BREAKING NEWS
Search

போருன்னு சொன்னா தேர்தல்தான்… இப்ப என்ன தேர்தல் வந்துடுச்சா? – தலைவர் ரஜினிகாந்த்

டிசம்பர் 31!

Rajini-date

சென்னை: போர் வரும்போது பார்த்துக்கலாம் என்று சொன்னேன். போர் என்று சொன்னால்

தேர்தல்தான். ஆனால் இப்போது போர் வந்துவிட்டதா? எனக் கேள்வி எழுப்பினார் தலைவர்

ரஜினிகாந்த்.

தலைவர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களுடனான இரண்டாம் கட்டச் சந்திப்பை இன்று தொடங்கினார். அடுத்த ஆறு நாள்களுக்கு இந்தச் சந்திப்பு நடக்கிறது.

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து,

புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர்

மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர்.

தனது அரசியல் குறித்து ரஜினி பேசியது:

என் அரசியல் அறிவிப்பு குறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் அரசியலுக்கு

வருவதில் மக்களைவிட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம்.

யெஸ்.. நான் ஏற்கெனவே போர்வரும் போது பார்க்கலாம் என்றேன். போர் என்றால் தேர்தல்தான். ஆனால் இப்போது என்ன போர் வந்துவிட்டதா?

அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் என்ன என்பதெல்லாம் தெரிந்திருப்பதால் தயங்குகிறேன். தெரியாமலிருந்திருந்தால் அப்படியே வந்துட்டிருப்பேன். யுத்தத்துக்குப் போனால் ஜெயிக்க வேண்டும். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்.

எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். என்ன

செய்தாலுமே ஒழுக்கமும் கட்டுப்பாடும்தான் முக்கியம். 31-ம் தேதி அரசியலுக்கு வரேன்னு சொல்ல வரல… ஆனா அரசியல் நிலைப்பாடு குறித்து சொல்லிடறேன்.

நான் எப்பவும் சொல்றதுதான்.. குடும்பம், தாய் தந்தை, குழந்தைகள்தான் முக்கியம். குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுங்க, அது முக்கியம்,” என்றார்.

இன்னொன்னு இப்ப நிறைய சோஷியல் மீடியா வந்திடுச்சி. நிறைய நெகட்டிவ் சிந்தனைகள், மீம்ஸ்கள் வந்துடுச்சி. நெகடிவ் விஷயங்களை மனசுல எடுத்துக்காதீங்க. நேர்மறையாவே திங்க் பண்ணுங்க. அப்பாவை பையன் கொலை பண்ணான், பையன் அம்மாவை கொன்னான், பெண்ணை கற்பழிச்சான்னு வர்ற செய்திகளை மனசுல ஏத்திக்காதீங்க. அது மனசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வெளில போய்ட்டு வந்து ஒரு காட்டன் எடுத்து முகத்தைத் துடைச்சா எவ்ளோ அழுக்கு இருக்குன்னு தெரியும். அதே மாதிரிதான் இந்த நெகடிவ் விஷயங்கள் மனசுல ஸ்டோர் ஆகிடும். அந்த எதிர்மறை கருத்துக்கள் ஏறாமல் பார்த்துக் கொள்ள நல்ல தியானம் அவசியம். நல்ல சிந்தனைகள், கருத்துகளை உள்வாங்க வேண்டும்,” என்றார்.

rajini-legends

கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குநர் எஸ்பி முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குநர்களை மறவாமல் அழைத்து தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு புரிய வைக்கிறார் ரஜினிகாந்த்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *