BREAKING NEWS
Search

ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் சூப்பர் ஸ்டார்!

ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் சூப்பர் ஸ்டார்!

rajini-at-KOCHADAYAN-1நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி பங்கேற்பதில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி.

ஆனால் தவிர்க்க முடியாத நண்பர்களின் அழைப்பை கவுரவிக்கும் வகையில் திடீரென வருகை தந்து அசத்துவது சூப்பர் ஸ்டார் வழக்கம்.

நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பால்ரூமில் ஒரு பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் திரையுலக மறுபிரவேசத்தைக் கொண்டாடும் வகையிலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா.

ரஜினியையும்  விருந்துக்கு அழைத்திருந்தனர். விருந்து நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் மின்னலாய் வந்தார் ரஜினி. விருந்துக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், விவேக், பிரபு, ஜெயம் ரவி, பிசி ஸ்ரீராம், ராதிகா, லிஸி, பூர்ணிமா போன்றவர்களுக்கு ஹாய் சொன்னவர், ஸ்ரீதேவியிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினியுடன் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இருவரும் 25 படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-என்வழி
23 thoughts on “ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் சூப்பர் ஸ்டார்!

 1. kabilan

  https://www.facebook.com/ActorRajiniyaiThamilNaaddaiVidduViradiAdikumSankam. என்வழி நன்பற்கள் அனைவர்க்கும் எனது வேண்டுகோள்,facebookil இந்த பக்கத்தை பார்த்ததும் எனக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை,நான் report spam குடுத்துருக்கேன்.facebook அக்கௌன்ட் வெச்சு இருக்கும் தலைவர் ரசிகர்கள் அனைவரும் இதை செய்து,இந்த பக்கத்தை facebookil இல்லாமல் பண்ணுமாறு கேட்டுகொள்கிறேன்

 2. Deen_uk

  @கபிலன்…
  சேற்றில் கால் வைத்தால் நமக்கு தான் அசிங்கம்.மனிதர்கள் நடத்தும் இணைய தளங்களில் மட்டுமே உலவலாம்…சூரியனை பார்த்து குரைப்பது குரைக்கத்தான் செய்யும்..குரைப்பது குரைக்கட்டும்…நாம நம்ம வேலைய பார்ப்போம் கபிலன்! டோன்ட் வொர்ரி.

 3. sidhique

  சேற்றில் கால் வைத்தால் நமக்கு தான் அசிங்கம்.மனிதர்கள் நடத்தும் இணைய தளங்களில் மட்டுமே உலவலாம்…சூரியனை பார்த்து குரைப்பது குரைக்கத்தான் செய்யும்..குரைப்பது குரைக்கட்டும்…நாம நம்ம வேலைய பார்ப்போம் கபிலன்! டோன்ட் வொர்ரி.

 4. srikanth1974

  எனது அருமை சகோதரர் கபிலனுக்கு;
  பொதுவாக நம் அன்புத் தலைவர் அவர்களுக்கு இப்படி ஒரு எதிர்ப்பும்,விமர்சனமும்,கிளம்பினால்? கூடவே மிகப் பெரிய புகழ் ஒன்றும் காத்திருக்கிறது அவருக்கு என்றே பொருள் .இது ஏதோ தாங்கள் மன ஆறுதலுக்காக கூறுகிறேன் என்று நினைக்கவேண்டாம்.இந்த விமர்சனங்களையும்,எதிர்ப்புகளையும்,தலைவர் எவ்வாறுக் கையாண்டு மீண்டு வரப்போகிறார் என்பதையும் இந்தப் பேச்சுக்களும்,ஏச்சுக்களும்,எப்படிப் பஞ்சாய் பறக்கின்றன என்பதையும்,பேசியவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.அப்போது நீங்கள் என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.அந்த சந்தோஷ செய்தியை என்னுடைய cell number க்கு நீங்கள் call பண்ணி உற்சாகமாகக் கூறுங்கள். என்றுமே நம் தலைவருக்கு வெற்றி நிச்சயம் தலைவர தப்பா பேசினவங்க நாட்ட விட்டு ஓடப் போவதும் நிச்சயம்.
  நன்றி என்றும் உன் அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.

 5. kabilan

  .மனிதர்கள் நடத்தும் இணைய தளங்களில் மட்டுமே உலவலாம்…….அருமையான வரிகள் Deen _uk ,இருந்தாலும் மனசு கேக்க மாட்டேன்கிது சார்.இளங்கோ சார்,நீங்க எந்த சைடு பேசுரின்கனே தெரியல.தலைவர் ரசிகர் நடத்தும் தளத்திற்கு வரும் ,நீங்கள் மட்டுமே தலைவர் ரசிகர் இல்லை போல

 6. srikanth1974

  deen uk அவர்களே கொஞ்ச நாள் முன்பு நம் அன்புத் தலைவர் மீது உங்களுக்கு இருந்த வருத்தம் தற்பொழுது இல்லை என்பதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இது என்றென்றும் தொடரவேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி .
  என்றும் அன்புடன்
  ஸ்ரீகாந்த்.

 7. kabilan

  ஸ்ரீகாந்த் அண்ணா.நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு பலிக்கவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்

 8. மிஸ்டர் பாவலன்

  // அரசியலுக்கு இவர் தகுதியற்றவர் என்பதே இன்றைய நிலைபாடு!
  …..அவருக்கு திருத்தி கொள்ள இன்னும் சந்தர்பம் உள்ளது // (இளங்கோ)

  ரஜினி ரசிகர்கள் மனதை புண் படுத்துவது போல் இந்த வரிகள் உள்ளது.
  கேப்டனை நீங்கள் பாராட்டலாம். ஆனால் தலைவரை இப்படி
  தாக்கி எழுதி இருக்க வேண்டாம். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 9. Deen_uk

  @கபிலன்..
  ////.மனிதர்கள் நடத்தும் இணைய தளங்களில் மட்டுமே உலவலாம்…….அருமையான வரிகள் Deen _uk ,இருந்தாலும் மனசு கேக்க மாட்டேன்கிது சார்.////
  நம் தலைவரின் ரசிகர்கள் அனைவரும் பக்குவப்பட்ட பண்பாளர்கள் கபிலன் சார்! இவர்களுக்கு அரவணைக்கவும் தெரியும் ,எதிர்க்கவும் தெரியும்..!! அதை படிக்கும் தலைவர் ரசிகர் அல்லாதவர்களுக்கு கூட மனது கேட்காது,அதை எழுதியவன் மேல் அனைவருக்கும் கோபம் தான் வரும்..அதே நேரம் அவனின் அறியாமையும் துவேச வெறியும் அதில் உள்ளது.அதை எதிர்த்தால் மேலும் அவனுக்கே விளம்பரம் செய்ததாக அமையும்..எதிர் கருத்து வெளியிட்டால் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..இன்னொரு சிம்பிள் விஷயம்,யாரும் சீக்கிரம் வெளியுலகுக்கு தெரிய விரும்பினால்,தலைவரை தவறாக பேசினால் போதும்.உலகமே கவனிக்கும்….தலைவர் பெயரை உபயோகித்து அட்ரஸ் இல்லாத கட்சி கூட இன்று ஒரு கட்சியாக உள்ளதை நீங்கள் அறிவீர்கள்!! அவ்வப்போது பவர் ஸ்டார் என்ற பெயர் வைத்துக் கொண்டவர் தலைவர் பெயரை உபயோகிப்பது கூட இந்த டெக்னிக் தான்…டேக் இட் ஈசி கபிலன் சார்!!
  @ஸ்ரீகாந்த் …
  ///deen uk அவர்களே கொஞ்ச நாள் முன்பு நம் அன்புத் தலைவர் மீது உங்களுக்கு இருந்த வருத்தம் தற்பொழுது இல்லை என்பதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இது என்றென்றும் தொடரவேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ///
  நான் முன்பே சொன்னது போல எனது கடைசிக்காலம் வரை தலைவரே எனக்கு தலைவர் ஸ்ரீகாந்த் சார்! எனது குடும்பத்தில் ஒருவராக அவரை நினைப்பதால் உரிமையுடன் வருத்தம் வெளியிட்டு இருந்தேன்,கோபமாக அல்ல!!! நம் குடும்பத்தில் உள்ள குழந்தை சிறு தவறு செய்தால் உரிமையுடன் பேசுவதில்லையா? அதே போல் தான்!! தலைவர் எப்போதும் எங்கள் வீட்டு குழந்தை!! மேலும் நீங்கள் சந்தோசப்பட்டது எனக்கும் சந்தோசம்..!! வாழ்த்துக்கள் மற்றும் என்னை புரிந்து கொண்டதற்கு நன்றிகள்..

 10. Babu

  நண்பர் இளங்கோ அவர்களின் கருத்தே என் மனதில் மட்டுமல்ல
  தமிழக மக்கள் மனதிலும் இருக்கிறது. நான் அவர் கடிதத்தை
  சுமார் பத்து முறை படித்து விட்டேன் ஒவ்வொரு வரியிலும்
  உண்மை உள்ளது

 11. srikanth1974

  மிகப் பெருந்தன்மையோடு எனது கருத்தை ஏற்றுக்கொண்ட சகோதரர் திரு.deen .uk அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நமது நட்பும்,தொடரவேண்டும் என்றும் தாங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.என்றும் அன்புடன் ஸ்ரீகாந்த்.

  மேலும் நமது தலைவரின் ரசிகர்களுக்காக ஆதரவுக்கருத்து வெளியிட்ட திரு.மிஸ்டர் பாவலன்.அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  என்றும் அன்புடன்
  ஸ்ரீகாந்த்.

 12. srikanth1974

  உங்கள் அன்புப் பிராத்தனை நிச்சயம் நிறைவேறும் .கபிலன்.
  என்றும் உன் அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.

 13. மிஸ்டர் பாவலன்

  ஸ்ரீகாந்த் அவர்களே:

  “இயக்குனர் இமயம்” என்ற பாராட்டு பெற்ற K. பாலச்சந்தரின்
  திரைப்படப் பள்ளியின் முதல் மாணவர்களாக கமல்-ரஜினி இருவரும்
  பல சிறப்புக்களையும், சாதனைகளையும் குவித்து வருகிறார்கள்.
  இவர்களில் “ரஜினி first, கமல் second” என பல ரசிகர்களும்,
  “கமல் first, ரஜினி second ” என பல ரசிகர்களும் ranking செய்தோ,
  இல்லை வேற பட்டியல் போட்டு விவாதம் செய்தோ வரலாம்.
  அதில் நான் தலையிடுவதில்லை. “Coffee with Anu” நிகழ்ச்சியில்
  நடிகர் சோ – கமல், ரஜினி இவர்கள் இருவரில் உங்களுக்கு யார்
  நடிப்பு பிடிக்கும்? – என்ற கேள்விக்கு – “ஏன் ஒருவரை மற்றும்
  தேர்வு செய்ய வேண்டும்? எனக்கு இருவர் படங்களும் பிடிக்கும்,
  இருவரும் சாதனையாளர்கள்” என்றார். அதே நிலை தான் நானும்.
  கமல்ஹாசனை நான் அதிகம் பாராட்டி இருக்கலாம். ஆனால் நான்
  ரஜினிகாந்த் அவர்களை தாழ்த்தியோ, குறை கூறியோ, இதுவரை
  எழுதியதில்லை. நான் அவர்கள் இருவர் படங்களையும் ரொம்ப
  ஆண்டுகளாக பார்த்து, பாராட்டி, வருகிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 14. mukesh

  //இருபினும் .. ரஜினியின் மீது நடுநிலையாளர்களுக்கு (பொதுமக்களுக்கு) உள்ள மரியாதையை … அவரின் அரசியல் நிலை பாட்டால் குறைந்து போய் உள்ளது உண்மை! //

  இப்படியே சொல்லி சந்தோஷ பட்டு கொள்ளுங்கள் இளங்கோ….

  //ஆனால் … அவரின் பொது வாழ்க்கை பற்றி பேசும் பொழுது அவர் இதுவரைக்கும் பெரிதாக செய்ய நினைகாததில் வெறுப்பு உண்டானது!//

  சரி..அவரை பற்றி இனி மேல் பேச மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ளுங்களேன்..

  //அவர் ஒரு வேலை இனிமேல் அரசியலுக்கு வர நினைத்தாலும் கடினம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது! //

  அடிக்கடி மக்கள்..மக்கள்..என்று சொல்கிறீர்களே..நீங்கள் மட்டும்தான் மக்கள் பிரதிநிதியோ…

  //கோடிகளில் பணத்தை அள்ளி கொண்டார் … என்ற எண்ணம் பலரிடத்தில் உள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்!//

  தலைவர் மேலே எவ்வளவு வெறுப்பு உங்களுக்கு என்பது உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது…

  //மாறாக குடும்பம் படம் எடுக்க அரம்பித்து…. அவரை வைத்து மேலும் பணம் சம்பாதிகேவே செய்கின்றது!//

  அவர் குடும்பம் அவரை வைத்து பணம் சம்பாதிக்காமல் வேறு என்ன செய்வார்கள்….போய் உங்க புள்ள குட்டிங்கள பார்த்து அறிவுரை சொல்லுங்க இளங்கோ…

  //இவரின் வாழ்க்கை வரலாற்றில்… இந்த மாதிரியான பொது மக்களின் கருத்து ஒரு களங்கமாகவே அமையும்! //

  பார்ரா….பொது மக்களின் பிரதிநிதி இளங்கோ…பேசாம நீங்கள் தேர்தல்லே நின்னு CM ஆயிடுங்களேன்….

 15. Raj

  திரு இளங்கோ அவர்களே,

  நீங்கள் கூறியபடி ஒரு சில மக்கள் ரஜினி பற்றி விமர்சித்து இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அதுவே 8 கோடி தமிழ் மக்களின் கருத்து ஆகாது. நான் கூறிய அந்த ஒரு சில மக்கள் என்பவர்கள் அவருடன் கூட இருந்தே குழி பறிப்பவர்கள். அவர்கள் யார் என நான் சொல்ல தேவையில்லை. கடைசியாக ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். ரஜினி படம் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை. அதே போல் தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக PRESS MEET வைத்து ஓ என ஒப்பாரி வைத்ததும் இல்லை.

 16. srikanth1974

  திரு.மிஸ்டர் பாவலன் அவர்களுக்கு;
  நான் உங்களுக்கு நன்றி சொன்னது எந்த வகையிலும் தங்களை கேலி செய்யும் எண்ணத்தில் அல்ல என் உள்ளத்தில் இருந்து மனசார சொன்னது.என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.என்றும் உங்கள்
  அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *