BREAKING NEWS
Search

ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

rajini-jaya

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா மற்றும் அவருக்கு நெருக்கமான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்தார்கள் என வழக்குத் தொடரப்பட்டு, பின்னர் அந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஜெயலலிதாவுக்கு ரூ 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ 10 கோடியும் அபராதம் விதித்தது. உடனடியாக கைது செய்ப்பட்ட ஜெயலலிதா கர்நாடக சிறையில் ஒரு மாதத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தார். முதல்வர், எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளை இழந்தார்.

இந்த வழக்கில் உடனடியாக மேல் முறையீடு செய்தது ஜெயலலிதா தரப்பு. கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த மேல் முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி குமாரசாமி. இதுபற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

வழக்கிலிருந்து விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி

ஜெயலலிதாவின் பக்கத்து வீட்டுக்காரரான ரஜினிகாந்த், ஏற்கெனவே அவர் சிறை சென்று மீண்டபோது, பிரார்த்தைகளைத் தெரிவித்திருந்தார். இப்போது விடுதலை அடைந்துள்ளதால், தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதற்கு ஜெயலலிதா தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

-என்வழி




10 thoughts on “ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

  1. kumaran

    ஜாமீனில் வெளிவந்த போது வாழ்த்து சொன்னது ஓகே (ஒரு மனிதாபி மானம் ) ஆனால் now I FEEL NOT GOOD

  2. Devaraj

    This is bad job by Rajini, who always went by truth, but now? Who is he trying to please.

  3. Chandran

    தலைவர் வாழ்த்து சொன்னது நன்றாக இல்லை. ஊழல்வதிக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார்.அதுவும் அரசியல் காசு பயன்படுத்தி வாங்கப்பட்ட தீர்ப்புக்கு.

  4. robo

    Comparing with drohi karunathi amma helped thalaivar on many occasion so it is duty to wish her

  5. Kumar

    தலைவர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கவேண்டும். எந்த முன்னணி நடிகரும் வரவில்லை. இவர் மட்டும் ஏன் ஒரு ஊழல்வாதியின் விழாவுக்கு வரவேண்டும்? தன் இமேஜை இப்படியே கெடுத்துக்கொள்கிறார் தலைவர். ஜெவிடம் இந்த அளவு பணிந்துபோக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. கடந்த 2 நாட்களாக முகநூலில் கடுமையாக அவர் விமர்சிக்கப்படுவதை பார்த்தால், கவலையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *