BREAKING NEWS
Search

அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி?

அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி?

BoT7Y8NIAAAw6A8

மிழ் சினிமாவில் இப்போதைய பரபரப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்துள்ள அதிரடி முடிவுகள்தான். அடுத்தடுத்து மூன்று படங்களில் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த மூன்றும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்து, இப்போது கஷ்டப்படும் தயாரிப்பாளர்களைக் கைத்தூக்கிவிடத்தான். இவற்றுடன், இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமிக்கு உதவவும் ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

முதல் படம் தனது நீண்ட நாள் நண்பரும், ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க மாட்டோமா என்ற ஏக்கத்திலிருந்தவருமான கலைப்புலி தாணுவுக்காக. இதை ரஞ்சித் இயக்குகிறார் என்பதெல்லாம் பழைய செய்தி.

அடுத்த படம் ஷங்கர் இயக்கப் போவது. இது நீண்ட நாள் புராஜெக்ட். முன் தயாரிப்புப் பணிகளுக்கே 6 மாதங்களாகும் என்பதால், இதை வரும் ஜனவரியில் ஆரம்பிக்கத் திட்டமாம்.

மூன்றாவது படம், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காம்.

இவரும் ரஜினியிடம் நீண்ட நாட்களாக கால்ஷீட் கேட்டு வருகிறார். ஆனால் ரஜினி கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். ஆனால் ஐ படத்தின் போது, ரவிச்சந்திரனுக்கு பெரிய உதவி செய்தார் ரஜினி. அவர் படம் தெலுங்கில் சிக்கலின்றி வெளியாகக் காரணமே ரஜினிதானாம். இதற்காக அவர் ரஜினியை வீட்டில் போய் சந்தித்துவிட்டு நன்றி கூறிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் இப்போது அவரது சொத்துகள் அனைத்தும் ஜப்திக்கு வந்துவிட்டன. பெரும் நெருக்கடியில் உள்ள அவருக்குக் கை கொடுக்க ஒரு படம் நடித்துத் தரப் போகிறாராம் ரஜினி.

அந்தப் படத்தை இயக்கப் போகிறவர் சுந்தர் சி என்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை – ஆக்ஷன் கதையாக இந்தப் படம் இருக்குமாம். கதை கேட்டு ஓகேவும் சொல்லிவிட்டாராம் ரஜினி.

ரஞ்சித் படத்தை பொங்கலுக்கும், சுந்தர் சி படத்தை தீபாவளிக்கும் வெளியிடத் திட்டம் என்கிறார்கள்.

இதற்கிடையில் ரஜினியிடம் கால்ஷீட் பெற லிங்குசாமியும் தீவிரமாக முயற்சித்து வருகிறார். உத்தம வில்லன் படத்தால் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ள லிங்குசாமி, கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து நிற்கிறார். எனவே அவருக்கும் ரஜினி கால்ஷீட் கொடுக்கக் கூடும் என்கிறார்கள்.

-என்வழி ஸ்பெஷல்
14 thoughts on “அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன், லிங்குசாமிக்கு கை கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி?

 1. chozhan

  mr வினோ, உத்தமவில்லன் படம் நஷ்டமா? தெரிந்து எழுதவும். லிங்கா மாதிரி படம் வெளியான மூன்றாம் நாள் நஷ்டம் என்று எழுத கூச்சமாக இல்லையா? என்ன வினோ நீங்களுமா?
  ___________

  உத்தம வில்லன் மிகப் பெரிய நஷ்டத்தைத் தந்திருக்கிறது. அதற்கு பல காரணங்கள். இதற்காக லிங்குசாமிக்கு உதவப் போகிறவர் தலைவர்தான். இந்தப் பிரச்சினை குறித்து அனைத்தும் தெரிந்ததால்தான் எழுதுகிறேன்.

  -வினோ

 2. anbudan ravi

  சோழன் அவர்களே……எந்த ஒரு உறுதியில்லாத செய்தியையும் என்வழியில் வெளியிடப்படமாட்டாது . உத்தம வில்லன் போற்றவேண்டிய படம்தான் ஆனால் சிறந்த பொழுதுபோக்கு படம் இல்லை. எந்த ஒரு படம் குழந்தைகள் விரும்பி பார்க்கிறதோ அந்த படமே வெற்றி அடையும்.

  அன்புடன் ரவி.

 3. Rajesh

  சோழன் அவர்களே வினோ படம் வெளி வந்து ஒரு வாரம் முடிந்த நிலையில் எழுதி உள்ளார். அதனால் அவர் கூச்ச பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் 04/05 முதல் பல திரை அரங்குகளில் உத்தம வில்லின் காட்சி கூட்டம் இல்லாத காரணத்தினால் இரத்து செய்யபட்டன (including Devi paradise). சென்னை வெளிய மற்ற ஊரில் இதவிட மோசம். உத்தம வில்லின் ரிலீஸ் செய்ய லிங்கு கடன் மற்றும் 30 கோடி அளவில் உள்ளது. படமும் கை கொடுக்க போவதில்லை. அதனால் இதில் ஒரு தப்பும் இல்லை. அது மட்டும் இல்லாமல் ரஜினி தன்னால் நட்டம் ஏற்பட்டால் பணம் திரும்பி தருவார் என்றும் எல்லா விநியோகிச்தருக்கும் தெரியும். அனால் கமலிடம் இருந்து ஒரு நயா பைசா கெடைக்காது. இது தான் உண்மை.

 4. Rajagopalan

  Ekllarukum help pannum thalaivar…
  But nobody helped thalaivar for the Linga Issue…
  What to say for this?

 5. Manikandan

  எது உண்மையோ பொய்யோ தலைவர் மூன்று படங்களில் நடிப்பது மிகபெரிய சந்தோசம்

 6. மிஸ்டர் பாவலன்

  உத்தம வில்லன் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது உண்மை.

  அதை சரி செய்ய ரஜினியின் உதவியை லிங்குசாமி ஏன் கேட்கனும்?

  கமலை வெச்சு இன்னும் இரண்டு, மூணு படம் எடுத்து கடனை அடைத்து
  விடலாமே? எப்படி என் ஐடியா?!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. jegan N

  rajini film loss nu sonnapo kamal fans lam rempo pesunanga.IPO moonjiya enga kondu vaipangalam

 8. bahrainbaba

  திரு.. பாவலன் அவர்களே.. உங்கள் ஐடியா சூப்பர்.. பாஸ்.. உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்..

  வினோ

  தலைவர் நிறைய படங்கள் பண்ணுவது மகிழ்ச்சியான செய்தியே.. உறுதியான தகவலுக்காக காத்திருக்கிறோம்.

  பஹ்ரைன் பாபா

 9. prakash

  நானும் ரஜினி ரசிகன் தான்

  இப்படிப்பட்ட கேடுகெட்ட தலைப்பை ரஜினியே கூட விரும்ப மாட்டார்

  உதவி பண்றேன் என்று சொல்லி இப்படி தலைப்பு வச்சா நல்லாவா இருக்கு?

  கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க

  நேபாளம் இந்தியாவை உதவி பண்ணியது போதும் வெளிய போ என்று சொல்லி விட்டது.
  எதனால? இந்தியா பண்ணுகிற உதவியை டமாரம் போட்டு விடிய விடிய கூப்பாடு போட்டு சொல்லியதால்

  ரஜினிக்கு எதிரிகள் யாரும் இல்லை அவருடைய தீவிர வெறியர்களே எதிரிகள் என்ற நிலைமைக்கு ஆக்கிடாதீங்க

  இந்த கமெண்டை போடுவது உங்கள் விருப்பம்.

  BUT தலைப்பை மட்டும் மாற்றி விடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *