ரஜினிகாந்த் என்றால் நேர்மை… ரஜினிகாந்த் என்றால் வாக்குத் தவறாமை… ரஜினிகாந்த் என்றால் எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்…’ – இதை திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாகவே யாரிடம் சொன்னாலும் தயங்காமல் ஒப்புக் கொள்வார்கள்.
‘கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கின பழக்கமே இல்லை’ என்பது ரஜினி சினிமாவுக்குப் பேசிய வசனம் மட்டுமல்ல… அவரது வாழ்க்கையே அதுதான்.
சில நாட்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர் இன்னமும் வாடகை வீட்டில் வசிப்பதாக நடிகர் சிவகுமார் கூறி, அரசு சார்பில் கலைஞானத்துக்கு வீடு ஒதுக்குமாறு கேட்டார். அதைக் கேட்ட ரஜினிகாந்த், “அரசுக்கு அந்த வாய்ப்பைத் தர மாட்டேன். கலைஞானம் தன் கடைசி காலம் வரை என் வீட்டில்தான் இருக்க வேண்டும். சீக்கிரம் அவருக்கு ஒரு வீடு பாருங்கள்.. அடுத்த பத்து நாட்களில் வாங்கித் தருகிறேன்,” என்றார்.
ரஜினி சொன்னதைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா கலைஞானத்துக்காக ஒரு வீடு பார்த்துள்ளார். ரூ 1 கோடி மதிப்பிலான அந்த வீட்டை, முழுமையாக தனது செலவில் வாங்கி கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வேறு எங்குமே இப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியுமா? கலைஞானம் சொல்வதுபோல, ரஜினி என்பவர் அவருக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை… முதல் முதலில் ஹீரோ வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றி. அவரும் சம்பாதித்துவிட்டார். அதன் பிறகு ரஜினியை வைத்து அவர் படம் பண்ணவே இல்லை. ஆனாலும் 98-ல் ரஜினியே அழைத்து அருணாச்சலம் பட லாபத்தை பிரித்து பெரிய தொகை அளித்தார்., அப்போது அந்தத் தொகையை வைத்து கலைஞானம் தனது கடன்களை அடைத்துவிட்டு, சொந்த வீட்டையும் மீட்டார். ஆனால் பின்னர் அனைத்தையும் இழந்து வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் ரஜினி, கலைஞானம் வாழ்நாளில் மறக்க முடியாத உதவியை மீண்டும் செய்திருக்கிறார்.
அதுதான் ரஜினி மனசு!
(முழுமையான அப்டேட் விரைவில்)
– என்வழி
Living Legend … again this is one of few he announced in public.. mainly without publicity he does…
Thalaivar for reason
Rajini can become the CM of Tamil Nadu in the next election. He should take up the leadership of Tamil Nadu BJP and form a co-allision government with Admk with Rajini as its CM. If Rajini stands alone in the election, it will help DMK.