BREAKING NEWS
Search

ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி – ராக்லைன் வெங்கடேஷ் பரபரப்பு பேட்டி

லிங்காவுக்கு எதிரான பிரச்சாரம்: ரஜினி அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட சதி! – ராக்லைன் வெங்கடேஷ்

lingaa-tamil-movie-audio-release-photos40

சென்னை: லிங்கா படத்தை ஓட விடாமல் தடுக்க செய்யப்பட்ட எதிர்ப்பிரச்சாரம், ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க செய்யப்பட்ட சதி, என பரபரப்பாக பேட்டியளித்துள்ளார் ராக்லைன் வெங்கடேஷ்.

லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்தே, அதன் விநியோகஸ்தர்களுள் ஒருவர், படத்துக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டார். ஊடகங்களும் அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டதால், நல்ல படமான லிங்காவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, மீடியாவிடம் பேசிய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா படத்தை அதன் விநியோகஸ்தர்களுள் ஒருவரான சிங்கார வேலன் என்பவர் தனது விஷம பிரச்சாரத்தால் கொன்றுவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், எகனாமிக் டடைம்ஸ் நாளிதழுக்கு ராக்லைன் வெங்கடேஷ் அளித்துள்ள பேட்டி:

லிங்கா வெளியீட்டில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டதா?

லிங்கா படம் உண்மையில் நல்ல திரைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை விற்க ஈராஸ் நிறுவனம் முனைந்தபோது, சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வாங்க முனைந்தனர். ஆனாவ் வேந்தர் மூவீஸைத் தேர்ந்தெடுத்தது ஈராஸ். ரஜினி சாரின் பிறந்த நாளன்று வெளியிடுவதாக இருந்தால் மட்டுமே, நீங்கள் சொல்லும் விலைக்கு வாங்குவோம் என வேந்தர் மூவீஸ் கூறியது. இதில் என்ன தவறு நேர்ந்தது? ஆனால் இந்த திருச்சி – தஞ்சை விநியோகஸ்தர் சிங்கார வேலன் படத்துக்கு எதிராக, வெளியான மூன்றாம் நாளிலிருந்தே பிரச்சாரம் செய்து வந்தார். அதை யுட்யூப் போன்ற தளங்களில் தொடர்ந்து செய்தார். தன்னுடன் மேலும் சிலரை அழைத்துக் கொண்டு, நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தார். ரஜினி தலையிட வேண்டும் என்றார். வெளியாட்கள் யாராவது இதைச் செய்திருந்தால் பரவாயில்லை. சினிமா என்ற குடும்பத்துக்குள் இருந்து கொண்டே சிங்கார வேலன் இப்படிச் செய்தது படத்தை பாதித்துவிட்டது.

சரி, இந்த சர்ச்சைக்கு உங்கள் பதில் என்ன?

என்னைப் பொருத்தவரை இது ரஜினி சார் பெயரை, அவரது செல்வாக்கைக் கெடுக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. அவர் அரசியலுக்குள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், அவருக்கு பயங்காட்ட செய்யப்பட்ட சதி.

தமிழகத்தில் ரஜினிக்கு மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அதைக் கெடுக்க செய்யப்பட்ட இந்த சதியில் சிங்கார வேலனுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வரப் போகிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் அடுத்து ரஜினி சாருக்கு அரசியல் வாய்ப்பு குறைவு. அவருக்கு இப்போது வயது 64.

ரஜினி அரசியலுக்கு வருவாரா?

ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி. எந்தக் கட்சி என்பது முக்கியமில்லை. மக்களுக்கு உழைப்பதுதான் ரஜினியின் நோக்கம். தமிழகத்தைப் பற்றி அவருக்கு ஒரு பார்வை உள்ளது. அவர் மிகச் சுத்தமானவர். தெய்வ பக்தி மிக்கவர். அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்து சேவை செய்யவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை, விருப்பம்.

இந்த சமீபத்திய சர்ச்சைகள் குறித்து ரஜினி என்ன நினைக்கிறார்?

இந்த சர்ச்சைகள், பிரச்சினைகளைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார் ரஜினி சார். படத்தின் வெற்றியைத் தடுக்க சிலர் வேண்டுமென்ற செய்த வேலை இது என்றுதான் அவர் நினைக்கிறார். ஆனால் அவர் கடவுள் நம்பிக்கை மிக்கவர். கடவுள் அவர் பக்கம் இருக்கும்போது, யாரும் அவர் இடத்தை மறுக்க முடியாது.

ஆனால் முன்பெல்லாம் படம் நஷ்டமடைந்தபோது ரஜினி தலையிட்டு உதவியிருக்கிறாரே…

கடந்த ஆண்டு பல படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால் யாரும் அதன் தயாரிப்பாளர், ஹீரோக்களிடம் போய் நஷ்ட ஈடு கேட்கவில்லையே. ஆனால் ரஜினி படத்துக்கு மட்டும் ஏன் கேட்கிறார்கள்? காரணம் அவர் அன்பான மனசுக்காரர். ஆனால் இப்போது கேட்கக் காரணம் அரசியல் சதிதான்.

ஆரம்பத்தில் ஏதோ மன அழுத்தத்தில் சிங்காரவேலன் பேசுவதாக ரஜினி நினைத்தார். அவருக்கு உதவி செய்யக் கூட நினைத்தார். ஆனால் பின் வந்த நாட்களில், அவர் பேசிய விதம் அவர் நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி கன்னட படத் தயாரிப்பாளரை அழைத்து வந்து கோடிக் கணக்கில் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு போனதாக குற்றம்சாட்டினார். இதை ரஜினி சாரிடம் கூறி, அவருக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என்றேன். அவரும் என் முடிவுக்கே விட்டுவிட்டார்.

படத்தை சீர்குலைத்த சிங்காரவேலன்

ஒப்பந்தப்படி பணத்தைத் திரும்பக் கேட்க சிங்கார வேலனுக்கு உரிமையில்லை. பொதுவாக குடும்பமாக படம் பார்க்க வருபவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில்தான் தியேட்டர்களுக்கு வருவார்கள். ஆனால் அதைக் கெடுத்து நாசமாக்கியவர் இந்த சிங்கார வேலன்தான்.

-என்வழி

 

 
21 thoughts on “ரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி – ராக்லைன் வெங்கடேஷ் பரபரப்பு பேட்டி

 1. yaseenjahafar

  பணம் கொடுக்க கூடாது அந்த சிங்காரவேலன்னுக்கு அவன் ஒரு நாத்தம் பிடித்த சாக்கடை ராஸ்கல்

 2. arulnithyaj

  ஆம் நடப்பது எல்லாம் நன்மைக்கே! சிங்கம் ஒன்று புறப்படப் போகிறதே

 3. SK

  well said by mr.rockline…but i still have my doubts on thalaivars political entry..
  the problem is, he is too good which doesnt fit today’s politics…thats the unfortunate situation..

  i saw another post where it says that singaravelan& co are going to fast again..let them do whatever they want but rockline shud never compensate them..if its not in agreement then he has no right to claim back his money…let him go and fight it legally ..they wont..

  vino sir, where does lingaa stand on BO collections ? each one is posting their own numbers..i posted a message to erosnowsouth on twitter but no response…can u take some steps to reach out to right people and reveal the BO numbers ?

 4. arulnithyaj

  anna ithna செய்தி உண்மையா?

  லிங்கா பிரச்னையைக் கிளப்பிய தஞ்சை-திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன், தான் திரைப்பட விநியோகத்திற்கு புதிது என்று ஏற்கனவே கூறியிருந்தார். கூடவே அரசியலில் பலரும் தனக்குத் தெரிந்தவர்கள் என்றும் கூறியிருந்தார்.

  ஆனால் அவர் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபட்டு டெபாசிட் காலியானவர் என்ற விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் நடித்த ’அன்புத் தோழி’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளரே இந்த சிங்காரவேலன் தான்.

  இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தொல்.திருமாவளவன், “எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையே இல்லை. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தான் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்” என்று கூறியிருந்தார்.

  2007-ம் ஆண்டு வெளியான அந்தத் திரைப்படம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. முன்னதாக இந்தப் படத்தை ஜே.பி. ஃப்லிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது.

  இதனைத் தொடர்ந்து கடந்த 29-10-2010ம் தேதியன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளராக இருந்த காஜா மைதீன், விடுதலைச் சிறுத்தை கட்சியில் இணைந்தார். அந்த விழாவில் ’அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவாவும் கலந்து கொண்டார். சிங்காரவேலனும் கலந்து கொண்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்.

  இதனைத் தவிர கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் எதிர்பார்த்து கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார் சிங்காரவேலன்.

  அப்போது அவர் பெற்ற வாக்குகள் 1,195 மட்டுமே. ஒன்பது பேர் போட்டியிட்ட தொகுதியில் எட்டாவதாக வந்தவர். 80.33% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்த தொகுதியில், பதிவான வாக்குகளில் 0.82% வாங்கினார். தேர்தலில் போட்டியிட்டு நஷ்டமடைந்ததற்காக தேர்தல் கமிஷனரிடம் நஷ்ட ஈடு கேட்டு உண்ணாவிரதம் இருந்ததாகத் தகவல் எதுவும் தெரியவில்லை.

  2011-ம் ஆண்டு தேர்தலின் போது சிங்காரவடிவேலன் (அதான் அவர் உண்மையான பெயராம்!) தேர்தல் கமிஷனுக்குத் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில் தன்னிடம் பணமாக ரூ. 25,000 மற்றும் வங்கிக் கணக்கில் ரூ. 25,000 உள்ளதாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறார். வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்திருக்கிறார்.

  விவசாய நிலம் எதுவுமில்லை. 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாகவும் அஃபிடவிட் தாக்கல் செய்திருந்திருக்கிறார்.

  அஃபிடவிட் நகல் லிங்க் : இங்கே க்ளிக் செய்யவும்.

  இப்போது எட்டு கோடி ரூபாய்க்கு தான் லிங்கா திரைப்படத்தின் தஞ்சை – திருச்சி விநியோக உரிமையை வாங்கியிருப்பதாக கூறியிருந்த சிங்காரவேலன் அந்த பணத்தினை கடனாகக் கூடப் பெற்றிருக்கலாம். அதற்குரிய கணக்கு வழக்கு விபரங்களை இந்த நிதியாண்டு முடியும் போது அவர் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்வார் என்று நம்பப்படுகிறது
  http://www.seythigal.com/?p=5665

 5. Jeyaseelan

  Yes this is the correct and last chance for thalaivar..
  … Intha murai avar varavillai enral ini eppothume varamaattaar varavum mudiyaathu…. Ethu nadanthaalum Rajni thaan en thalaivar…..

 6. Murali

  Yes. Its time for a great show of strength. Its time for the GRAND ANNOUNCEMENT. The pigs have entered Lion’s den. All the pigs should pay the price for their misdeeds. Not only that our state needs a break from all misrules.
  Hooligans have done to Lingaa what PMK did for BABA. PMK’s vote share got dwindled from there after. I am sure they can’t count on our votes even in future. Similarly we need drag these idiots till they pack up. It should not be stopped at that.
  The best time is now for Rajini’s political entry. Any sweep in electoral victory can only be achieved when there is anger on to be defeated parties. Now the entire Rajini fan base has pent up anger and we want to unleash it. Let us unleash it for the good of Tamil nadu.
  Let Rajini sir put his best attempt with an iron fist. Let him announce his entry NOW. And for one last time all fans be prepared to hear all the defamation attempts of all the detractors in one chorus so that we can unleash our anger as one snow ball fire and roll it over in the electoral scene. Only dust of all the detractors should remain thereafter.
  ஓம்

 7. anbudan ravi

  தலைவர் அரசியலுக்கு வருவது ஒவ்வொரு ரசிகனின் கனவு. ஆனால் தற்பொழுது அவரின் உடல் நலனே முக்கியம்…..உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்களை அச்சுறுத்த அரசியலுக்கு வருவதென்பது நல்லதா என்று தெரியவில்லை. சுத்தமாக நிம்மதி போய்விடும். நம்மை விட தலைவருக்கு தற்போதய சூழ்நிலை நன்றாக தெரியும். பல அரசியல் நிபுணர்களை அவருக்கு நன்றாக தெரியும். கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  எதிரிகளுக்கு பதில் சொல்ல மற்றொரு அருமையான நல்ல கதை அம்சம் உள்ள விறு விருப்பான தலைவர் ஸ்டைலில் ஒரு படம் போதும்.

  நண்பர்களே, தயவு செய்து தலைவரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். அரசியல் இல்லாமலே அவர் நிறைய நற்பணிகளை செய்து கொண்டிருக்கிறார். இன்னும் செய்ய அரசியல் இல்லாமல் பல வழிகள் இருக்கிறது. இது எனது விருப்பமே….தலைவர் எவ்வழியோ நானும் அவ்வழியே.

  அன்புடன் ரவி.

 8. குமரன்

  அருள்நித்யா அளித்துள்ள தகவல்கள் அருமை. ஒரு கேடுகெட்ட ஆள் பிளாக் மெயில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்றே இப்படிப்பட்ட வேலையைக் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது. சிங்காரவடிவேலன் செய்தது, செய்து வருவது பிளாக் மெயில்.

 9. குமரன்

  ///அப்போது அவர் பெற்ற வாக்குகள் 1,195 மட்டுமே. ஒன்பது பேர் போட்டியிட்ட தொகுதியில் எட்டாவதாக வந்தவர். 80.33% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்த தொகுதியில், பதிவான வாக்குகளில் 0.82% வாங்கினார். தேர்தலில் போட்டியிட்டு நஷ்டமடைந்ததற்காக தேர்தல் கமிஷனரிடம் நஷ்ட ஈடு கேட்டு உண்ணாவிரதம் இருந்ததாகத் தகவல் எதுவும் தெரியவில்லை.////

  சூப்பர்

 10. murugan

  நண்பர் ரவி அவர்களின் கருத்தை நான் மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்

  அரசியல் முன்பை போல் இல்லை
  பொறாமை சூழ்ச்சி நம்பிக்கை துரோகம் இன்றைய அரசியலில் மலிந்துவிட்டது

  தலைவருடைய குணம் நம் எல்லோருக்கும் தெரியும்
  அவர் யாருடைய மனமும் புண் படகூடாது என்று நினைப்பவர்
  இன்றைய அரசியலில் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை
  ஒரு வேலை அப்படி அவர் வந்தால் அது அரசியலில் ஒரு புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கும்

  இன்றைய சூழலில் மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் குழம்பிபோய் உள்ளனர்
  இந்த உலகம் அரசியலுக்கு வந்து சாதித்தவர்களையும் கண்டிருக்கிறது
  அரசியலுக்கு வராமல் சாகாவரம் பெற்றவர்களையும் கண்டிருக்கிறது

  எல்லாவற்றிக்கும் மேலாக தலைவரின் உடல் நலன் மற்றும் மன அமைதி நமக்கு மிக முக்கியம்
  அவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
  எந்த ஒரு செயலை செய்வதானாலும் ஒருமுறைக்கு நூறுமுறை ஆழ்ந்து யோசித்து செய்பவர் நம் தலைவர்
  அவரே முடிவு செய்யட்டும்
  அவரது முடிவு எதுவாக இருப்பினும் நாம் அனைவரும் என்றென்றும் அவருக்கு துணை நிற்ப்போம்

  தலைவரின் ரசிகர்கள் என்னும் கடலில் ஒரு துளி !!!

 11. jegan

  I send many messages to that ******* fuckers fb page but he didn’t reply anything.maanam roosam Ulla vAna iruntha thooku potu sethurupan…..thalaiver should act in a film keeping present generation audience in mind .that’s film,s success should speak .and make the haters shut

 12. kumaran

  தலைவர் அரசியலுக்கு வரணும் , வந்தா தான் சுய நல அரசில்வாதிகளை ஒழித்து நல்லாச்சி தரமுடியும் , தலைவர் , SUPERSTAR ,ரஜினி மட்டுமே தமிழகத்துக்கு பொற்காலம் .

 13. srikanth1974

  இன்று நாளேட்டில் படித்த ஓர் துணுக்கு செய்தி
  அசிங்கார வாலன் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போரானாம்

 14. Vazeer

  காலம் காலமாய் எதிர் பார்த்து காத்து கிடக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதே செய்தியை நேரடியாக சூப்பர் ஸ்டாரிடமிருந்து விரைவில் எதிர் பார்க்கிறோம்

 15. NARESH

  அருள் நித்ய்ராஜ் நிறைய தகவல்கள் நன்றி

 16. V. SURESH

  முதலில் ஒரு உண்மை தெரியுமா? பெரும்பாலும் தியேட்டர் டிக்கெட்டில் கட்டணம் போடுவதில்லை.எப்படி இவர் நஷ்ட்டம் என்று சொல்லுகிரகிரர்கள் லிங்கா படத்தை என்னுடுய நண்பர்கள் திருச்சியில் பார்த்தனர் அவர்கள் வாங்கிய டிக்கெட்டில் கட்டணம் குறிப்பிடவில்லை.இது ஒரு உதாரணம் ஆனால் இந்த கைக்கூலி கணக்கு வைத்து இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு வருகிறார்.

 17. arulnithyaj

  அண்ணா திரும்பவும் இந்த கொசுக்கள் ஆரம்பித்து விட்டன உண்ணாவிரதம் அது இது என்று ..இதற்கு பின்னால் ஆளும் கட்சியும் இருக்கிறதோ என்று சந்தேக பட வேண்டியிருக்கிறது. உங்கள் பார்வை என்ன அண்ணா?

 18. Rishi

  தலைவரை போல 234 பேரை கண்டு பிடிப்பது கடினம். தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல. பெரும்பான்மை பத்திரிக்கையாளர்கள், பிராந்திய கட்சிகள், தமிழமைப்புகள் ஏதிர்ப்பார்கள். என் ஓட்டு தலைவருக்கு தான்.

 19. குதிரை மணி

  ‘லிங்கா’ இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு
  இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

 20. ராஜ்குமார்

  அம்மா உம்ம் அம்மா வின் கைக்கூலி சிமான் விரித்த வலையில் விழுந்த லிங்கா உம்ம் ரஜினி உம்ம். அரசியல் நாடகம் புரிதியாத ரஜினி உம்ம் ரஜினி ரசிகனும். அய்யோ பாவம். அப்பா ஒழிக்க விஜயகாந்த் பயன்படுத்திய அம்மா ரஜினி யா ஒழிக்க விஜய் யா பயன்படுத்த தயாரா இருகாங்க . வாட் அ பன் வி not

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *