BREAKING NEWS
Search

60வது பிறந்த நாள் – முக ஸ்டாலினுக்கு ரஜினி – தலைவர்கள் வாழ்த்து!

60வது பிறந்த நாள் – முக ஸ்டாலினுக்கு ரஜினி – தலைவர்கள் வாழ்த்து!

சென்னை: முன்னாள் துணை முதல்வர், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

இதையொட்டி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை போனில் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கருணாநிதி – முக அழகிரி

முன்னதாக தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மனைவியுடன் பிறந்தநாள் கேக் வெட்டினார். இதையடுத்து அவர் கோபாலபுரம் சென்றார். அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அவருக்கு கருணாநிதி முத்தம் கொடுத்து வாழ்த்து கூறினார். பின்னர் அவருக்கு சகோதரி செல்வியும் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலினின் மூத்த சகோதரரும் மத்திய அமைச்சருமான முக அழகிரி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

காலை 8.15 மணிக்கு தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த கேக்கை மு.க. ஸ்டாலின் வெட்டினார்.

அவருக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கேக் ஊட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு பொன்னாடை, பூங்கொத்து, பரிசுப் பொருட்கள், பழத்தட்டுகள், சீர்வரிசைகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். ரூபாய் நோட்டு மாலையும் அவருக்கு அணிவிக்கப்பட்டது.

முக ஸ்டாலின் பிறந்த நாளை தமிழகம் முழுவதிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல மாற்றுக் கட்சி தலைவர்களுடனும் நட்பு பாராட்டுபவர் முக ஸ்டாலின். எனவே பல கட்சித் தலைவர்களும் ஸ்டாலினுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

-என்வழி செய்திகள்

 




3 thoughts on “60வது பிறந்த நாள் – முக ஸ்டாலினுக்கு ரஜினி – தலைவர்கள் வாழ்த்து!

  1. venkatesan, nigeria

    அந்த கட்சியில் இருக்கும் ஒரே ஒரு உருப்படியான தலைவர் இவர் தான்

  2. devaraj

    I sincerely hope one day Mr.Stalin , will rule the state and we are going to see this states tremendous growth . Happy Bday Mr.Stalin. GOD bless.

    Dev.

  3. மிஸ்டர் பாவலன்

    ///அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல மாற்றுக் கட்சி
    தலைவர்களுடனும் நட்பு பாராட்டுபவர் முக ஸ்டாலின். ////

    அப்படி ஸ்டாலின் எஸ்.வி.சேகருடன் நட்பு பாராட்டியது
    புரட்சித் தலைவிக்கு பிடிக்காததால் சேகரைக்
    கட்சியை விட்டு நீக்கினார். இந்த வலையில் நான்
    கலைஞரை “அரசியல் சாணக்கியன்”, “தமிழ் அறிஞர்”
    எனப் பல தடவை பாராட்டி இருந்தும் தினகர் போன்ற
    ஒரு சிலர் என்னை அ.தி.மு.க. கொள்கை பரப்புச்
    செயல்பாளர் எனப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *