BREAKING NEWS
Search

தலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

தலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

10322729_573678976080043_7157958685308592646_n

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். அவர் மிகவும் நலமுடன், எப்போதும் போல சுறுசுறுப்பாக உள்ளார்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லிங்கா படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், படத்தின் சண்டை காட்சிகளை படமாக்கியபோது ரஜினி மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முதல் வதந்திகள் வெளியாகின. குறிப்பாக ஒரு முன்னணி நாளிதழே இந்த பொய்ச் செய்தியைப் பரப்பியது.

இதை பார்த்த ரசிகர்கள் தலைவர் உடல் நிலை குறித்து நினைத்து கவலை அடைந்தனர். இதை அறிந்த கே.எஸ். ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிக்கு உடல்நலம் சரியில்லை என்று பிரபல தமிழ் செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி உண்மை இல்லை. ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் சந்தோஷமாக படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ஏராளமான ரசிகர்கள் லிங்கா படப்பிடிப்புத் தளத்துக்கே சென்று தலைவரைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




4 thoughts on “தலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

  1. ரஜினி தாசன்

    தலைவரின் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாது. கடவுள் எப்பவும் தலைவர் பக்கம் தான்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க.

  2. anbudan ravi

    அந்த முன்னணி நாளிதழ் சாதித்தது ஒன்றே ஒன்று…..பெரிய விளம்பரம் பெரிய வியாபாரம்…..

    அன்புடன் ரவி.

  3. குமரன்

    எப்படியாவது பத்திரிக்கை விற்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்யலாம்?

    வினோவுக்கும் என்ன ஆச்சு என்று கவலை இருந்தது. நல்ல செய்தி கேட்டு மகிழ்ச்சி.

  4. RAjiniRasigan

    Hi Vino

    Just out of curious, I m asking ..media and newspaper are spreading news as Vijay will be the next superstar (actually irritating to hear the news and to think as him as a so called “Next Superstar”) but aprt from that, what s the stand of Rajini fans on this. ? Are we going to accept this ? or going to oppose of taking this title. What’s happening on this ?

    Why no one raised any voice agains this ? Is that shameless Vijay going to accept the title on 15th ? Can you please clarify this to us ?

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *