BREAKING NEWS
Search

ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது! – தலைவர் ரஜினிகாந்த்

சென்னை: குடிநீர் பஞ்சத்தால் அவதியுறும் மக்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச குடிநீர் விநியோகம் செய்து வரும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மனமார பாராட்டுத் தெரிவித்துள்ளார் தலைவர் ரஜினிகாந்த்.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியும், தண்ணீர் பஞ்சமும் இப்போது நிலவுகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, மக்களின் தண்ணீர்த் தேவையை முடிந்தவரை தீர்த்து வைக்குமாறு தனது மக்கள் மன்றத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார் தலைவர் ரஜினிகாந்த்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு மாவட்டங்களில் லாரிகள், ட்ராக்டர்களில் குடிநீரை இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிய இந்தப் பணி, இப்போது தமிழகம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் சொந்த செலவில் இதனைச் செய்து வருகிறார்கள். இந்த வாரம் வேலூர் மாவட்டம் முழுவதற்கும் குடிநீர் விநியோகம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி. அரசு கூட செய்ய முடியாத அளவுக்கு, எங்கெங்கே தண்ணீர் தேவையோ அங்கெல்லாம் தேடிச் சென்று குடிநீரை கேன்களிலும், பிற தேவைகளுக்கான நீரை லாரி டேங்கர்களிலும் வழங்கி வருகின்றனர்.

இந்த தகவல்கள் எல்லாம் தர்பார் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்துக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வந்தது. அவரும் தனது பாராட்டுகளை ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தெரிவித்து வந்தார்.

நேற்று மும்பையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம், மக்கள் மன்றத்தினரின் இந்த அரிய செயல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார் பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது,” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *