BREAKING NEWS
Search

புதுசா நிறைய பேர் வரணும் – புதுமுக நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

பிரபலங்களின் வாரிசுகள் களமிறங்கும் நாங்க… ரஜினி வாழ்த்து – ஸ்பெஷல் படங்கள்!

பிரபல பாடகர் மனோ, இயக்குநர் சந்தானபாரதி என 10 பிரபலங்களின் வாரிசுகள் ஒன்றாகக் களமிறங்குகின்றனர், நாங்க என்ற படத்துக்காக.

இந்தப் படத்தை செல்வா இயக்குகிறார். தலைவாசல், அமராவதி, பூவேலி, ரோஜாவனம், நான் அவனில்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வா. கே பாலச்சந்தரின் சீடர்களுள் ஒருவர்!

படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனைபேருமே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை சந்தித்து வாழ்த்துப் பெற விரும்பினார்கள்.

ரஜினியைச் சந்திக்க மனோ ஏற்பாடு செய்திருந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்ற ரஜினி, இயக்குநர் செல்வாவிடம் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதைக் கேட்டு, “நல்ல விஷயம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தெரியுது… நல்லா வரும். வாழ்த்துக்கள்,” என்று ஆசீர்வதித்துள்ளார்.

மேலும் நிறைய புதிய ஹீரோக்கள், புது நடிகர்கள் இன்டஸ்ட்ரிக்கு வரணும். அப்போதான் நல்லா இருக்கும் என்றும் வாழ்த்தினார் ரஜினி.

அத்தனை பேரையும் தனித்தனியாகக் கூப்பிட்டு படமெடுத்துக் கொள்ள வைத்ததில், இளம் கலைஞர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார்களாம்!

சந்தானபாரதியின் ஏற்பாட்டில் நடிகர் கமல்ஹாஸனை சந்தித்தும் ஆசி பெற்றுள்ளனர் இந்த வாரிசுகள்.

மேலும் படங்கள்:

-என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “புதுசா நிறைய பேர் வரணும் – புதுமுக நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

  1. kabilan

    வினோ அன்ன ஒரு தவறு ரோஜாக்கூட்டம் படம் இயக்குனர் சசி யால் இயக்கப்பட்டது
    ____________
    உண்மைதான். ரோஜாவனம், ரோஜாகூட்டமாகிவிட்டது. நன்றி கபிலன்.
    -வினோ

  2. Manoharan

    மைனா பார்த்த உடனே இரவு பத்து மணிக்கு தலைவர் அமலா பாலுக்கு பொக்கே கொடுத்தனுப்பி வாழ்த்து சொன்னார். இன்று அவர் ஒரு முன்னணி நட்சத்திரம். தலைவருக்கு ஜோசியம் தெரியுமோ…?

  3. rajasekar

    ரியல் லைப் ஹீரோ தலைவர்
    ரியல் லைப் சூப்பர் ஸ்டார் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *