BREAKING NEWS
Search

புயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி!

புயல் பாதித்த ஆந்திர மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ 5 லட்சம் உதவி!

Thalaivar Rajini 2

சென்னை:  ஹூட் ஹூட் புயலால் சீர்குலைந்த ஆந்திராவுக்கு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனி மாநிலமாக தெலுங்கானா பிரிந்து போன பிறகு, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அமைந்த சில மாதங்களிலேயே அங்கு ஹுட்ஹுட் புயல் கோரத்தாண்டவம் ஆடியது.

இந்த புயலால் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டது. உயிர்கள் பல பலியாகின. விசாகபட்டிணம் நகரமே முற்றிலும் உருகுலைந்தது. மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து, ஆந்திர அரசுக்கு உதவுவதற்காக, தெலுங்கு திரையுலகினர், நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.

தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். தமிழ் சினிமாவிலிருந்தும் சிலர் பங்கேற்றனர். நிதி உதவியும் அளித்தனர்.

10421379_895568403800827_7867390892449722775_n

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பொதுமக்கள் நிவாரண நிதியாக ஶ்ரீராகவேந்திரா பப்ளில் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஐந்து லட்சம் (டிடி) ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1959295_410351012472512_4402081227569329554_n

ஏற்கெனவே ஹைதராபாதில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில்,  புயல் பாதித்த ஆந்திர மக்களுக்காக நான் நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று வாக்களித்திருந்தார் ரஜினிகாந்த். அதன்படி இந்த நிதியை வழங்கியுள்ளார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *