BREAKING NEWS
Search

தீபாவளியன்று ரசிகர்களுக்கு தலைவர் தந்த ‘ஸ்பெஷல் தரிசனம்’!

தீபாவளியன்று ரசிகர்களுக்கு தலைவர் தந்த ‘ஸ்பெஷல் தரிசனம்’!  

Rajani9401
தீபாவளியன்று சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தலைவர் ரஜினியின் வீட்டுக்குப் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்துவிட, உடனடியாக அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார் ரஜினி.

இந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.

முன்பெல்லாம் தனது ரசிகர்களை வாரா வாரம் வீட்டில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அரசியல் சூழல் காரணமாக 90களில் இந்த சந்திப்பை தவிர்க்க ஆரம்பித்தார். மன்றங்கள் பதிவு செய்வதையும் நிறுத்தி வைத்தார்.

இருந்தாலும் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் அவர் தன் ரசிகர்களைச் சந்திக்கத் தவறுவதில்லை.

கடந்த 12.12.12 அன்று தனது ரசிகர்களை போயஸ் கார்டனில் சந்தித்தார் ரஜினி. பின்னர் அதே நாளில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கும் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

சமீப காலமாக ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து வந்தார்.

இந்த தீபாவளியையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவரைச் சந்திக்க திடீரென அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன், கார்களில் வந்திருந்தனர். போலீசாரும் பாதுகாவலர்களும் கூட்டத்தினரை தடுப்பு வளையம் அமைத்து கட்டுப்படுத்தினர்.

தீபாவளிக்கு தலைவரைப் பார்க்க வந்து இருக்கிறோம். அவரைச் சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இதுகுறித்த தகவல் வீட்டுக்குள் இருந்த ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே தான் சந்திக்க வருவதாகக் கூறிய ரஜினி, வீட்டு முன் சிறிய மேடை அமைக்கச் சொன்னார். சில நிமிடங்களில் அந்த வேலை முடிய, மின்னல் வேகத்தில் வந்து நின்றார் ரஜினி. மேடையில் ஏறி ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார்.

ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். தலைவா என உரக்க குரல் எழுப்பினர். எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் என்றார் ரஜினி.

பதிலுக்கு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறினார்கள். சிறிது நேரம் அங்கு நின்று ரசிகர்களைச் சந்தித்து விட்டு, அனைவரும் பத்திரமாக வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு ரசிகர்களிடம் விடைப் பெர்றார்.

பிறகு ரசிகர்கள் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அமைதியாக வீடு திரும்பினர்.

-என்வழி




One thought on “தீபாவளியன்று ரசிகர்களுக்கு தலைவர் தந்த ‘ஸ்பெஷல் தரிசனம்’!

  1. குமரன்

    இந்த தீபாவளிக்கு …

    எப்போதுமே வாழ்த்துச் சொல்லாத கருணாநிதியும் வாழ்த்தவில்லை.

    வழக்கமாக வாழ்த்துச் சொல்லும் ஜெயலலிதாவும் வாழ்த்த வில்லை !!

    ஆனால் தலைவர் வாழ்த்திவிட்டார்……. அது …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *