BREAKING NEWS
Search

தமிழக மக்களுக்கு நல்லதையே செய்வார் ரஜினி! – அண்ணன் சத்யநாராயணா பேட்டி

தமிழக மக்களுக்கு நல்லதையே செய்வார் ரஜினி! – அண்ணன் சத்யநாராயணா பேட்டி

unnamed (2)

திருச்சி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார், நல்லதையே செய்வார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 65-வது பிறந்த நாளையொட்டியும், அவர் நடித்து வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள லிங்கா படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளித்தேர் இழுத்து தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நல்லப்படியாக வெளியாக வேண்டும், எவ்வித இடையூறுமில்லாமல் மக்கள் அப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவும், ரஜினியின் பிறந்த நாளையொட்டியும் ராகவேந்திரர் கோயிலில் பிரார்த்தனை செய்தேன்.

தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் ரஜினியின் மனதில் இருக்கிறது.  தமிழக மக்களை அவர் மறக்கமாட்டார். தமிழக மக்களின் குழந்தை ரஜினி. அவர் தமிழக மக்களுக்கு  நல்லது செய்வார், நல்லதையே செய்வார்.
அரசியல் பிரவேசமா:  ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு அது சரிபடாது. அவர் நேர்மையானவர். சத்தியத்தின்படி  நடக்கிறவர். அரசியலில் இது சாத்தியம் இல்லை.

unnamed (1)

நதிநீர் இணைப்புத் திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டவுடனேயே, தான் வழங்குவதாக அறிவித்த  ரூ. 1 கோடி நிதியை ரஜினிகாந்த் உடனடியாக வழங்குவார், லிங்கா திரைப்பட வெளியிட்டிற்கு பின்னர் ரசிகர்களை அவர் நிச்சயம் சந்திப்பார்.  இன்னும் 4படங்களில் அவர் நடிக்க உள்ளார். லிங்கா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்.

புதிய அணை விவகாரம்: கர்நாடக அரசு காவிரியில் புதிய அணை கட்டுவது குறித்த கேள்விக்கு,  அந்த அரசும் (கர்நாடகம்) அணை கட்டுகிறது, இங்கேயும் அணை கட்டுகிறார்கள். எல்லோருக்கும் தண்ணீர் தேவை. நியாயமாக போக வேண்டும்,” என்றார் அவர்.

தேர் இழுக்கும் நிகழ்வில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் மன்றத் தலைவர் எஸ்.கர்ணன், துணைத் தலைவர் ராஜா, செயலர் ராயல் ரம்பா செந்தில், அமைப்பாளர் தென்னூர் உதயா, ராயல் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-என்வழி
9 thoughts on “தமிழக மக்களுக்கு நல்லதையே செய்வார் ரஜினி! – அண்ணன் சத்யநாராயணா பேட்டி

 1. Deen_uk

  அணை குறித்த விசயத்தில் திரு சத்யநாராயணா அவர்கள் கூறிய கருத்தை வேறு விதமாக இணையதள செய்திகளில் படித்தேன்,இதற்காகவே காத்து கொண்டிருக்கும் கூட்டத்திற்கு தலைவரை விமர்சிக்க நல்ல தீனி கிடைத்துள்ளது..மேலும் ஒரு வாரம் பத்திரிக்கை வியாபாரம் அமோகமாக நடக்கும்!! வழக்கம் போல தலைவர் தான் பாவம்..அவரும் எவ்வளவு தான் அமைதியாக இருப்பார்..ஒரு மனிதனை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல.வழக்கம் போல இந்த செய்தியை எப்படி திரித்து எழுதுகிறார்கள் என பார்ப்போம்!

 2. rajagopalan

  Is he supporting dam construction by Karnataka? Y this statement when the movie is going to release. This will create unnecessary ப்ரொப்லெம்ச்
  problems

 3. baba

  ஹலோ வினோ…ஏன் உங்களின் தட்ஸ்தமிழில் இந்த பேட்டி தவறான செய்தி போட்டு இருக்கிறார்கள்…ஏன் இப்படி எல்லா பத்திரிகையும் தலைவருக்கு எதிராக செய்தி பரப்புகிறார்கள்…

 4. rajagopalan

  But from this interview, one thing is clear… Thalaivar wont come to politics… as expected….

 5. gandhidurai

  ஆமா தட்ஸ் தமிழ் ல் செய்தியை வேறமாதிரி போட்டுருக்காங்க . இன்னிக்கு தலைவரோட அண்ணன் மறுப்பு தெரிவிச்சதாவும் போட்டுருக்காங்க உங்க பதிவை பார்த்தபின்புதான் கொஞ்சம் நிம்மதி. இல்லைனா இதுக்கும் கூட்டமா வந்துருவாங்க கோடி பிடிச்சுகிட்டு .

  வினோ : நீங்க தட்ஸ் தமிழ் லா இருக்கீங்க .

 6. chozhan

  பேட்டி முழுமையில்லை, அணை குறித்த வரிகள் சரியாக/முழுமையாக எழுதவில்லை, ஜெயா டிவி செய்தி போல இருக்கு.

 7. chozhan

  ONEINDIA நியூஸ் : ‘//தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் வேண்டும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் வேண்டும, தமிழ் நாட்டிலும் தண்ணீர் கேட்கிறார்கள், கர்நாடகத்திலும் தண்ணீர் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய அணைகள் மூலம் இரு மாநில மக்களும் நன்மை அடைவார்கள்’ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  ஊடகங்களில் வெளியான சத்தியநாராயணாவின் பேட்டி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட சத்தியநாராயணா, மன்னிப்பும் கோரினார்.//

  இதைத்தான் நீங்களும் போட்டு இருக்கவேண்டும்,

 8. Manoharan

  ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினியை தவிர மற்றவர்கள் பேசாமல் இருப்பதே நல்லது…இவருக்கு இது வேண்டாத வேலை …இவர் ஒன்று சொல்லப்போக அது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம்…இது தேவையில்லாமல் ரஜினியை டென்ஷனாக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *