BREAKING NEWS
Search

தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

vidyu

சிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கே கூட தலைவர் ரஜினியைச் சந்திப்பதென்பது ஒரு அதிகபட்ச ஆசை.. அல்லது கனவு என்றாலும் மிகையல்ல.

திரையுலகில் நுழைந்து ஒரு அடையாளம் பெற்றதும், சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது பலரது ஆசை.

இப்போதைய நடிகர்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், சந்தானம், சிவா போன்றவர்கள் தலைவர் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

vidyu2

நடிகைகளும் அப்படித்தான். சமீப காலமாக நகைச்சுவைப் பாத்திரங்களில் மின்ன ஆரம்பித்திருப்பவர் நடிகை வித்யுலேகா. நீதானே என் பொன் வசந்தம், வீரம் போன்ற படங்களில் சந்தானத்தின் ஜோடியாக வருவாரே.. அவர்தான் இந்த வித்யுலேகா. நடிகர் மோகன் ராமின் மகள்.

சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் வித்யு லேகா. அவருக்கு ராகவேந்திரர் படத்தை பரிசாகத் தந்து வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

வித்யுலேகாவுடன் அவர் தந்தை மோகன் ராமும் சென்று ரஜினியைச் சந்தித்தார்.

மேலும் படங்கள்:

-என்வழி




3 thoughts on “தலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா

  1. srikanth1974

    தலைவரோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

    சிம்பு ஆரம்ப நாட்களில் தன்னை ஓர் ரஜினி ரசிகராக காட்டிக்கொண்டார்
    என்பதே உண்மை,

  2. மிஸ்டர் பாவலன்

    நண்பர்களே.. பிரபல திரைப்பட நடிகை தேவயானி (தெனாலி,
    பஞ்ச தந்திரம் புகழ்) சர்ச் பார்க் பள்ளியில் ஆசிரியை ஆக
    சேர்ந்துள்ளார் என ஒரு வதந்தி உலாவி வருகிறது. ‘கோலங்கள்”
    டெலி சீரியலில் மிகச் சிறப்பான நடிப்பாற்றலை அவர் காட்டி
    இருந்தார்.. அவர் இன்று பள்ளி ஆசிரியை ஆகி இருப்பது மிகவும்
    பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே சர்ச் பார்க் பள்ளியில் மாண்புமிகு
    மக்களின் முதல்வர், அம்மா அவர்கள், படித்து பெருமை சேர்த்ததும்
    குறிப்பிடத் தக்கது. நன்றி..

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. குமரன்

    வித்யுலேகாவிடம் மோஹன்ராமின் ஜாடை அப்படியே இருக்கிறது.

    பாரம்பரியம் மிக்க குடும்பம். வக்கீல் வி.பி.ராமன் எம்.ஜி.ஆரின் வக்கீல். புகழ்பெற்ற வக்கீல். அவரை எம்.ஜி.ஆர் அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமித்தார். அந்தப் பதவிக்கு அவரால் மெருமை கிடைத்தது எனும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார்.

    அவரது மகன்கள் மோஹன்ராமும், பி.எஸ்.ராமனும். பிஎஸ்.ராமன் சிறந்த வழக்கறிஞர். கலைஞர் அவரைத் அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமித்தார்! பி.எஸ். ராமனின் மகள்தான் செல்வராகவனின் மனைவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *