சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
வயது மூப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது கருணாநிதியின் மரணம். அவரது மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.
அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
— Rajinikanth (@rajinikanth) August 7, 2018
– என்வழி