BREAKING NEWS
Search

ஓம் 3 டி தெலுங்குப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்! – சிறப்புப் படங்களுடன்…

ஓம் 3 டி  தெலுங்குப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

rajinikanthabout-om3d1 copy

ன்னடா… கொஞ்ச நாளா தலைவர் ஸ்டில்ஸ் எதுவும் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு… இதோ அவரது லேட்டஸ்ட் படங்கள்.

thalaivar-spl copy

தெலுங்கில் தயாராகியுள்ள ஓம் 3 டி படத்தை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்துப் பாராட்டியபோது எடுத்த படம்.

என்டி ராமாராவ் பேரனும், நடிகரும் தயாரிப்பாளருமான கல்யாண் ராம் நடித்து தயாரித்துள்ள படம் ஓம். தெலுங்கில் தயாராகியுள்ள முதல் 3 டி படம் இது.

இந்தப் படம் தெலுங்கில் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை ரஜினி ரீமேக் செய்யப் போகிறார் என்றெல்லாம் சில தினங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் சென்னையில் ரஜினிக்காக இந்தப் படத்தை பிரத்யேகமாகத் திரையிட்டார் கல்யாண் ராம். அவருடன் என்டிஆர் குடும்பத்தினரும் சென்னைக்கு வந்திருந்தனர்.

ரஜினி தன் குடும்பத்தினருடன் போய் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டினார்.

thalaivar-ohm2 copy

இந்தப் படம் சில இடங்களில் தொழில்நுட்ப ரீதியில் தனது கோச்சடையான் 3டி படத்தை ஒத்திருப்பதாகக் கூறியதோடு, 3டியில் படமெடுத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினாராம் ரஜினி.

இந்த சிறப்புக் காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வீடியோ தொகுப்பு:

 

-என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “ஓம் 3 டி தெலுங்குப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்! – சிறப்புப் படங்களுடன்…

  1. Raj

    அது சரி. ஆனா இப்போ கோச்சடையான் drop-ன்னு செய்தி பரவிட்டு இருக்கு. உண்மையா?

  2. Mahendran

    வினோ,

    கோச்சடயான் படம் கைவிடப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளதே, இது உண்மையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *