BREAKING NEWS
Search

நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து!

நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து!

1978708_10152752717334202_4016265643339235420_n

சென்னை: தேர்தலில் அபார வெற்றி பெற்ற நரேந்திர மோடி  மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது தமிழக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதலில் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான்.

இந்த சந்திப்பு மூலம் மோடி தங்களைப் பெருமைப்படுத்தியதாக ரஜினி மனைவி லதா கூற, மோடி ஒரு சிறந்த நிர்வாகி என ரஜினி பாராட்டினார்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்திருக்கிறது.

அதே போல தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும், யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டிவிட்டரில் ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

rajini-wish-namo

சரித்திர வெற்றி

நரேந்திர மோடிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “அன்புமிக்க நரேந்திர மோடிஜியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு வாழ்த்துகள் (Hearty Congratulations dear @narendramodi Ji on your historic win. Best wishes)” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்தில், “அபார வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள் (My congratulations to Tamil Nadu chief minister Jayalalitha ji on her landslide victory)” என்று குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி
10 thoughts on “நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து!

 1. பாண்டியன்

  என்ன இருந்தாலும் தலைவர் ராசி ராசி தான். அவரைப் பாத்துட்டு வந்தா எந்த விஷயமும் வெற்றி தான்ன்னு மீண்டும் நிருபணம் ஆகியிருக்கு. தலைவரோட மனமார்ந்த ஆசீர்வாதம், வாழ்த்துக்கு கடவுளோட ஆசியும் சேர்ந்து கிடைக்குது என்பது தான் உண்மை..

  இளங்கோ என்று ஒரு மானஸ்தன் இருந்தாரே எங்கேப்பா அவரு.. விசயகாந்த் விசயமே இல்லாத காந்தமா போய்ட்டாரே.. என்ன ஒரு அலும்பு – காங்கிரஸ், திமுக, பாஜக ன்னு ஆட்டு யாவாரம் மாதிரி, ஒரே நேரத்திலே கையிலே துண்டு போட்டு பேரம் பண்ணின மகா புத்திசாலி அரசியல்வியாதியாசே. நாடு முழுவதும் அவருடைய கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கு. பாஜகவும் பாமகவும் கூட தமிழ் நாட்டில் வெற்றி பெற்றிருக்காங்க. ஆனா இவராலே சொந்த மச்சானையே காப்பாத்த முடியல்லியே..????

 2. குமரன்

  1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது இப்போதுதான். 1984 இல், இந்திரா இறந்த பிம்பு நடந்த தேர்தல். மக்கள் ராஜீவ் தனது தாயை இழந்து விட்டாரே, (பாவம் பச்சப் பய புள்ள, அம்மா இல்லாம தனியா என்ன பண்ணுமோ?!) என்று அனுதாபப்பட்டு அந்த அலையில் காங்கிரஸ் வென்றது.

  இப்போது காங்கிரஸ் என்ற மக்கள் விரோத உழல் அரசு போகவேண்டும், பரம்பரை ஆட்சி முடிய வேண்டும், இத்தாலிக்காரியின் மறைமுக ஆட்சி கூடாது என்றும், மோடி என்ற நிர்வாகத் திறனும் தேச பக்தியும் மிக்கவர் வரவேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். (ஊழலற்ற அரசைத் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, அது இப்போதுள்ள சுழலில் யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது வேறு விஷயம்)

  இந்த அரசு ஒரு கூட்டணி அரசாக இல்லாததால் நிலையான அரசாக இருக்கும் என்பது நிறைவு தரும் விஷயம்.

  இங்கேதான், கொடுங்கோலாட்சி செய்யும் ஜெயாவுக்கு 37 சீட் கொடுத்து நம்மை அதிர்ச்சியிலும், சோகத்திலும் மக்கள் ஆழ்த்தி விட்டனர். ஆனால் அதே சமயம் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கும் காங்கிரஸின் மக்கள் விரோத ஆட்சிக்கும் சாவு மணியாக அவர்களை ஒரு இடம் கூட இல்லாமல் செய்தது மன நிறைவைத் தருகிறது. 3 இடம் இருந்தாலும், 37 இடம் இருந்தாலும் ஒன்றுதான் என்னும் விதமாக ஜெயா மத்திய அரசைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டல் அரசியல் செய்து, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்ப முடியாது, நிச்சயம் தண்டனை பெறுவார், தனது எம்.எல்.ஏ பதவி, முதல்வர் பதவி எல்லவற்றையும் இழப்பார் என்பதுதான் மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயம். இந்த ஒரு காரணத்துக்காகவே பி.ஜே.பியின் இமாலய வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடலாம்.

 3. குமரன்

  இவ்வளவு பெரும்பான்மை கிடைத்த பின்னாலும், பா.ஜ.கவுக்கு மாநிலங்களவையில் போதுமான இடங்கள் இல்லை என்று ஒரு கதையை முன்னிறுத்தி அதற்காக ஜெயாவிடம் தொங்குவார்கள் என்று கட்டுரை எளுதி ஜெயாவிடம் காசு பார்க்கும் பத்திரிகைக் கும்பல் வேகமாக எழுதுகிறார்கள்!

 4. Krishna

  எந்த கட்சியின் உதவியில்லாமல் தனித்தே 283 சீட்டுகள் பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள். பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 31 இடங்களும் உபியில் மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றிபெற்றிருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த இரு பெரும் மாநிலங்களில்இஸ்லாமியர்கள் ஆதரவு இல்லாமல் இந்த அளவுக்கு வெற்றி பெறுவது என்பது நிச்சயம் முடியாது. பெரும்பாலான இஸ்லாமியர்கள் மோடியை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது.

  தமிழகத்தில் 37 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது அதிமுக. இன்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி அதிமுக. ஆனால் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் 37 உறுப்பினர்களில் ஒருவரும் மத்திய மந்திரிசபையில் இடம்பெறப்போவதில்லை. அதிமுகவுக்கு இது தான் மிகப்பெரிய வெற்றியிலும் மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விட்டது. மொத்தத்தில் அதிமுக பெற்ற வெற்றி நாய்க்கு கிடைத்த தேங்காய் போல் ஆகிவிட்டது. கடைசியாக 1998-ல் மத்திய மந்திரி சபையில் அதிமுக இடம் பெற்றது. ஆனால் ஜெயலலிதா வாஜ்பாய் அரசை கவிழ்த்த பிறகு 1999, 2004 மற்றும் 2009-ல் அதிமுக படு தோல்வி அடைந்ததால் மத்தியில் இடம் பெற முடியவில்லை. ஆனால் தமிழகத்தின் போறாத காலம், அதிமுக அமோக வெற்றி பெற்றும் தமிழகத்துக்கு எந்த பிரநிதிதுவமும் இல்லாமல் போய் விட்டது. பொன்னாருக்கும் அன்புமணிக்கும் மந்திரி சபையில் இடம் கிடைத்தாலும் தமிழகத்துக்கு உபயோகமான மந்திரி பதவிகள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஜெயலலிதா மட்டும் தேர்தலுக்கு முன்னால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் தமிழகம் நல்ல பலன் அடைந்திருக்கும். தனியாகவே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இருந்தாலும் மோடி கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி சபையில் நிறைய இடங்கள் கொடுக்கப்படும் என்று தான் சொல்லுகிறார். ஆனால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவால் அதிமுக வெற்றி பெற்றாலும் தமிழகம் தோற்று போய் இருக்கிறது.

 5. குமரன்

  ///அதிமுகவுக்கு இது தான் மிகப்பெரிய வெற்றியிலும் மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விட்டது. மொத்தத்தில் அதிமுக பெற்ற வெற்றி நாய்க்கு கிடைத்த தேங்காய் போல் ஆகிவிட்டது.//

  மிகச் சரி. அதிலும் நாய் என்ற உவமை வெகு பொருத்தம்.

  ///ஆனால் தமிழகத்தின் போறாத காலம், அதிமுக அமோக வெற்றி பெற்றும் தமிழகத்துக்கு எந்த பிரநிதிதுவமும் இல்லாமல் போய் விட்டது. ///

  இங்கேதான் சறுக்கல். அதிமுக அமோக வெற்றி பெற்றும் அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறாவிட்டால், அது தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் மிக நல்ல நேரம். ஜெயலலிதா எடுத்ததெற்கெல்லாம் மத்திய அரசை மிரட்டி பிளாக் மெயில் அரசியல் செய்யும் வாய்ப்பை இந்தியாவின் மற்ற மாநில மக்கள் ஒன்று திரண்டு தடுத்தது, இறைவன் கொடுத்த மக்கள் என்னும் மகேசன் கொடுத்த வரப்பிரசாதம்.

  டான்சி வழக்கில் இருந்து தப்பிக்க சங்கராச்சாரியார் மூலம் வாஜ்பாயிக்கு அளுத்தம் கொடுத்தது போல இப்போது 37 சீட்டை வைத்து பேரம் பேசி, அளுத்தம் கொடுத்து, மிரட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஊளலில் முப்பது ஆண்டு அனுபவம் பெற்ற ஜெயலலிதாவுக்கு முடியாது என்பது இறைக் கொடை. ஜெயாவுக்காகத் தர்மம் பிறழியதற்கான தண்டனையை அதே ஜெயா போட்ட பொய் வழக்கின் மூலம் சங்கராச்சாரியாரும் அனுபவித்தார் என்பது வரலாறு.

  அதுபோல இப்போதும் மோடி என்ற ஜெயாவின் நண்பர், ஜெயா இப்போது (மோடி வலுவான நிலையில் உள்ளதால்) பேசும் பசப்பு வார்த்தைகளுக்கும் கெஞ்சலுக்கும் மயங்கி, ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க உதவுவாரே ஆனால், தர்மம் மோடியை நிச்சயம் தண்டிக்கும். அப்படி இல்லாமல் ஜெயாவின் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் மயங்காமல் சட்டப்படியான நியாயப் படியான தண்டனையை ஜெயா பெறும்படிக்கு மோடி நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்தாரானால், அவருக்கும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்ல காலம்.

  ///பொன்னாருக்கும் அன்புமணிக்கும் மந்திரி சபையில் இடம் கிடைத்தாலும் தமிழகத்துக்கு உபயோகமான மந்திரி பதவிகள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ///

  அட, எது உபயோகமான மந்திரி பதவி? எது உபயோகமில்லாத மந்திரி பதவி?

  கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்தப் பதவியானாலும் அதில் தமக்கும் தமது உறவினர், நண்பர், கட்சி வகையறாக்களுக்கு உபயோகம் கண்டு விடுவார்கள். இந்த முறை அது நடக்காது என்பதே நாட்டுக்கு மிகப் பெரிய உபயோகம்.

 6. Krishna

  @ குமரன், மோடியை நாட்டின் மற்ற எந்த தலைவர்களுடனும் (பாஜக தலைவர்களையும் சேர்த்து) ஒப்பிட முடியாது. சட்டத்துக்கு புறம்பாக அவர் எதையும் செய்ய மாட்டார். ஜெவின் வழக்குகளில் எந்த வகையிலும் தலையிட மாட்டார். 12 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக அவர் இருந்த காலங்களில் காங்கிரசால் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் சொல்ல முடியவில்லை. “நானும் சம்பாதிக்கமாட்டேன், என் கீழ் பணிபுரிகிரவர்களையும் சம்பாதிக்க விடமாட்டேன்” என்று தான் சொல்லி வருகிறார். அதானிக்கு குறைந்த விலையில் நிலங்களை கொடுத்ததாக மட்டும் தான் புகார் இருக்கிறது., ஆனால் அந்த நிலங்கள் 1994-ல் குஜராத் காங்கிரஸ் முதல்வர் சப்பில்தாஸ் மேஹ்தா காலங்களில் கொடுக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டது.
  அதிமுகவை பொருத்தவரையில் நான் சொல்ல வருவது இது தான். எப்படியுமே பாஜவுக்கு தனி மெஜாரிட்டி இருக்கிறது. இனி ஜெயலலிதாவால் பாஜகவை மிரட்ட முடியாது. இந்த நிலையில் அதிமுக மத்திய மந்திரி சபையில் சேர்ந்து, ரயில்வே, ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை போன்றவற்றை பெற்றுக்கொண்டால், தமிழகத்துக்கு உதவியாக இருக்கும். அதுவும் நீர்வளத்துறை மூலம் காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசின் தமிழக விரோத போக்கை ஒரு அளவுக்காவது கட்டு படுத்த முடியும். இதை தான் உபயோகமான மந்திரி பதவிகள் என்று தெரிவித்தேன்.

 7. குமரன்

  கிருஷ்ணா அவர்களே, நாட்டின் நலம் குறித்த உங்கள் உண்மையான அக்கறை குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆனால், ஜெயா வாய்ப்புக் கிடைத்தால் ரயில்வே, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை இவை எதுவும் தனக்கு வேண்டும் என்று கேட்க மாட்டார், அவருக்கு வேண்டியது, வருமான வரித்துறை இருக்கும் நிதி அமைச்சு, நீதிமன்றங்கள் இருக்கும் சட்டத் துறை, சி.பி.ஐ இருக்கும் உள்துறை. யாருக்கு எப்போது என்ன எதற்காகத் தேவை என்பது வெளிப்படை.

  நிற்க, பா.ஜ.கவின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், பா.ம.கவின் அன்புமணிக்கும் அமைச்சராகும் வாய்ப்புகள் உள்ளன. அன்புமணியின் பார்வை எந்தப் பக்கம் (!) என்பதும் வெளிப்படை. பொன்.ராதா கொடுத்ததை ஏற்பார், கொடுக்காவிட்டாலும் கிடந்தபடிக் கிடப்பார்! என்னத்த சொல்ல?

  நீர்வளத்துறை மூலம் கர்நாடகாவின் காவிரி ஆதிக்கத்தைத் தடுப்பது கஷ்டம், ஏனெனில் கர்நாடகம் niRaiya பா.ஜ.க எம்.பிக்களை அனுப்பி விட்டது! அப்படியே இருந்தாலும், நடைமுறையில் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. மழையின் அளவு, நீர்வரத்து, குடிநீர்த தேவைகளுக்காக இரு மாநிலங்களும் எடுத்துக் கொள்ளும் நீர், புதியதாக ஏற்பட்ட விளை நிலங்கள், வீட்டு, தொழில் உபயோகத்துக்கு மாற்றப்பட்ட விளை நிலங்கள் என்று பல்வேறு வகைகளில் நீர்ப் பயன்பாடு மாறிவிட்டது. இப்போது உள்ள சுழலில், இரு மாநில அரசுகளும், விவசாயிகளும், மக்களும் முனைந்தால் அன்றி, நடைமுறைப் படுத்தக் கூடிய ஒரு தீர்வு வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

 8. Krishna

  குமரன் அவர்களே, அதிமுகவிலேயே பலர் ரயில்வே துறை கேட்கலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாற்பதும் நமதே என்று முழங்கி 2 சீட்டுகளை தவிர அனைத்திலும் வென்றும் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. இத்தனை ஆண்டுகளாக திமுக, மத்தியில் இடம் பெற்றும் தங்களை நன்றாக வளப்படுத்திக்கொண்டார்கள். அது போல் இல்லாமல் ஜெயலலிதா மோடியுடன் நட்பாக இருந்து ரயில்வே திட்டங்கள் மட்டும் கட்டுமான திட்டங்களை (Infrastructure Projects) துரிதப்படுத்தினால் விலைவாசி ஏற்றத்தை பெருமளவு தடுக்க முடியும். பாமகவுக்கு ஒரே ஒரு சீட்டு தான். மிகப்பெரிய மந்திரி பதவியை கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு 37 எம்பிக்கள் இருப்பதால் ரயில்வே, மின்துறை போன்ற மந்திரிகளை பெற்று தமிழகத்தை வளப்படுத்த முடியும். நேற்று வெற்றி பெற்றவுடன் பரோடாவில் பேசிய மோடி, ஒரே ஒரு உறுப்பினர் இருக்கும் கட்சிகளுக்கு கூட உரிய பிரநிதித்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவுடன் தமக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். ஆகவே இந்த சந்தர்பத்தை ஜெயலலிதா உபயோகப்படுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் அப்படி செய்வாரா என்ற சந்தேகம் வருகிறது. இவ்வளவு பெரிய வெற்றி பெற்றும் அவருக்கு மகிழ்ச்சி இருக்குமா என்று சந்தேகம் வருகிறது. நேற்று அறிக்கையில் புதிய பிரதமரை வாழ்த்துகிறேன் என்று தான் சொன்னாரே தவிர மோடியின் பெயரை குறிப்பிடவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் நல்ல மந்திரி பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால் மோடி அலையை கணிக்க தவறிவிட்டார். தொங்கு பாராளுமன்றம் வரும், அதை வைத்து கிங் மேக்கராக வரலாம் என்று நினைத்து பாஜகவை உதாசீனப்படுத்தினார்.

  அதிமுக பெற்ற வெற்றியை பொருத்தவரையில் மோடியின் பெயரை சொல்லி கிடைத்த வெற்றி தான் இது. மக்கள் ஜெயலலிதாவையும் மோடியையும் நண்பர்களாகவே பார்க்கிறார்கள். மோடி ஆட்சி அமைக்க அதிமுக உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதிமுகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தார்கள். 15 ஆண்டுகளாக திமுக மந்திரிகளால் தமிழகத்துக்கு எந்த நன்மையையும் ஏற்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். பாஜகவுக்கு ஒட்டு போட்டால் ஓட்டுகள் பிரிந்து திமுக வந்துவிடுமே என்ற பயத்தில் தான் அதிமுகவுக்கு போட்டு இத்தனை பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். இது தவிர பண பட்டுவாடா பல தொகுதிகளில் விளையாடியது. மாட்டு தரகர் போல் எல்லா கூட்டணிகளுடனும் பேரம் பேசி ஜோக்கர் ஆக்கி கொண்டவர்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. அதனாலேயே அதிமுகவுக்கு இத்தனை பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 2004, 2006, 2009 என்று தொடர்ந்து மூன்று தேர்தலில் வென்ற திமுக, இனி அதிமுகவுக்கு அரசியல் அஸ்தமனம் தான் என்ற நம்பிக்கையில் ரொம்பவும் ஆட்டம் போட்டார்கள். அதனால் திமுகவுக்கு அதிமுகவே தேவலை என்ற எண்ணம் இன்னமும் மக்களுக்கு இருக்கிறது. ஆனால் இதை உணர்ந்ததாக ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை. தனக்கும் தன் கட்சிக்கும் கிடைத்த ஓட்டுகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் மற்றும் தமிழர்கள் தான் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால் இன்னும் பாஜக ஆட்சி அமைப்பதற்கு நாட்கள் இருக்கிறது. இன்னமும் ஒன்றும் குடி முழுகிவிடவில்லை. தமிழகத்துக்கு உதவியாக இருக்கும் ஒன்றோ அல்லது இரண்டோ மந்திரி பதவிகளை வாங்க முயற்சி செய்கிறாரா என்று பார்க்கலாம். ஆனால் எனக்கு என்னவோ அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.

 9. குமரன்

  //அதிமுக பெற்ற வெற்றியை பொருத்தவரையில் மோடியின் பெயரை சொல்லி கிடைத்த வெற்றி தான் இது. மக்கள் ஜெயலலிதாவையும் மோடியையும் நண்பர்களாகவே பார்க்கிறார்கள். மோடி ஆட்சி அமைக்க அதிமுக உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதிமுகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.///

  நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி. ஆனால் அகந்தை கொண்ட ஜெயாவோ மோடி இல்லை லேடி தான் எல்லாமே என்றுதான் கூறினார். இனியும் சொல்வார். சோ அதற்கு ஜால்ரா போடுவார்.

  ////ஜெயலலிதாவுடன் தமக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். ஆகவே இந்த சந்தர்பத்தை ஜெயலலிதா உபயோகப்படுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் அப்படி செய்வாரா என்ற சந்தேகம் வருகிறது. இவ்வளவு பெரிய வெற்றி பெற்றும் அவருக்கு மகிழ்ச்சி இருக்குமா என்று சந்தேகம் வருகிறது. ///

  எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயா ஒரு சுயநலம் மிக்க, அகந்தையால் நிரப்பபட்ட, அரக்க குணம் மிக்க சாகசக் காரி. இப்போது தமது தேவை மோடிக்கு இல்லை என்பதால், மோடியிடம் கெஞ்சி, பல்லிளித்து என்ன வேண்டுமானாலும் செய்து, இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆகப் பார்ப்பார். அவருக்கு எந்தநாள் இந்த வெற்றி கிடைத்தும் மகிழ்ச்சி இல்லை என்றால், மிரட்டியே இந்தக் காரியத்தைச் சாதிக்கும் அளவுக்கு 37 சீட் கிடைத்தும் கூட, மோடிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து விட்டதே என்பதால் அவருக்கு சிறிதும் திருப்தி இல்லை.

  இந்த இடத்துக்கு பிரபலமான பாஷா பட வசனம் மிகவும் பொருந்துகிறது.

  ஆண்டவன் கெட்டவர்களுக்கு எல்லாம் கொடுப்பான்,
  ஆனா கைவிட்டுவிடுவான்.

  ஜெயாவுக்கு 2 சீட் தவிர எல்லாம் கொடுத்தான்.
  ஆனால் ஜெயா கேட்ட விடுதலை கிடைக்க வழியில்லாமல் கை விட்டு விட்டான்!
  (மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு)

 10. kumaran

  மோடிக்கு தெரிந்த நாகரீகம் லேடிக்கு தெரியவில்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *