BREAKING NEWS
Search

‘கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்’ – மெல்லிசை மன்னர் உடலுக்கு தலைவர் ரஜினி நேரில் அஞ்சலி!

‘கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்’ – மெல்லிசை மன்னர் உடலுக்கு தலைவர் ரஜினி நேரில் அஞ்சலி!

IMG_8245

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்பட்ட எம்எஸ் விஸ்வநாதன் இன்று காலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.

சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எம்எஸ்வி உடலுக்கு ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு வந்தார்.

IMG_8242
அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் திரை இசையின் சிகரம்… ஒரு துறவி போல வாழ்ந்தவர். எம்ஜிஆர் சிவாஜியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். கண்ணதாசன், வாலி போன்றவர்களைப் பாராட்டியவர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். அனைவருடனும் நன்கு பழகக் கூடிய, கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்,” என்றார்.

எம்எஸ்வியும் ரஜினியும் கடைசியாகப் பணியாற்றிய படம் சிவப்புச் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




3 thoughts on “‘கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்’ – மெல்லிசை மன்னர் உடலுக்கு தலைவர் ரஜினி நேரில் அஞ்சலி!

  1. குமரன்

    எம்.எஸ்.வி யின் இசை என்றென்றும் நம்ம்மைக் குளிர்விக்கும். காலம் கடந்து நிற்கும் கலைச் சேவை அவருடையது. நெற்றி நிறைய திருநீறுடன் திகழும் அவரது முகம் என்றும் நம் நெஞ்சை விட்டகலாது.

    பாழாய்ப் போன அரசியல்வாதிகளின் கையில் இருக்கும் அதிகாரத்தால் வழங்கப்படும் பத்மஸ்ரீ முதல் பாரதரத்னா வரையிலான விருதுகள் நாகேஷ், எம்.எஸ்.வி போன்ற மகத்தான கலைஞர்களுக்கு வழங்கப் பட மாட்டா. கள்ளமும் கபடமும் இருந்திருந்தால் 48 வயதில் பத்மஸ்ரீ யும், 41 வயதிலேயே பாரத ரத்னாவும் கூடக் கிடைத்திருக்கலாம். பாரத ரத்னா இப்போது தனது தரத்தை இழந்துவிட்டது.

  2. srikanth1974

    சந்தனமும்,குங்குமமும்,
    அழகை சேர்த்தது உன் நெற்றிக்கு!-உன்

    இசையும்,ராகமும்,வளம் சேர்த்தது
    தமிழ் திரை உலகின் வெற்றிக்கு!

    மண்ணுலகை மகிழ்வித்த இசைமேதையே!-இன்று
    விண்ணுலக பாதை நோக்கிப் பயணித்தாலும்
    இசையை விரும்பும் எல்லோர் செவிகளிலும்,
    எங்கேயும்,எப்போதும்,உன் சங்கீதம்
    சந்தோஷமாய் ஒலித்து கொண்டேயிருக்கும்.

    அமரர்;திரு.எம்.எஸ்.வி.அவர்களின் ஆன்மா சாந்தியடைய
    இறைவனை பிராத்திக்கும்,ஓர்
    இசை பிரியன்.
    ஸ்ரீகாந்த்.ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *