BREAKING NEWS
Search

கமல் ரசிகர்கள் தாக்குதல்… சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

கமல் ரசிகர்கள் தாக்குதல்… சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

thumb
மல் ரசிகர்களால் தாக்கப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனை போனில் அழைத்து நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, கமல் ஹாஸனை வரவேற்க வந்த சில ரசிகர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை  என்று கமல் ஹாஸன் கூறியிருந்தார் (கமலும் சிவகார்த்தியும் ஒரே ப்ளைட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது நடந்ததுதான் இந்த தாக்குதல்).

‘தலைவர் ரஜினி எனது ரோல் மாடல்.. அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்தேன்,’ என்று ஒரு பேட்டியில் கூறியதால் அவர் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்பட்டது.

ஸ்ருதிஹாஸன் பற்றி சிவா கமெண்ட் அடித்ததால் நடந்த தாக்குதல் இது என்று சிலர் கூறினர். ஆனால் யாரைப் பற்றியும் எந்தக் கமெண்டும் தான் அடிக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் கூறிவிட்டார்.

அதேநேரம், ‘இந்தத் தாக்குதல் உண்மைதான்’ என்று கூறிய சிவகார்த்திகேயன், அதுகுறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மதுரை போலீசார் இதுகுறித்து புகார் பதிவு செய்ய முனைந்தபோதும், சிவகார்த்திகேயன் புகார் தர மறுத்துவிட்டார்.

“நான் இப்போது நலமாக உள்ளேன். பிரச்சினை ஏதுமில்லை”, என்று மட்டும் கூறிவிட்டார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார். ‘என்ன நடந்தது…’ என்று கேட்டவர், பின்னர் ‘பாதுகாப்பா இருங்க..’ என்று கூறினாராம்.

-என்வழி

 




5 thoughts on “கமல் ரசிகர்கள் தாக்குதல்… சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. jegan N

    Thalaivara jeyika mudiyatha kozhaigal ipo thalaivaroda rasiganaum kuri vachutanuga..thuuu..mudinja thozhil rrethiya mothi jeyingada ….

  2. கார்த்தி

    அந்த இடத்தில் ரஜினி ரசிகர்கள் இருந்திருந்தால் அங்கு நடந்தது வேறாக இருந்திருக்கும் கமல் ரசிகர்களே

  3. கார்த்தி

    கோழை பசங்களா உங்கள் வீரத்தை ஒருவரிடம் காட்டியுள்ளீர்கள் உங்களை பாரட்டியே ஆகவேண்டும்

  4. siva

    போட்ட பயலுக தில் இருந்த முன்னாடி வாங்கடா

  5. enkaruthu

    கமல் ரசிகர்கள் அடித்தார்கள் என்று கேட்பதற்கே காமெடி யா இருக்கு .சிவகர்த்திகேயன் உண்மையாலுமே நல்ல மனிதர்.நான் அண்ணாமலை டயலாக் சொல்லித்தான் பட உலகுலே நுழைந்தேன் ,எனக்கு பாபாவ பிடிக்கும் எத்தனை ரஜினி படம் பார்த்து சுட கத்திருகிறோம்,ஒரேசூரியன் ஒரே சூப்பர் ஸ்டார் இப்படியெல்லாம் பேசி தான் விளம்பரம் ஆனவுடன் இந்த விஜய் போன்றோர்கள் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று பீதிகொல்பவர்களுக்கு மத்தியில் சிவகர்த்திகேயன் உண்மையாலுமே தலைவர் ரசிகர்தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *