BREAKING NEWS
Search

‘மண்ணின் மைந்தர்!’

‘மண்ணின் மைந்தர்!’

rajini-ragavendra-mandapam
“என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்’ என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.

எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். அதே மண்ணில்தான் நானும் பிறந்தேன். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் உள்ளது.

நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர். ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமண மகரிஷி ஒரு தமிழர்.

சிவாஜிராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து, எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.

வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி.

என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.

உயிரினும் மேலான தமிழ் ரசிகர்கள்

எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.

அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்!”

– சூப்பர் ஸ்டார் ரஜினி, 14 டிசம்பர்,1989

குறிப்பு: ரஜினியின் இந்தக் கேள்விக்கு அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி சொன்ன பதில்… ‘இந்த மண்ணின் மைந்தர்’!

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *