BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்? 

rajini-shankar-2-580x406

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் முடிந்து, அதன் ரிலீஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீடியாவில் உலா வர ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினி லிங்காவை முடித்ததும், தன் அடுத்த படத்தை மீண்டும் ரவிக்குமாருக்கே தரப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஷங்கர் பெயர் அடிபடுகிறது.

இது ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் கதை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தன் படங்கள் தயாராக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றார். அதிக இடைவெளி இல்லாமல், படங்களை சீக்கிரம் எடுத்து வெளியிட வேண்டும் என்ற கருத்தைக் கூறியது நினைவிருக்கலாம். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை வைத்து அவர் எடுத்த சிவாஜி வெளியாக இரண்டு ஆண்டுகள் விடித்தது. எந்திரனுக்கு இரண்டரை ஆண்டுகளானது.  இப்படி காத்திருப்பது பிடிக்கவில்லை என்று ரஜினி கூறினார்.

எனவே ரஜினி – ஷங்கர் இணையும் படம் ஒரு ஆண்டுக்குள் முடிகிற மாதிரி எடுக்கப்படும் என்று தெரிகிறது. இது ரோபோவின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதையா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஷங்கர்?

  1. srikanth1974

    இந்தியத் திரையுலகம் மீண்டும் மிரளட்டும்.

  2. குமரன்

    மிக நல்ல செய்தி. இன்னும் ஒரு அருமையான சூப்பர் படம் உறுதி.

  3. மிஸ்டர் பாவலன்

    “கோச்சடையான்” பட முடிவில் “தொடரும்” எனப் போடப்பட்டதால்
    இந்த படத்தின் தொடர்ச்சி சௌந்தர்யா அடுத்து இயக்கலாம் என்று
    கமல் ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம்.. “கோச்சடையான்-2” படம் அதிக
    technology உடன் சௌந்தர்யா எழுதி இயக்கினால் சிறப்பாக இருக்கும்.
    இதன் பின் ரஜினி ஷங்கர் படத்தில் நடிப்பார் என நம்புகிறோம்.. நன்றி..

    == மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *