BREAKING NEWS
Search

பாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்! – திருநாவுக்கரசர் பளீர்

சென்னை: பாஜக மாநில தலைவர் பதவியை ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக ரஜினியை நியமிக்க மோடி மற்றும் அமித்ஷா ஆலோசிப்பதாக முன்னணி நாளிதழில் வதந்தி வெளியானது. இது தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமானது.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இதுகுறித்து கூறியதாவது:

“அதிமுக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பாஜக அரசை சந்தோஷப்படுத்தத்தான். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

பாஜகவில் உறுப்பினராக இல்லாதவர், அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்க முடியுமா? பாஜக மாநில தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார், பாஜக தேசிய தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இதெல்லாம் வேடிக்கையானவை, நான் சீரியஸாக பார்க்கவில்லை,” என்றார்.

ரஜினிகாந்தின் மிக நெருங்கிய அரசியல் நண்பர்களில் ஒருவர் திருநாவுக்கரசர். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது, அவருக்கு ஆதரவாக நிற்கும் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *