச்சடையானில் நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா.. உங்கள் காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டனரா?
இல்லை. போட்டோ ஷூட் மட்டும்தான் நடந்துள்ளது. மார்ச்சில்தான் படப்பிடிப்பு.
கோச்சடையானில் உங்கள் ரோல் என்ன?
இந்த நிலையில் படத்தின் கதை, என் பாத்திரம் குறித்துப் பேசுவது சரியாக இருக்காது.
ஒரு இயக்குநராக சௌந்தர்யா பற்றி…?
என் சகோதரர் மகள் என்னை இயக்குவது போலத்தான் உணர்கிறேன். ஒரு குடும்பத்தின் இனிய நிகழ்வு மாதிரி. அற்புதமாக அமையும். தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் கொண்டவர் சௌந்தர்யா. மிகுந்த உணர்வுப்பூர்வமாக இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.
-என்வழி ஸ்பெஷல்






அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




Hope all our expectation fulfill
Breaking News
விஜய்க்கு ரஜினி விருது!! விஜய் பாட்டி அதிர்ச்சியில் மரணம் # சே பாட்டி ரஜினியின் தீவிர விசிறி போல..அவங்களாலயே தாங்கமுடியலயே நாங்க ??
ivar namma karthik mathiri hindiyila big nadikar,wellcome