BREAKING NEWS
Search

விசாரணை தமிழில் ஒரு உலக சினிமா… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமிதம்

விசாரணைக்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!

வெற்றிமாறனின் விசாரணை படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்தப் படத்தை தமிழில் வெளியாகியுள்ள உலக சினிமா என பாராட்டியிருக்கிறார்.

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் விசாரணை. ஆட்டோ ஓட்டுநர் எம்.சந்திரகுமாரின் லாக் – அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.

அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.

வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விசாரணை படத்தைப் பார்த்து படக்குழுவினரை குறிப்பாக வெற்றிமாறன்- தனுஷ் இருவரையும் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

விசாரணை குறித்து ரஜினி “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.

இப்படத்தைத் தயாரித்த  வெற்றிமாறன் – தனுஷ் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் வெற்றிமாறன்-தனுஷ் உள்ளிட்ட விசாரணை படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். ரஜினியின் பாராட்டுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களின் ட்வீட்..

https://twitter.com/dhanushkraja/status/695138031263547392

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நாளை உலகம் முழுவதும் விசாரணை வெளியாகிறது,

-என்வழி




3 thoughts on “விசாரணை தமிழில் ஒரு உலக சினிமா… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமிதம்

  1. anbudan ravi

    தலைவரின் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு !

    அன்புடன் ரவி.

  2. srikanth1974

    திரு.வெற்றிமாறன் அவர்களுக்கும், திரு.தனுஷ்.அவர்களுக்கும்,
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *