BREAKING NEWS
Search

அன்று ரஜினி பட்ட கஷ்டங்களும் கடைப்பிடித்த எளிமையுமே அவரை சூப்பர் ஸ்டாராக்கின! – தெலுங்கு தயாரிப்பாளர்

அன்று ரஜினி பட்ட கஷ்டங்களும் கடைப்பிடித்த எளிமையுமே அவரை சூப்பர் ஸ்டாராக்கின! – தெலுங்கு தயாரிப்பாளர்

hqdefault

ரம்ப நாட்களில், படப்பிடிப்பில் ரஜினிக்கு பசித்தால் கூட யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவரே 5 பைசாவுக்கு மக்காச்சோளம் வாங்கி சாப்பிட்டுக் கொள்வார். அந்த அளவு துயரமான நாட்களைக் கடந்து வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என தெலுங்குத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் முன்னாள் எம்பியுமான ஹரிராம ஜோகையா, ரஜினியின் ஆரம்ப கால நிலை, அவர் பட்ட சிரமங்கள் குறித்து நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில், “அது 1977-ம் ஆண்டு. ரஜினி நடிக்க வந்து ஓரளவு புகழ் பெற்றிருந்த நேரம். தெலுங்கில் சிலக்கம்மா செப்பன்டி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இதுதான் அவர் முதன் முதலில் நாயகன் வேடத்தில் நடித்த படம். இந்த படம்தான் பிறகு தமிழில் கமல் நடிக்க நிழல் நிஜமாகிறது என்ற பெயரில் ரீமேக் ஆனது.

maxresdefault (1)

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்படிப்பில் யாரும் அவரை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்.

சிலக்கம்மா செப்பன்டி படப்பிடிப்பில் ரஜினியை நீண்ட நேரம் அவரை காக்க வைத்தனர். இத்தனைக்கும் அவர்தான் படத்தின் ஹீரோ. மற்ற நடிகர், நடிகைகள் காட்சிகளைத்தான்தான் முதலில் படமாக்கினர். கடைசியாக படப்பிடிப்பு முடியும் போது தான் ரஜினியை அழைத்து அவர் காட்சியை எடுத்தனர்.

ஆனாலும் ரஜினி பொறுமை காத்தார். படப்பிடிப்பை விட்டு நகராமல் மற்றவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்.

திடீரென அவருக்குப் பசி எடுக்கும். செட்டில் அவருக்கு அந்த நேரத்துக்கு யாரும் உணவு தர மாட்டார்கள். அவரும் அதை எதிர்ப்பார்க்க மாட்டார். உடனே எழுந்து போய் கோதாவரி ஆற்றங்கரை ஓரத்தில் சுட்டு விற்பனைக்காக வைத்து இருக்கும் மக்கா சோளத்தை 5 பைசா கொடுத்து வாங்கிச் சாப்பிடுவார்.

பல நாட்களில் அதுதான் அவரது உணவாக இருந்தது. அப்போது ரஜினியை பார்த்தவர்கள், நான் உள்பட, அவர் எதிர்காலத்தில் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நினைத்திருக்கவே இல்லை.

rajinikanth-isl-feat

ஆனால் அந்த கஷ்டங்களையெல்லாம் தனது முன்னேற்றத்துக்கான படிகளாக மாற்றினார். இப்போதும் அந்த நாட்களை அவர் மறக்கவும் இல்லை. வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!”, என்றார்.

77 வயதாகும் ஹரிராம ஜோகய்யா காங்கிரஸ் சார்பில் நரசாப்பூர் தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலகம்மா செப்பின்டி படத்தைத் தயாரித்தவரும் இவர்தான்!

என்வழி
4 thoughts on “அன்று ரஜினி பட்ட கஷ்டங்களும் கடைப்பிடித்த எளிமையுமே அவரை சூப்பர் ஸ்டாராக்கின! – தெலுங்கு தயாரிப்பாளர்

 1. ananth

  சும்மாவா வந்தது சூப்பர் ஸ்டார் பட்டம் !!! அவருடன் நமது பயணம் மிகவும் உணர்ச்சி பூர்வமானது

 2. குமரன்

  5 பைசாவுக்கு மக்காச் சோளம் சாப்பிட்டு நடித்த ஆரம்பம்.
  உழைத்து வந்தது இந்த மக்கள் ஆதரவு. இதை எவராலும் அழிக்க முடியாது.

  ஆனால், இன்றோ கத்திக் கத்தியே சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டோம் என்று வெட்டிக் கத்தல் கத்தும் கூட்டம்.

  விந்தையான உலகம்.

 3. chozhan

  //பாரதிய ஜனதா கட்சி நடிகர் ரஜிகாந்தை நம்பியில்லை: தமிழிசை சவுந்தர்ராஜன்// சீ சீ இந்த பழம் புளிக்கும், சந்தானம் ஸ்டைலில் சொல்லிபார்க்கவும் :- உன்னை யாரும் கேட்டாங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *