BREAKING NEWS
Search

கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

rajini12-copy copyசென்னை: இன்று 90வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலைத் தாண்டி கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த். கருணாநிதியை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஸ்டேட்ஸ்மேன், அன்புக்குரிய நண்பர் என்றே அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.

கருணாநிதியும் ரஜினி விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவர் படங்களின் முதல் ரசிகராக இருந்து பாராட்டுவதும் வாழ்த்துவதும் வழக்கம்.

கருணாநிதி முதல்வராக இருந்த 2011-ல் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியில் போய் ரஜினியைப் பார்த்து நலம் விசாரித்தார். அடுத்த சில தினங்களில் ஆட்சியே மாறியது. கருணாநிதி முன்னாள் முதல்வரானார். உடல் நிலை தேறி வீடு திரும்பிய ரஜினி நேரில் போய் கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரித்து, நன்றி தெரிவித்துவிட்டு வந்தார்.

இந்த ஆண்டு 90 வயதில் அடியெடுத்து வைக்கும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய ரஜினி, நூறு ஆண்டுகளைத் தாண்டியும் நலமோடு நீங்கள் வாழ வேண்டும், என்று வாழ்த்தினர்.

-என்வழி




4 thoughts on “கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

  1. srikanth1974

    உதய சூரியன் இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும்
    முதிய சூரியனுக்கு இன்று வயது தொண்ணூறு
    நீங்கள் வாழ்க ஆண்டுகள் பல நூறு.
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அய்யா.
    ப.ஸ்ரீகாந்த்.

  2. shanmugsundharam

    பாபா படம் பிரச்சனை வந்தப்போ எல்லாம் இந்த பிராடு எங்க போனாரு? ரஜினி சார் தான் வேற வழி இல்லாம இவங்கள பத்தி பேசறார்னா நீங்களுமா.

    //
    நீயுமா புரூட்டஸ் //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *