BREAKING NEWS
Search

50வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

50வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

Rajini-shankar-3

சென்னை: ராஜ் கபூர், சுபாஷ் கய்க்குப் பிறகு இந்தியாவின் ஷோமேன் என்று வர்ணிக்கப்படும் இயக்குநர் ஷங்கருக்கு இன்று 50 வது பிறந்த நாள்.

இதனையொட்டி, அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜென்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஷங்கர். முதல் படத்தையே அவர் பிரமாண்டமாக இயக்கி, பிரமாண்ட வெற்றியைப் பெற்றார்.

ஒரு ஜனரஞ்சகப் படத்தை எப்படி இயக்குவது என்பதில் ஷங்கர் நிபுணத்துவம் பெற்றவர். இதுவரை அவர் இயக்கத்தில் தோல்விப் படம் என்று வந்தது இந்தியில் வெளியான நாயக் மட்டுமே. பாய்ஸ் படம் கடும் விமர்சனங்களால் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருந்தால் பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என அடிக்கடி சொல்வார் ஷங்கர்.

இயக்குநர் – தயாரிப்பாளர்

ஒரு இயக்குநராக இதுவரை அவர் 11 படங்களை இயக்கியுள்ளார். இப்போது அவர் விக்ரமை வைத்து இயக்கும் ஐ 12வது படமாகும். இவை அனைத்துமே பிரமாண்ட படங்களாகும். தயாரிப்பாளர்களுக்கு பெரும் செலவு வைக்கிறார் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டைப் பொய்யாக்க, தன் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தை சொந்தமாகவே தயாரித்தார், மிகப் பிரமாண்டமாக!

சிறு முதலீட்டில் 8 படங்களைத் தயாரித்தார் ஷங்கர். இவற்றில் 5 படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் அனந்தபுரத்து வீடு படத்தோடு தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

ரஜினியுடன்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆரம்பத்திலிருந்தே நல்ல நட்பில் இருப்பவர் ஷங்கர். அவரது ஜென்டில்மேன் தொடங்கி அனைத்துப் படங்களின் முக்கிய நிகழ்வுகளிலும் ரஜினி இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஷங்கர் வழக்கம்.

முதலில் இருவரும் இணையத் திட்டமிட்ட படம் முதல்வன். ஆனால் அரசியல் காரணமாக அந்தப் படத்தில் நடிக்கவில்லை ரஜினி.

MG_1763-copy

பின்னர் ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி – தி பாஸ் படத்தில் இருவரும் முதன்முதலில் இணைந்தனர். சிவாஜியின் பிரமாண்ட வெற்றி, இந்திய சினிமா வர்த்தகத்தில் புதிய மாறுதல்களைக் கொண்டு வந்தது. அதிக திரையரங்குகளில் வெளியிடும் பாணி இதிலிருந்தே தொடங்கியது.

எந்திரன் – தி ரோபோ சர்வதேச அளவில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இரு படங்களுமே ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படங்கள். தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் பெரிய ரேஞ்சுக்குக் கொண்டு சென்றவை. இன்றும் இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை எந்திரனுக்குதான் (செபி அளித்த தகவலின்படி ரூ 375 கோடிகள்).

இந்தியாவின் ஷோ மேன்

ஷங்கரின் படம் உருவாக்கத் திறமை, பிரமாண்ட படைப்புகள் இன்று அவரை இந்தியாவின் ஷோமேன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்துள்ளது. முன்பு பாலிவுட் ஜாம்பவான்கள் ராஜ்கபூர், சுபாஷ் கய் போன்றவர்களைத்தான் இப்படி அழைத்தனர். இன்று அந்த பாலிவுட்டே ஷங்கரை அப்படி அழைப்பது குறிப்பிடத்தக்கது (ஆனாலும் வட இந்திய சேனல்களுக்கு இதை ஒப்புக் கொள்ள மனமில்லை. தென்னிந்தியாவின் ஷோமேன் என அவை மாற்றிக் கொண்டது தனிக்கதை!).

50வது பிறந்த நாள் – ரஜினி வாழ்த்து

இன்று ஷங்கருக்கு வயது 50. பொன்விழா காணும் அவருக்கு திரையுலகமே வாழ்த்து தெரிவித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் விக்ரம் உள்பட பலரும் வாழ்த்தியுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தன் வாழ்த்துகளை ஷங்கருக்கு தெரிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்

 
5 thoughts on “50வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குநர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

 1. Raj

  @ ஜகன்
  விஜயும் அவன் அப்பனும் நம் தலைவரை எதிர்ப்பவர்கள். SAC நம் தலைவர் எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயந்து DMK ஆட்சி செய்த காலங்களில், ஒரு நடிகன் இனி முதலமைச்சராக கூடாது என்று பேசியவர்.

 2. Jegan

  Thalaivar ku yar support um thevai ilai, but theemai seitavargalukum nanmai seivpavar tan thalaivar..thalaivar kamal, ajith, sarathkumar ku elam support panirukrar…

 3. srikanth1974

  இயக்குநர் ஷங்கர்.அவர்களுக்கு எமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *