BREAKING NEWS
Search

கபாலி டீசர் நல்லாருக்கா.. புடிச்சிருக்கா? – 2.ஓ குழுவினரைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி

‘கபாலி டீசர் நல்லாருக்கா.. புடிச்சிருக்கா?’

 

2.o-kabali

பாலி டீசர் இன்று வெளியானபோது தலைவர் ரஜினிகாந்த் 2.ஓ படத்தின் ஷூட்டிங்கிலிருந்தார்.

காலை 11 மணிக்கு டீசர் வெளியாகிறது என்றதுமே, 2.ஓ செட்டிலிருந்த அனைவரும் அதைப் பார்க்க ஆர்வமாகக் கூடிவிட்டனர். அவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் அமர்ந்து இந்த டீசரைப் பார்வையிட்டார்.

2.o-kabali-2

இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள், 2.ஓ நடிகர்கள் என பலரும் இந்த டீசரைப் பார்த்தனர். பார்த்து முடித்ததும் “கலக்கிட்டீங்க தலைவா” என்று ரஜினியைப் பாராட்டினர்.

உடனே ரஜினி சிரித்தபடி, “டீசர் எப்படி… நல்லாருக்கா.. உங்களுக்கெல்லாம் புடிச்சிருக்கா?” என்று கேட்க, “சான்ஸே இல்ல சார்… அதிரடி மாஸாக உள்ளது.. பிரமாதமான ட்ரைலர் சார்,” என அவர்கள் பதிலளித்தனர்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *