BREAKING NEWS
Search

கோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..? – பாக்யராஜை அதிரவைத்த ரஜினி

கோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..? – பாக்யராஜை அதிரவைத்த ரஜினி

p25

சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது தலைவர்தான்.

அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான்.

ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ… அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை.

சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

பாபா படம் வெளியானபோதே கிட்டத்தட்ட இந்த முடிவை எடுத்திருந்தார். நண்பர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, மூன்றாண்டுகள் கழித்து சந்திரமுகியை வெளியிட்டார்.

இப்போது மீண்டும் இதே போன்ற கேள்வியை கேட்டு வருகிறார்.

ரஜினி மிகவும் மதிக்கும்.. மனம் விட்டுப் பேசும் வெகு சில திரையுலகப் பிரமுகர்களில் ஒருவரான கே பாக்யராஜ் சமீபத்தில் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியைச் சந்தித்த போது அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் பாக்யராஜ் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னோட பத்திரிகையாள நண்பர் தமிழ்வாணன் அவரோட மனைவி குழந்தைகளோட என் வீட்டுக்கு வந்திருந்தார். ‘என் பெண் குழந்தைக்கு பிறந்த நாள்… நீங்க ஆசிர்வதிக்கணும்’னு சொன்னார். நானும் உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தேன்.

ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தவர், ‘சார் என்னோட குழந்தையை ரஜினி சார் ஆசிர்வாதம் செய்யணும். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்’னு கேட்டார். பொதுவாக நான் யாரையும் ரஜினியிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திப் பழக்கம் இல்லை. ஆனாலும், என் நண்பர், குழந்தை சமாசாரத்தைச் சொன்னதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ரஜினிக்கு போன் செய்தேன்.

மறுமுனையில் பேசின ரஜினி, ‘என்ன சார் இப்படி சொல்றீங்க! நீங்க இதுமாதிரி எல்லாம் கேட்டதே இல்லையே… நான் வீட்லதான் இருக்கேன் அழைச்சுட்டு வாங்க!’ என்றார்.

நான் அந்தப் பத்திரிகையாளர் குடும்பத்துடன் ரஜினி வீட்டுக்குப் போனேன். குழந்தையை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டு, ‘வாங்க கொஞ்சம் பேசலாம்’னு தனியாக அழைச்சுகிட்டுப் போனார்.”

” ‘தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…’ என்று படபடன்னு பேசினார் ரஜினி. நான் அதிர்ந்துட்டேன்.

‘என்ன ரஜினி திடீர்னு இப்படிப் பேசுறீங்க… உங்களுக்கு என்னாச்சு? உங்ககூட ஆரம்பத்துல இருந்து சினிமாவுல நடிக்க வந்தவங்க நிறைய பேர் இப்போ ஃபீல்டுலயே இல்லை. இருக்கிற சிலரும் அப்பா, சித்தப்பான்னு சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ இருந்து இப்போ வரைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது நீங்க மட்டும்தான். இந்தப் பெருமையும் புகழும் யாருக்கும் கிடைக்காது.

உங்க உதட்டுல இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தமிழ் மக்கள் ரசிச்சு ரசிச்சு சந்தோஷப்படுறாங்க. இப்போ எதுக்கு நீங்க நெகட்டிவா யோசிக்கிறீங்க? ‘கோச்சடையான்’ வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்’னு சொன்னேன்.

அதுக்கு ரஜினி, ‘உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க’னு கேட்டு குழந்தை மாதிரி சிரிச்சாரு,” என்று கூறியுள்ளார்.

நன்றி: விகடன்
5 thoughts on “கோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..? – பாக்யராஜை அதிரவைத்த ரஜினி

 1. r.v.saravanan

  ச்சடையான்’ வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்’னு சொன்னேன்.

  உலகெங்கிலுமுள்ள ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஆசையை ரஜினி முன் வைத்துள்ளார் பாக்யராஜ் அவர்கள்

 2. மிஸ்டர் பாவலன்

  //உலகெங்கிலுமுள்ள ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஆசையை ரஜினி முன் வைத்துள்ளார் பாக்யராஜ் அவர்கள்//

  பாக்யராஜ் மிகச் சிறந்த கதையமைப்பாளர்! நல்ல வசன கர்த்தாவும்
  கூட. அவர் இயக்கத்தில் வந்த தாவணிக் கனவுகள் என்ற படத்தில்
  நடிகர் திலகம் அவர்களுக்கே ஒரு புதிய பரிமாணத்தை காட்டி
  இருந்தார். ‘ஒரு கைதியின் டைரி’ படம் கமல் ஹாசனுக்கு பெரும்
  திருப்பத்தை தமிழிலும், அதன் ஹிந்தி ரீமேக் அமிதாபிற்கு பெரும்
  திருப்பத்தையும் கொடுத்தது. ரஜினி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர்
  கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார். பாக்யராஜ் கருத்துக்கு நன்றி!
  (கமல் ஹாசன் ரஜினிகாந்த்தை தனது போட்டியாளராக சீரியஸாக
  சொன்னாலும் அது நகைச்சுகை கருத்தாகவே அவர் ரசிகர்ளுக்கு
  தோன்றுகிறது! விஸ்வரூபம் படப் பிரச்சினையின் போது அறிக்கை
  விட்டு ரஜினி உதவிக் கரம் கொடுத்தது பாராட்டத் தக்கது)

  நன்றி – பாக்யராஜ் அவர்களே!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. Rajan

  //உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க//

  தலைவா இவர்கள் மட்டும் இல்லை அனைவரும் இதை தான் சொல்வார்கள் ஏனென்றால் அது தான் உண்மை

 4. குமரன்

  இந்தச் செய்தியின் தலைப்பை பிற பத்திரிகைகளில் முதல் முறை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. முழுவதும் படித்தபின் மூச்சு விட்டேன்.

  மிஸ்டர் பாவலன் அவர்களே,
  கமல் உச்சத்தில் இருந்தபோது (பதினாறு வயதினிலே, சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும் முதலிய படங்கள்) ரஜினி அவருக்குப் போட்டியாளர்தான். கமலை ஓவர்டேக் செய்து அவர் உச்சத்தைத் தொட்டபின் அவருக்குப் போட்டியாளர் என்று ஒவ்வொருவரும் தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு வடிவேலு போல வண்டியில் ஏறினாலும், ரஜினிக்குப் போட்டியாளர் என்று சொல்ல உண்மையான தகுதி படைத்தவர் கமல் மட்டுமே.

 5. மிஸ்டர் பாவலன்

  //// மிஸ்டர் பாவலன் அவர்களே,
  கமல் உச்சத்தில் இருந்தபோது (பதினாறு வயதினிலே, சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும் முதலிய படங்கள்) ரஜினி அவருக்குப் போட்டியாளர்தான். /// (குமரன்)

  குமரன் அவர்களே.. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கமல்
  வில்லனாக நடித்தார்! பதினாறு வயதினிலே படம் வந்த போது கமலுக்கு
  பெரிய ஸ்டார் அந்தஸ்து இல்லை. அப்போது சிவாஜி, எம்.ஜி.ஆர் தான்
  உச்சத்தில் இருந்தனர். நினைத்தாலே இனிக்கும் படம் வந்த அதே
  சமயம் ரஜினியின் ‘ப்ரியா’ படம் இளையராஜாவின் stereo இசையில்
  வந்தது. இது சமயம் இருவரும் போட்டியாளர்களாக இருந்தது உண்மை.

  //ரஜினிக்குப் போட்டியாளர் என்று சொல்ல உண்மையான தகுதி படைத்தவர் கமல் மட்டுமே.///

  நல்ல பாயிண்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *