BREAKING NEWS
Search

பாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு!

‘ஏன்டா.. தவறு எனத் தெரிந்த பின் ஒருத்தர் தன் கருத்தை மாத்திக்கவே கூடாதா?

பாஜகவுக்கு ஆதரவான ரஜினி ரசிகர்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் தான் ரஜினிகாந்தின் நேற்றைய பேட்டியை பாஜகவுக்கு எதிரானதில்லை என்று சால்ஜாப்பு சொல்லியும் வருகிறார்கள். ரஜினிகாந்த் தனது அரசியல் பாதையை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, சாமானிய மக்களுக்கானதாக தீர்மானித்து விட்டார்

சென்னை : ரஜினிகாந்தை பாஜக தான் இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒரிரு வரிகள் மூலம் முடிவு கட்டியுள்ளார் ரஜினிகாந்த். இன்று நேற்றல்ல, திரையுலகுக்கு வந்த நாள் முதலாகவே அடிப்படையில் அவர் ஒரு ஆன்மீகவாதி. தனது கடவுளுக்கு மதம் இல்லை என்று 25 ஆண்டுகளுக்கு முன்னதாக பகிரங்கமாக அறிவித்தவர் ரஜினிகாந்த். தூய்மையான சாதி மத சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று அதை ஆன்மீக அரசியல் ஆக அறிவித்தார்.

அன்று முதலாகவே பாஜகவின் பினாமியாகவே ரஜினிகாந்தை எதிர்த்தரப்பு சித்தரித்து வருகிறார்கள். நேற்றைய பேட்டியில் இரண்டு விஷயங்களை ரஜினிகாந்த் தெளிவு படுத்தியுள்ளார். முதலாவதாக, டிமானிடைசேஷன் நடைமுறைப்படுத்தப் பட்டது சரியில்லை. விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம் என்று அதை விவாதப் பொருளாக்கி உள்ளார். கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் உடனடியாக ட்வீட் மூலம் ஆதரவு தெரிவித்தார் ரஜினிகாந்த்.

ஆனால், அதன் மூலம் ஏழை எளிய மக்களின் சேமிப்புக்கு ஆபத்து நேர்ந்ததையும், ஏடிஎம் வாசலில் மக்கள் உயிரை விட்டதும் ரஜினிகாந்த் மனதை வெகுவாகவே பாதித்துள்ளது. குஜராத்தில் அமித் ஷாவின் பிடியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் கருப்புப் பணம் மாற்றப்பட்டதும், அறிவிப்புக்கு முன்னதாகவே புதிய இரண்டாயிரம் ரூபாய்களின் புழக்கமும் ரஜினிகாந்தை வெகுவாகவே பாதித்துள்ளது. அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்து விட்டேனே என்று புழுங்கி இருக்கிறார். சரியான நேரத்தில் தெளிவு படுத்தவும் முடிவு செய்தாராம்.

நேற்றைய செய்தியாளர் கேள்வி மூலம் அமல்படுத்தப் பட்ட விதம் சரியில்லை என்று கூறினாலும், மீண்டும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் தரப்பிலிருந்து முழு விளக்கம் தர விரும்புவதாகவே தெரிகிறது. எஸ்.வி. சேகர், ஆர்.ஜே.பாலாஜி போலெல்லாம் ரஜினிகாந்த் பாஜகவுக்கோ பிரதமர் மோடிக்கோ வீடியோ மூலம் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று உடான்ஸ் விடவும் இல்லை. மனப்பூர்வமாக கருப்புப் பணம் ஒழிந்து விடாதா என நம்பியிருக்கிறார் போலும்.

இரண்டாவதாக, பாஜக ஆபத்தானதா என்ற கேள்வி, அவங்க அப்படி சொன்னாங்கன்னா உண்மையாத்தான் இருக்கனும் என்று பதில் சொல்லியிருக்கிறார். தவிர்க்க விரும்பினால், “நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லி விட்டுப் போயிருக்கலாம். அப்படி அவர் அடிக்கை “நோ கமெண்ட்ஸ்” சொல்லுபவர் தான். இந்தக் கேள்விக்கு அப்படிச் சொல்லாமல், எதிர்க்கட்சியினரின் கருத்தை ஆமோதித்துள்ளார். சந்திரபாபு நாயுடு விடம் தொடர்பில் இருந்து வருகிறார் என்பதையும் யூகிக்க முடிகிறது

அதற்காக ஒரேயடியாக அவர்களுக்கு ஜால்ரா அடிக்கவும் செய்யவில்லை. அப்படிச் செய்தால் அந்த அணியில் உள்ளவர்களின் தவறுகளுக்கும் சேர்த்து அங்கீகாரம் கொடுத்தது போலாகிவிடும் என்பதை உணர்ந்தே உள்ளார் போலும். ஒரே நாளில் பாஜகவுக்கு எதிரான தனது இரண்டு நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

மக்களின் மன ஓட்டத்தையொட்டியே அவரது அசைவுகளும் இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டார் என்று ரஜினியின் சகோதரர் சமீபத்தில் தான் கூறியிருந்தார். அதைத் தான் ரஜினிகாந்தின் பேட்டியும் கூறியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவான ரஜினி ரசிகர்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் தான் ரஜினிகாந்தின் நேற்றைய பேட்டியை பாஜகவுக்கு எதிரானதில்லை என்று சால்ஜாப்பு சொல்லியும் வருகிறார்கள். ரஜினிகாந்த் தனது அரசியல் பாதையை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, சாமானிய மக்களுக்கானதாக தீர்மானித்து விட்டார் எனத் தெரிகிறது.

– ஆர்டிஎக்ஸ்
One thought on “பாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு!

  1. Subash

    Envazhi ena thidirunu bjp la irukura rajini fans nu solla arrambichutinga . Engaluku santhosham thaan thalaivar bjp kooda serntha . Congress la irukura rajini fans ku yen kovam varuthu . Above post thalaivar speech ah fake edit panna maathiri theriyuthu same as media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *