BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஆமீர்கான் – ஷங்கர்… இணைவது நிஜம்தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஆமீர்கான் – ஷங்கர்… இணைவது நிஜம்தானா?

endhiran-high-quality-wallpapers-2

ங்கர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆமீர்கானும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரஜினியும் ஷங்கரும் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர். இது அடுத்த படத்துக்கான சந்திப்புதான் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதில் முதலில் ரஜினி நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ரஜினியின் உடல் நிலை காரணமாக அப்போதைக்கு அந்தப் பட முயற்சி தள்ளிப் போனது.

பின்னர் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்தான் நடிக்கப் போகிறார். அவரும் ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர் என செய்தி வந்தது.

இப்போது ரஜினியும் ஆமீர்கானும் இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு சாதனையாளர்களும் இணைந்தால் படத்தின் பட்ஜெட் 200 கோடியைத் தாண்டினாலும் கவலைப்படத் தேவையில்லை. படத்துக்கு உலக அளவில் பெரும் வசூலும் குவியும் என்பதால், இருவரையும் இணைப்பதில் ஷங்கர் தீவிரம் காட்டுகிறாராம்.

Rajini

எந்திரன் 2-ம் பாகத்தில் நிறைய கிராபிக்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் உள்ளதால், பணம் ஏராளம் தேவைப்படும். எனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு செலவழித்து இந்தப் படத்தை எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தேவையான பட்ஜெட்டை ரஜினி – ஆமீர்கான் இணை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமும் இல்லை.

ரஜினி – ஆமீர் இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு பாலிவுட் மீடியாவில் பரபரப்பு செய்தியாகவும் உள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ரஜினி, ஷங்கர், ஆமீர்கான் மூவருமே இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

-என்வழி
9 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ஆமீர்கான் – ஷங்கர்… இணைவது நிஜம்தானா?

 1. Vazeer Kuwait

  என்னைக் கேட்டால் ரஜினி தனியாகவே நடித்தல் மிக நன்று. அல்லது ரஜினி கமல் ஷங்கர் கூட்டணி அருமையாக இருக்கும். இது பல நாள் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களின் கனவும் கூட.

 2. rajagopalan

  Shankar takes minimum 2 years … cant wait to see thalaivar back in action for that much long…this year one thalaivar movie should release…

 3. rajagopalan

  dont want amir khan or no body. thalaivar movie should be only by thalaivar…so i dont want this news to be true…

 4. powerstart

  அடுத்த ரா ஒன் ஆகிடாம இருந்தா சரி பாலிவூட்

 5. arulnithyaj

  நன்றி அண்ணா. என்னாச்சு அண்ணா உங்களுக்கு ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லை உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையோ என்று மனது கவலை கொள்கிறது நம்புகிறேன் அண்ட் வேண்டுகிறேன் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வரகூடாது endru.. என்றும் உங்கள் தம்பி அருள்
  ______________

  ஒன்றுமில்லை தம்பி அருள். நிறைய அலுவலக வேலை. அதனால் கொஞ்சம் இடைவெளி.

  -வினோ

 6. RADHARAVI

  தலைவர் படம் தான் தலைவருக்கு போட்டி. தலைவா மீண்டும் கலக்குங்கள்.
  தெய்வத்தை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் பக்தன்.

 7. Manoharan

  2016 தேர்தல் ரஜினிக்கு கடைசி வாய்ப்பு. சொல்லப் போனால் 1996ஐ விட இது மிக மிக சரியான நேரம்…அதைவிடுத்து அவர் சினிமாவில் தொடர்வாரா என்பது தெரியவில்லை…முதன் முறையாக தமிழக தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் வரப்போகிறது. திமுக ஏறக்குறைய காலி. ஜெ இல்லாத அதிமுக ஒன்று இல்லாத சைபர் மாதிரி. வேறு எந்த பிராந்திய கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. தேசிய கட்சிகள் என்றாலே அது தமிழர் விரோத கட்சிகள் என்று ஆகிவிட்டது. என்ன செய்யப்போகிறார் ரஜினி. 65 வயதில் அவர் ஆட்சியில் அமர்ந்தால் கூட முழுமையான மாற்றங்கள் வர பத்து ஆண்டுகள் ஆகும். அப்போது அவர் வயது 75 ஆக இருக்கும். என்ன செய்யப் போகிறார் ரஜினி ?

 8. Manoharan

  2016 தேர்தல் ரஜினிக்கு கடைசி வாய்ப்பு. சொல்லப் போனால் 1996ஐ விட இது மிக மிக சரியான நேரம்…அதைவிடுத்து அவர் சினிமாவில் தொடர்வாரா என்பது தெரியவில்லை…முதன் முறையாக தமிழக தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் வரப்போகிறது. திமுக ஏறக்குறைய காலி. ஜெ இல்லாத அதிமுக ஒன்று இல்லாத சைபர் மாதிரி. வேறு எந்த பிராந்திய கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. தேசிய கட்சிகள் என்றாலே அது தமிழர் விரோத கட்சிகள் என்று ஆகிவிட்டது. என்ன செய்யப்போகிறார் ரஜினி. 65 வயதில் அவர் ஆட்சியில் அமர்ந்தால் கூட முழுமையான மாற்றங்கள் வர பத்து ஆண்டுகள் ஆகும். அப்போது அவர் வயது 75 ஆக இருக்கும். என்ன செய்யப் போகிறார் ரஜினி ? இதைபற்றி நீண்ட பதிவு எழுத நிறைய இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *