BREAKING NEWS
Search

2.0 ரசிகர் மன்ற காட்சி… ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை!

 வார்னிங்!

சென்னை :  இந்திய சினிமாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நவம்பர் 29ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், உள்ளூர் நேரப்படி முந்தைய நாளானா நவம்பர் 28ம் தேதியே வெளியாகிறது. 10 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இந்தப் பட வெளீயீடு குறித்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்டுள்ள டிக்கெட்டுகளை வெளியில் யாருக்கும் விற்கக்கூடாது.

திரையரங்குகள் இருக்கைக்கேற்ப நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

இதை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று நிர்வாகி வி.எம். சுதாகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *