BREAKING NEWS
Search

கருணாநிதியை நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்!

rajinikanth-karu

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள கருணாநிதிக்கு அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதில், கருணாநிதியின் நலன் தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (டிச.4) அல்லது திங்கள் கிழமை (டிச.5) கருணாநிதி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஜினி விசாரிப்பு

இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். கருணாநிதி நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் அவர் வாழ்த்துக் கூறினார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *