BREAKING NEWS
Search

ஜெ மேடையோ, கலைஞர் மேடையோ.. ரஜினி எனும் நேர்மையாளர் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

நேர்மையின் மறுபெயர் ரஜினி!

ஜினியை ஏன் விமர்சனங்கள்.. எதிர்ப்புகள் ஒன்றும் செய்வதில்லை தெரியுமா? அது அவரது அதிகபட்ச நேர்மை.. ‘உன்னால் எனக்கொன்றும் ஆகவேண்டியதில்லை… என்னால் உனக்கு ஆகப்போவதும் ஒன்றுமில்லை. எனக்கு நான் நேர்மையாக இருந்தால் போதும்,’ என்ற நினைப்புதான் அவரை அவராகவே இருக்க வைக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் பேசிய பேச்சு!

வரிசையாகப் பேசிய எல்லோருமே – இளையராஜா தவிர – கொஞ்சமல்ல, ரொம்பவே செயற்கையாக, ஒருவித பயத்துடனே பேசிக் கொண்டிருக்கையில், ரஜினியின் பேச்சில் அப்படி ஒரு யதார்த்தம்.

‘ரஜினி – கமல் காம்பினேஷன்’ காலத்துக்குப் பின் வந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் பில்லா, தீ, போக்கிரிராஜா, பொல்லாதவன் போன்றவற்றுக்கெல்லாம் எம்எஸ்விதான் இசை.

கடைசியாக இருவரும் இணைந்த படம் முக்தா சீனிவாசன் இயக்கிய சிவப்பு சூரியன்.

எம்எஸ்வி – ராமமூர்த்தி பற்றி அலங்காரமாக எதுவும் பேசவில்லை ரஜினி. ஆனால் சாகாவரம் பெற்ற பிறவிகள் வரிசையில் அவர்களை வைத்துவிட்டார்.

பொதுவாக அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நிற்கும் மேடை அரசியலாகிவிடுகிறது.. அவர் பேச்சிலும் அரசியல் தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால் நேற்றைய பேச்சு நிச்சயம் அரசியல் அல்ல!

இந்த மேடையில் இறப்புக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், கலைஞர்கள் பற்றிப் பேசும்போது, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன் வரிசையில் எம்எஸ்வியையும் வைத்த ரஜினி, மேடைக்கு ஒரு பேச்சு என்பது தன் வழக்கமல்ல என்பதை உணர்த்த நினைத்தாரோ.. அல்லது அவருக்கே உரிய நேர்மையின் வெளிப்பாடோ… இந்த தலைவர்கள் வரிசையில் கருணாநிதியையும் அவர் வைத்தார். அதுவும் அரசியலில் கருணாநிதியை தனது ஜென்ம எதிரியாக நினைக்கும் ஜெயலலிதா முன்னிலையில்.

கருணாநிதியின் பெயரை ரஜினி அந்த மேடையில் உச்சரித்தபோது, அதுவரை எல்லாவற்றுக்கும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். காமிரா முதல்வர் முகத்தைக் காட்ட, அவர் ஆர்வத்துடன் ரஜினி பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

தான் அனைவருக்குமே பொதுவானவன்தான். யார் நல்லது செய்தாலும் சரி.. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை அவர் பகிரங்கமாகவே உணர்த்தியிருக்கிறார் இதன் மூலம்.

ஒரு தலைவரின் மேடையில், மாற்றுக் கட்சித் தலைவரைப் புகழ்வது.. பாராட்டுவது ரஜினிக்குப் புதிதல்ல. ஏன், ஜெயலலிதாவே நேருக்கு நேர் நின்று விரல் நீட்டி, ‘தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே’, என்றவர்தான் ரஜினி.

அதன் பிறகு, கருணாநிதி முதல்வராக வீற்றிருந்த ‘சிவாஜி வெள்ளி விழா மேடை’யில், மறக்காமல் ‘இந்தப் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி என்னைப் பாராட்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று ரொம்ப கூலாக சொன்னார்!

அதே கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான், ‘உங்க பேரைச் சொல்லி மிரட்டிக் கூப்பிடறாங்க,” என்று அஜீத் முறையிட்டபோது, கருணாநிதியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்.

அந்த விழாவிலேயே, ஜெயலலிதா திரையுலகினருக்காக நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் சொன்னவர் ரஜினி.

சிவாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அப்போதுதான் திமுகவை எதிர்த்து அரசியல் நடத்த ஆரம்பித்திருந்த விஜயகாந்தை வாழ்த்தவும் ரஜினி தவறியதில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. அது இளைஞன் விழா. சத்யம் அரங்கில் முதல்வர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த நேரம். வெளியே பேய் மழை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கிட்டத்தட்ட 1 வார கால மழை. மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தன் முறை வந்தபோது, “முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும். வெளிய மக்கள் படாத பாடுபட்டுக்கிட்டிருக்காங்க.. சாப்பாடு, கரண்ட், ரோடு வசதியில்லே.. நான் அதிக நேரம் பேச எடுத்துக்கல,” என்று மகா நாகரீகத்துடன் இடித்துக் காட்டியவர் இதே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!

ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிப்பவர்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் விஷயம் இது.

ஒரு முறை ரஜினி இப்படிக் குறிப்பிட்டார்…

“ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்னு கமிட் பண்ணிக்கிட்டா, அங்க போயி என்ன பேசறதுண்ணு நிறைய யோசிச்சு வைப்பேன். காலையிலே வரும்போதும், மேடையில் அமர்ந்திருக்கும் போதும்கூட  நினைவிருக்கும். ஆனா, மைக்கைக் கையிலெடுத்ததும், நான் நினைச்சிட்டிருந்த அத்தனையும் எனக்கு மறந்துடும். ப்ளாங்க்.. அப்போ என் மனசுல படறதை, உண்மையா நினைக்கிறதை டக்குனு பேசிடுவேன்!”

-நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!

-வினோ
என்வழி ஸ்பெஷல்

சிறப்பு படங்களுக்கு…
64 thoughts on “ஜெ மேடையோ, கலைஞர் மேடையோ.. ரஜினி எனும் நேர்மையாளர் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

 1. P.J.Peer Sidhique

  அதுதான் எங்கள் தலைவர்
  வினோ சார்

 2. S.ALAVUDEEN

  நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!
  நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!
  நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!
  நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!
  நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!

 3. கார்த்திகேயன்

  தலைவா…என்ன தவம் செய்தேனோ நான் உன் ரசிகனாக இருக்க….

 4. மு. செந்தில் குமார்

  ரஜினி ரசிகர் அல்லாதவர்களுக்கு, ரஜினியை சரியாக புரிந்துகொள்ளாதவர்களுக்கு / கவனிக்கதவர்களுக்கு உரிய அறிய கட்டுரை.

  நன்றி வினோ சார்.

 5. arulnithya

  இந்த கட்டுரை நம் மனதில் உட்கார காரணம் இது உண்மையை பற்றி பேசுகிறது.. நேர்மையை பற்றி பேசுகிறது, அதனால் நெஞ்சுக்கு மனசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. அதனாலேயே தலைவர் மனசுக்கு மிக மிக நெருக்கமாக இருக்கிறார். நானும் என் நண்பனும் பேசும் பொது சொல்வோம், தலைவர் அரசியலுக்கு வந்தால் மாற்று கட்சிக்காரராக (எதிர கட்சி இல்லை ஏன்ன தலைவருக்கு யாரையும் எதிரியா பார்க்க தெரியாது) இருந்தாலும் நல்லவராக இருந்தால் அவரை தனது அமைச்சரவையில் சேர்த்து கொள்ளுவார்.. இது தான் உண்மையில் தலைவரின் இயல்பு

 6. தேவராஜன்

  போங்க தலைவா. இப்படியெல்லாம் பேசி, உங்க உயர்ந்த பண்பைக் காண்பித்து, அரசியலுக்கு வராமல் வெறுப்பேத்தறீங்க. உங்களைப் போன்றவர்கள் ஆட்சியில் இருந்தா இந்த நாடு வளருதோ இல்லையோ, குறைந்தபட்சம் அரசியல் நாகரீகமாவது நல்லா இருக்கும். வாங்க தலைவரே!

 7. Kalpauk

  மிக அருமையான பதிவு மற்றும் பதில்….
  .
  நானும் நேற்றைய நிகழ்ச்சயில் பார்த்துகொண்டு இருக்கும்போது தலைவர் கலைஞர் பற்றி குறிப்பிடும்போது ஒருவித தர்மசங்கடத்து ஆளானனேன்…..தலைவரின் தையரியத்தை பாராட்டினாலும்…..அவர் என்ன பேசுவர் அதை எப்படி விமர்சனம் செய்யலாம் என்ற ஒரு கூட்டம் இருக்குமே…அதை எப்படி சமாளிப்பது என்று…உங்களின் பதிவில் தெளிவாக கூறிவிடீர்கள்….மிக்க நன்றி திரு.வினோ அவர்களே….அதிலும் அந்த சத்யம் அரங்கம் விழா (எனக்கு) புதியது….இந்தபர்த்திவிற்காக நான் கலையில் இருந்து காத்துகொண்டுருக்கிறேன்…..நன்றி….

  .

  கல்பக்…..

 8. seeni vasan

  புரட்சி தலைவி முன்னாடி கலைஞர் பத்தி பேச ஒரு தைரியம் வேணும் . அது தலைவர் க்கு மட்டும் தான் இருக்கு .. சாகா வரம் பட்டியலில் நீங்கள் தான் நம்பர் ஒன் தலைவா,,,.

 9. தினகர்

  இந்த அடிப்படை உண்மைகள் கூட தெரியாமல், ரஜினி கலைஞரை பற்றி குறிப்பிட்டது தவறுன்னு ஒரு சிலர் கிளம்பிட்டாஙகளே. அதுக்கு சாட்சியா திருவள்ளுவரை யெல்லாம் இழுக்க வேண்டிய நிலை. அதே வள்ளுவரைக் கேட்டால் கூட

  ”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
  தெய்வத்துள் வைக்கப் படும்”

  என்று நான் எழுதியதே 2000 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் ரஜினியை எண்ணிதான் என்று சொல்லுவார்.

 10. R O S H A N

  //ஏன், ஜெயலலிதாவே நேருக்கு நேர் நின்று விரல் நீட்டி, ‘தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே’, என்றவர்தான் ரஜினி//

  ….இந்த நிகழ்ச்சி பத்தி எனக்கு அவ்ளோவா தெரியல……..96 election timela nu nenaikkiren……….கொஞ்சம் விளக்குங்க வினோ…….

 11. மிஸ்டர் பாவலன்

  இங்கு வரும் பதில்களை நான் பார்த்த வரையில் ரஜினிகாந்த் அவர்கள்
  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களைப் பாராட்டியதை
  விட்டு விட்டு கலைஞரைப் பாராட்டியதையே (JJ presence -ல்) மிகவும்
  மையப் படுத்தி எழுதி வருகிறார்கள். சோ. ராமஸ்வாமி ரஜினிகாந்த்தின்
  நெருங்கிய நண்பர். துக்ளக்கில் ரொம்ப வருடங்களாக அரசியல் எழுதி
  வருபவர். சூப்பர் ஸ்டார் ” வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும்
  ஏற்படுத்தாது” என கலைஞருக்குச் சூட்டிய பாராட்டு சரியானதா, என்ன என
  ஒரு நாள் சோ துக்ளக்கிலோ, இல்லை, துக்ளக் ஆண்டு விழா மேடையிலோ
  கருத்து தெரிவிப்பார் என நம்புகிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 12. enkaruthu

  /ஒரு தலைவரின் மேடையில், மாற்றுக் கட்சித் தலைவரைப் புகழ்வது.. பாராட்டுவது ரஜினிக்குப் புதிதல்ல. ஏன், ஜெயலலிதாவே நேருக்கு நேர் நின்று விரல் நீட்டி, ‘தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே’, என்றவர்தான் ரஜினி.//

  //அதன் பிறகு, கருணாநிதி முதல்வராக வீற்றிருந்த ‘சிவாஜி வெள்ளி விழா மேடை’யில், மறக்காமல் ‘இந்தப் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி என்னைப் பாராட்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று ரொம்ப கூலாக சொன்னார்!//

  //சிவாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அப்போதுதான் திமுகவை எதிர்த்து அரசியல் நடத்த ஆரம்பித்திருந்த விஜயகாந்தை வாழ்த்தவும் ரஜினி தவறியதில்லை.//

  //அதே கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான், ‘உங்க பேரைச் சொல்லி மிரட்டிக் கூப்பிடறாங்க,” என்று அஜீத் முறையிட்டபோது, கருணாநிதியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்.//
  //அந்த விழாவிலேயே, ஜெயலலிதா திரையுலகினருக்காக நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் சொன்னவர் ரஜினி.//

  நம் தலைவரின் நேர்மைக்கு வழு சேர்க்கும் வரிகள் சார் .நன்றி

 13. Kumar

  காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இவர்கள் வரிசையில் ஜெயாவும் கருணாவும்?உலக அசிங்கம் இது ….

  காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற மக்கள் தொன்றாற்றிய தலைவர்களுக்கு இதை விட ஒரு பெரிய அவமானம் எதுவும் வேண்டாம்….

  Keeping the most disgraceful politicians (Jaya and Karuna) in the same league with gem of leaders is disgusting….

  Thalaivar should’ve thought twice before uttering this line, mere thought of keeping these wicked politicians with those gems itself disgraceful…..

 14. Krishna

  எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ரஜினி “புரட்சி தலைவி அவர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச தலைவராகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னதை ஜெயா டிவியில் பார்த்தேன்.

 15. மிஸ்டர் பாவலன்

  //எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ரஜினி “புரட்சி தலைவி அவர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச தலைவராகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னதை ஜெயா டிவியில் பார்த்தேன்.// (கிருஷ்ணா)

  முன்பு நான் ‘புரட்சி தலைவி’ என்ற டைட்டிலில் முதல்வரைப் பற்றி
  வலையில் எழுதிய போது இங்கு வழக்கமாக எழுதி வரும் தி.மு.க.
  தொண்டர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டேன்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 16. raja

  கருணாநிதியையும் , ஜெயாவையும் காமராஜருடன் ஒப்பிடுவதுதான் நேர்மையா? காமராஜர் பாவம் …..

 17. Jay

  பாவலன் அவர்களே நீங்கள் ஆதிமுக தொண்டர் என்பதை முதலில் ஒப்புகொள்ளுங்கள்.

 18. s venkatesan, nigeria

  திரு வினோ எனது முந்தைய கமெண்ட் தயவு செய்து எடுத்து விட்டு இதை அனுமதியுங்கள்.
  //இங்கு வழக்கமாக எழுதி வரும் தி.மு.க.
  தொண்டர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டேன்.// தாங்கள் நடுநிலையாளர். திமுக சார்பாக எழுதினால் தொண்டர்களா? திமுக சார்பாளர்கள் அல்லது திமுக ஆதரவாளர்கள் என்று சொல்லி இருக்கலாம்.

 19. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய நண்பர் வெங்கடேசன் அவர்களே:

  நீங்கள் சொன்னது சரி. திமுக ஆதவாளர்கள் என்று தான் நான்
  எழுதி இருந்திருக்க வேண்டும். தேர்தல் சமயம் அது. என் பங்கிலும்
  தவறு இருந்தது. நிறைய பட்டப் பெயர்கள் சேர்த்து எழுதினேன்.
  அவ்வாறு ஒரு வலையில் எழுதி இருந்திருக்க கூடாது. பின்பு
  அனைவருக்கும் தெரிந்தது போல் – அரசியலே வேண்டாம் – என்று
  ஒதுங்கி விட்டேன். நான் இதுவரை ஓட்டு போட்டது கூட இல்லை ! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 20. R. Hari hara krishnan

  C M சொன்னாலும் கேட்காத ஒரே ஆள் “சோ” என்று தலைவர் சொன்னார். அதை போலவே, யார் மேடையாக இருந்தாலும் அவர்களுக்காக தன் கருத்தை மாற்றாதவர்கள், நம் நாட்டில் ஒரு சிலரே!

  பாரதியார்
  பெரியார்
  ராஜாஜி
  ரஜினி
  சோ

  மற்றவர்களுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம், தன் கொள்கையை விட்டுகொடுக்கதவர்கள் இவர்கள். வேறு யாரேனும் இருந்தால் சொல்லலாம்.

  ரஜினி(நேர்மை)யாக இரு,

  “ரஜினி எனப்படுவது யாதெனின்
  யாதொன்றும் தீமை இல்லாத சொலல்” நன்றி : திருவள்ளுவர்

 21. Kumar

  //எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ரஜினி “புரட்சி தலைவி அவர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச தலைவராகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னதை ஜெயா டிவியில் பார்த்தேன்.// (கிருஷ்ணா

  வினோ, தலைவர் இப்படி சொன்னாரா? இப்படி சொன்னதா எங்கயும் படிக்கலை????

  I think thalaivar gets anxious while speaking in stage as he himself openly admitted that, keeping Jaya and Karuna in the same league as Kamarajar, Anna, Periyar and calling Karunanidhi as his ஆருயூர் நண்பன், wishing Jaya to become an international leader…these things doesn’t leave a good taste.

  Better he distance himself from these crooked politicians, they use him for their political mileage, remember Karunanidhi invited Rajini to watch இளைஞன் movie just days before last assembly election and planned to use that photos for DMK campaign….but Rajini made a tactical move by avoiding that and watched the movie after the election….and that was a smart move and that is how he should be careful while speaking in the stages….

 22. enkaruthu

  //முன்பு நான் ‘புரட்சி தலைவி’ என்ற டைட்டிலில் முதல்வரைப் பற்றி
  வலையில் எழுதிய போது இங்கு வழக்கமாக எழுதி வரும் தி.மு.க.
  தொண்டர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டேன்.//

  பாவலன் அவர்களே எங்கள் தலைவர்(கலைஞர் என்று ஆரம்பித்துவிடாதீர்கள் நான் சொன்னது திரு ரஜினிகாந்த்) கட்சியோ அல்லது இயக்கமோ ஆரம்பித்தால் அதில்தான் உறுப்பினர் ஆவேன் என்று வைராக்கியமாக இருப்பவன் நான்.இது ஒன்றே போதும் உங்களை பற்றி நான் ஆரம்பத்திலையே கணித்தது சரிதான் என்பதற்கு.கிருஷ்ணன் சொன்னதே ஒரு காமெடி அதற்க்கு நீங்கள் வேறு ஒரு precaution கமெண்டை வேறு போடுகிறீர்கள்.

  //“புரட்சி தலைவி அவர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச தலைவராகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னதை ஜெயா டிவியில் பார்த்தேன்.//

  ஏங்க கிருஷ்ணன் பின்ன ஜெயா டிவியில் தலைவர் முதல்வர் ஜெயலலிதாவை வைத்துக்கொண்டே தில்லாக கலைஞர் பெயரை சொல்லிய காட்சியையா திரும்ப திரும்ப போடுவார்கள்.

  ஆனால் உங்களுக்கு தெரியுமா கிருஷ்ணன்(உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இது வாரத்துக்கு இரண்டு முறை வரும் “தமிழ்” பத்திரிகையில் இன்று வந்தது) குமுதம் ரிப்போர்ட்டரில் “அதே இடம் உரசிய ரஜினி” என்று தலைப்பில் போட்டுவிட்டு வம்பானந்தா பகுதியில் ஒரு விஷயத்தை அதாவது ரஜினி கலைஞரை பற்றி பேசிய பேச்சை முதல்வர் ரசிகாததால் முதலவர் பேசும்பொழுது ரஜினி இவரை புரட்சி தலைவி என்று குறிப்பிட்ட போதிலும் இவர் ஒரு முறை கூட ரஜினியை superstar என்று இவர் சொல்லவில்லை என்று சொல்லிருக்கிறது.

 23. enkaruthu

  //தொண்டர்களால் மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டேன்.// தாங்கள் நடுநிலையாளர். திமுக சார்பாக எழுதினால் தொண்டர்களா? திமுக சார்பாளர்கள் அல்லது திமுக ஆதரவாளர்கள் என்று சொல்லி இருக்கலாம்.//

  ஒன்னும் இல்லை வெங்கடேசன் பாவலன் அவர்கள் தலைவர் ரசிகர் என்று பொய்யாக நடித்துக்கொண்டே இங்கு அ.தி.முகவின் கொள்கை பரப்பு செயலாராக இருக்கிறார் .அதனால் பாவலன் அவர்களுக்கு எப்பொழுதும் உங்கள் பாடல்கள் அருமை,நீங்கள் பாடலாசிரியராக வரவேண்டும்,நீங்கள் விஞ்ஞானி என்றெல்லாம் போடாமல் மக்கள் ஆட்சியை இந்த அம்மா கையில் கொடுத்தும் அவர்கள் கஷ்டபடுகிறார்கள் என்று இன்றைய எதார்த்தத்தை சொல்லுவதால் நாமெல்லாம் தி.மு.கவின் தொண்டர்களாகத்தான் இவருக்கு தெரியும்.ஆனால் நண்பர்களே இவர் மட்டும் நடுநிலையாளர்.

 24. enkaruthu

  //” வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும்
  ஏற்படுத்தாது” என கலைஞருக்குச் சூட்டிய பாராட்டு சரியானதா, என்ன என
  ஒரு நாள் சோ துக்ளக்கிலோ, இல்லை, துக்ளக் ஆண்டு விழா மேடையிலோ
  கருத்து தெரிவிப்பார் என நம்புகிறேன். நன்றி.//

  பாவலன் அவர்களே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் அதை விட்டு விட்டு எப்பொழுதும் நான் இவரின் கருத்தை எதிர் பார்கிறேன் அவரின் கருத்துகளை எதிர் பார்கிறேன் என்று மற்றவர்களை புகழ்வது போல ஏன் அவர்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்.தலைவரின் உண்மையான ரசிகர்களே இவர் சொல்லுவதை பார்த்தால் என்னமோ நம் தலைவர் எதோ தெரியாமல் கருத்து சொல்லிவிட்டது போலவும் இதற்க்கு இந்த ஜாதி ரீதியாக பதில் தரும் சோ சரியான பதில் தருவார் என்றும் இவர் சொல்லுகிறார் என்றால் இவர் நம் தலைவரை எந்த இடத்தில வைத்திருக்கிறார் இவரின் உண்மையான தலைவியை எங்கே வைத்திருக்கிறார் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

 25. குமரன்

  பல்வேறு நிகழ்ச்சிகளில் ரஜினி எப்படி துணிவாகவும் நேர்மையோடும் இரு வெவ்வேறு துருவங்களைப் பற்றி பொது மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

 26. r.v.saravanan

  நம் தலைவரின் துணிவு வியக்க வைக்கும் ஒன்று

  அவ்வபோது அவர் அதை வெளிபடுத்துவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்

  அவை அனைத்தையும் சேர்த்து அருமையான கட்டுரை தந்துள்ளீர்கள் வினோ

 27. Krishna

  //வினோ, தலைவர் இப்படி சொன்னாரா? இப்படி சொன்னதா எங்கயும் படிக்கலை????//

  இதை படிக்க வேண்டிய அவசியமில்லை. இதை டிவியிலே பலமுறை பார்த்துவிட்டேன். ஜெயா டிவியில் இதை அன்று முழுவதும் திரும்ப திரும்ப போட்டுக்கொண்டிருந்தார்கள்.

 28. Krishna

  //ஆனால் உங்களுக்கு தெரியுமா கிருஷ்ணன்(உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இது வாரத்துக்கு இரண்டு முறை வரும் “தமிழ்” பத்திரிகையில் இன்று வந்தது) குமுதம் ரிப்போர்ட்டரில் “அதே இடம் உரசிய ரஜினி” என்று தலைப்பில் போட்டுவிட்டு வம்பானந்தா பகுதியில் ஒரு விஷயத்தை அதாவது ரஜினி கலைஞரை பற்றி பேசிய பேச்சை முதல்வர் ரசிகாததால் முதலவர் பேசும்பொழுது ரஜினி இவரை புரட்சி தலைவி என்று குறிப்பிட்ட போதிலும் இவர் ஒரு முறை கூட ரஜினியை superstar என்று இவர் சொல்லவில்லை என்று சொல்லிருக்கிறது.//

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரஜினி ஜெயலலிதாவை பார்த்து நடுங்கியிருக்கிறார் என்ற பொருள் வருகிறது. அதனால் தான் எதற்கும் இருக்கட்டும் என்று ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்று குறிப்பிட்டார் என்று சொல்ல வருகிறீர்களா?

 29. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே..வம்பானந்தா, கழுகார் தரும் தலைவரைப் பற்றிய
  தவறான வதந்திகளை ரஜினி ரசிகர்கள் சட்டை செய்ய வேண்டாம்
  என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன், நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 30. மிஸ்டர் பாவலன்

  /// நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரஜினி ஜெயலலிதாவை பார்த்து நடுங்கியிருக்கிறார் என்ற பொருள் வருகிறது. /// (கிருஷ்ணா)

  “என் கருத்து” என்ற பெயரில் எழுதுபவர் இந்தப் பொருளில் சொல்லி இருக்க
  மாட்டார் என நான் நிச்சயம் நம்புகிறேன். அவர் சூப்பர் ஸ்டாரின் மிகச்
  சிறந்த ரசிகர். சூப்பர் ஸ்டார் மீது மிகுந்த பாசமும், நேசமும் வைத்துள்ளவர்.

  உங்களுக்கு “பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய ஒரு புயல் வருகிறது’
  என்ற வானிலை அறிவிப்பை மட்டும் கொடுத்து விட்டுச் செல்கிறேன்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 31. enkaruthu

  //நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரஜினி ஜெயலலிதாவை பார்த்து நடுங்கியிருக்கிறார் என்ற பொருள் வருகிறது. //

  ஒருவர் எந்த அர்த்தத்தில் போடுகிறார்கள் என்பதை கூட உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .இதில் ஒரு குதர்க்கமான கேள்வி வேறு.ஒரு முதல்வரை வைத்துக்கொண்டே முன்னால் முதல்வர் கலைஞரை பற்றி (அதுவும் ஒரு நியாயமான பேச்சுக்கு) பேசி நான் யாராக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் பேசுவேன் என்று தில்லாக பேசிய தலைவரின் பேச்சை அவர் பயந்து நடுங்கிக்கொண்டே பேசுவதை போல் பொருள் வரும்படி யாராவது போடுவார்களா என்ற அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்லை.

  சரி கிருஷ்ணன் நீங்கள் ஜெய டிவியில் தலைவர் ஜெயலலிதாவை புகழ்ந்ததை திரும்ப திரும்ப காட்டுகிறார்கள் என்று நீங்கள் சொன்னதால் நான் இதற்க்கு சில பத்திரிகைகள் அடுத்த நாளே இவர்களுக்குள் உரசல் போன்ற செய்தியும் வருகிறதே என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன்.ஏன் ஜூவியில் கூட அதைப்போலவேதான் செய்திகள் வந்திருக்கின்றன.

  உண்மையாலுமே இந்த தருணத்தில் ஜெயா டிவி க்கு ஒரு நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் ஏனென்றால் எங்கள் தலைவர் ஜெயலலிதாவை பற்றி பேசிய அந்த ஒரு வரியை மட்டும்,திரும்ப திரும்ப போட்டு பாருங்கள் ரஜினி எப்படி ஜெயலலிதாவை புகழ்கிறார் என்று இந்த டிவி சொன்னதில்ருந்தே தலைவர் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று இவர்களும் நம்புகிறார்கள் என்பதற்காக .

  இதிலிருந்தே தெரியவில்லையா கிருஷ்ணன் உங்களுக்கு நல்ல மக்களின் அன்பு தலைவர் என்ற பதிவியை தவிர வேறு எந்த பதவியும் இல்லாத எங்கள் தலைவருக்கு ஜெயலலிதா அவர்கள் தேவை இல்லை.ஆனால் முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு எந்த பதவியும் இல்லாத தலைவர் அவர்களின் பாராட்டு ஜெயா டிவியில் மீண்டும் மீண்டும் போட தேவை.

 32. தேவராஜன்

  “புரட்சி தலைவி அவர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச தலைவராகவும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னதை ஜெயா டிவியில் பார்த்தேன்.//

  -தங்கள் மனதில் உள்ள ஆசையை ரஜினி வாயால் கேட்க ஆசைப்படும் நபர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதவே செய்வார்கள். உண்மையில் ரஜினி இப்படிப் பேசவே இல்லை. தமிழக மக்களுக்கு நன்மை செய்து, இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவியாக வரவேண்டும் என்று அவர் சொன்னார். அதை இஷ்டப்படி திரித்து சொல்லித் திரிகிறார்கள் சில அதிமுக அடிவருடிகள்.

 33. மிஸ்டர் பாவலன்

  ரஜினி பேச்சை முடித்த போது சொன்ன வரிகள்:

  “இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செஞ்சி, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும்…. அதற்கு அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அந்த இறைவன் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்”

  இதில் — “மக்களுக்கு நிறைய சேவை செஞ்சி” – என்பது ஒரு முக்கியமான வரி.
  அதைப் பிரித்து படிக்கக் கூடாது என்பதை நான் ஏற்கிறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 34. தினகர்

  ”எங்கள் தலைவர் ஜெயலலிதாவை பற்றி பேசிய அந்த ஒரு வரியை மட்டும்,திரும்ப திரும்ப போட்டு பாருங்கள் ரஜினி எப்படி ஜெயலலிதாவை புகழ்கிறார் என்று இந்த டிவி சொன்னதில்ருந்தே தலைவர் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று இவர்களும் நம்புகிறார்கள் என்பதற்காக .”

  என்கருத்து அவர்களே, நீங்கள் சொன்ன உண்மை முதல்வருக்கு தெரிந்தால் ஜெயா டிவியில் எத்தனை பேருக்கு கல்தாவோ.. தெரியவில்லையே!..

  பரட்டை ஸ்டைலில் பத்த வச்சிட்டீங்களே என் கருத்து 🙂

 35. மிஸ்டர் பாவலன்

  என் கருத்து, தினகர் <– ஒரே நோக்கில் சிந்திக்கும் நண்பர்கள் போல்
  அவர்கள் கருத்தில் தெரிகிறது. நட்புக்கு மரியாதை செய்யும்
  அவர்களைப் பாராட்டுகிறேன்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 36. Krishna

  //இதிலிருந்தே தெரியவில்லையா கிருஷ்ணன் உங்களுக்கு நல்ல மக்களின் அன்பு தலைவர் என்ற பதிவியை தவிர வேறு எந்த பதவியும் இல்லாத எங்கள் தலைவருக்கு ஜெயலலிதா அவர்கள் தேவை இல்லை.ஆனால் முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு எந்த பதவியும் இல்லாத தலைவர் அவர்களின் பாராட்டு ஜெயா டிவியில் மீண்டும் மீண்டும் போட தேவை.//

  ஜெயா டிவி திரும்ப திரும்ப போட்டு கொண்டிருந்தார்கள் என்று மட்டும் தான் சொன்னேன். இது சம்பந்தமாக எனது கருத்தை இது வரை நான் சொல்லவில்லை. இப்பொழுது சொல்கிறேன், ரஜினி, ஜெயலலிதாவை புகழ்ந்ததும் கருணாநிதியை புகழ்ந்ததும் இரண்டுமே தேவையற்றது. இந்த விழா ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ பாராட்டும் விழா அல்ல. மெல்லிசை மன்னர்களை பாராட்டும் விழா. “இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்ற அளவில் அவர் நிறுத்தி இருக்க வேண்டும். இந்த விழாவுக்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ஆகவே அவரை பாராட்டியதும் பொருத்தமற்றது . மொத்தத்தில் சொதப்பியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

 37. மிஸ்டர் பாவலன்

  குமரன், வினோ, தினகர், ‘என் கருத்து’, மனோகரன், மற்ற நண்பர்களே:

  இந்த வார குமுதம் பத்திரிகையில் – “ஜெ மேடையில் ரஜினி கூத்து!”
  என மிகவும் ஆட்சேபிக்கக் கூடிய கருத்துக்களைக் கொண்டு வந்துள்ள ஒரு
  கட்டுரையின் முதல் வரியே முகம் சுழிக்க வைக்கிறது. “ஊர் ரெண்டு
  பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என ஒரு பழமொழி உண்டு.
  ஆனால் இதை சூப்பர் ஸ்டாரை பற்றி எழுதும் போதா பயன்படுத்துவது?
  குமுதம் கட்டுரை – “ஊர் ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டமோ,
  இல்லையோ, ரஜினிக்கு கொண்டாட்டம் தான்” என ஆரம்பிக்கறது.
  இதைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை என்றாலும் ரஜினி மீது
  மிகுந்த அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு குமுதம் பல தவறான
  தகல்வல்களை சூப்பர் ஸ்டார் மீது தருகிறது என நான் சொல்லவேண்டி
  இருப்பதால் இந்த பதிவை எழுதினேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 38. enkaruthu

  பாவலன் அவர்களே நான் ஆரம்பத்திலிருந்தே சொல்ல வருவது இன்றைய மக்கள் புத்திசாலிகள்.உண்மையாலுமே ஊர் ரெண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டமோ எனக்கு தெரியவில்லை ஆனால் குமுதம் போன்ற பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம்.அவர்கள் ஒரு circulation காக இதை பண்ணுகிறார்கள்.உண்மையாலுமே சொல்கிறேன் இன்று மக்கள் எந்த ஒரு விஷயம் பத்திரிகை சொன்னாலும் அதை ஆராய தொடங்கிவிட்டார்கள்.என்னை பொறுத்தவரை வேண்டும் என்றே கலைஞரை தலைவர் புகழவில்லை என்று சாமானிய மக்களுக்கும் தெரியும்.அப்படி இருக்க இதெல்லாம் ஒரு issue வே இல்ல .

 39. மிஸ்டர் பாவலன்

  //.என்னை பொறுத்தவரை “வேண்டும் என்றே கலைஞரை தலைவர் புகழவில்லை” என்று சாமானிய மக்களுக்கும் தெரியும்// (என் கருத்து)

  “ரஜினி அப்படி பேசி இருக்கக் கூடாது, சொதப்பி இருக்கிறார்” என
  கிருஷ்ணா மேலே சொல்லி இருப்பதைப் படிக்கவும். ஒரு ரஜினி ரசிகரே
  இப்படி எழுதுவது கவலையாக உள்ளது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 40. enkaruthu

  //“ரஜினி அப்படி பேசி இருக்கக் கூடாது, சொதப்பி இருக்கிறார்” என
  கிருஷ்ணா மேலே சொல்லி இருப்பதைப் படிக்கவும். ஒரு ரஜினி ரசிகரே
  இப்படி எழுதுவது கவலையாக உள்ளது.//

  என்ன சொல்ல வருகிறீர்கள் பாவலன் எனக்கு புரியவில்லை.அப்படி என்ன உங்களுக்கு கவலை அளிக்குமபடி எழுதிவிட்டேன் என்பதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் கேட்போம் .
  அப்ப கிருஷ்ணா சொல்லியதைபோல தலைவர் சொதப்பிருக்கிறார் என்று சொல்கிறீர்களா.அப்படி தலைவர் சொதப்பிருந்தால் ஜெயலலிதாவை பற்றி பேசியதை மட்டும் இவர் ஜெயா டிவியில் போட்டுகொண்டிருக்கிரார்களே என்று ஆளாய் பறக்க காரணம் என்ன.ஜெயாவை புகழ்ந்தால் அது நியாயமான பேச்சு .ஆனால் கலைஞரை பற்றி பேசினால் சொதப்பல் பேச்சா. என்ன பண்ணுவது பாவலன் நீங்கள் அப்ப அப்ப மனசாட்சி படி மாறினாலும் கலைஞர் என்றவுடன் மட்டும் எப்படியாவது இவரை திட்ட வேண்டும் என்று வேறு ஒரு விஷயம் உங்களை ஆட்கொள்கிறது.

 41. Ganesh Shankar

  நண்பர்களுக்கு,
  என்னுடைய அப்பாவிற்கு இதய கோளறு காரணமாக,தொடர்ந்து ஊரிலிருந்து அழைத்து வந்து,சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து பரிசீலனை நடைபெற்று கொண்டு இருப்பதால் என்னால் இங்கு கருத்துக்கள் எழுதியோ,கருத்துகளை இத்தனை நாள் படிக்க முடியவில்லை.
  எனக்கே சில நாட்கள் இங்கே பாவலன்,குமரன்,கிருஷ்ணா,தினகர் அவர்களின் கருத்துக்களை படிக்காமல் சற்றே தளர்வாக தான் இருந்தது.இருந்தாலும்,நேரமின்மை காரணமாக இதேல்லாம் என்ன முடியாமல் இருக்கிறேன்.முன்னறிவிப்பு பாவலன் போல கொடுக்காமல் இருந்ததற்கு மனிக்கவும்.திடிரென்று ஏற்பட்டதால்,ஒன்றும் செய்ய இயலவில்லை.மேலும் ஒரு மாதம் ஆகும் என்பதையும் அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.
  என்னுடைய மின்னஞ்சல் முகவரி: ngs1983@gmail.com.
  naan facebook போன்றவற்றில் தொடர்பில் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

 42. மிஸ்டர் பாவலன்

  ///அப்படி என்ன உங்களுக்கு கவலை அளிக்குமபடி எழுதிவிட்டேன் என்பதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் கேட்போம் .// (என் கருத்து)

  கிருஷ்ணா எழுதியது கவலை அளிக்கிறது என்று தான் எழுதி இருந்தேன்!

  ரஜினி பேச்சு சிறப்பாக இருந்தது, நேர்மையாக பேசினார் என்பது தான்
  என் நிலை, இதில் மாற்றம் இல்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 43. மிஸ்டர் பாவலன்

  கண்ணியம் மிக்க நண்பர் கணேஷ் ஷங்கர் அவர்களே:

  ///என்னுடைய அப்பாவிற்கு இதய கோளறு காரணமாக,தொடர்ந்து ஊரிலிருந்து அழைத்து வந்து,சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து பரிசீலனை நடைபெற்று கொண்டு இருப்பதால் என்னால் இங்கு கருத்துக்கள் எழுதியோ,கருத்துகளை இத்தனை நாள் படிக்க முடியவில்லை.///

  “உன் கடமையைச் செய்” எனத் தான் கீதையும், பைபிளும் அறிவுரை
  செய்கின்றன. அதே போல் உங்கள் கடமையை நீங்கள் செய்து வருகிறீர்கள்.
  கூட்டுப் பிரார்த்தனை நல்ல பலன் நிச்சயம் தரும். எனவே உங்கள்
  தந்தை விரைவில் நல்ல குணம் அடைய வலையின் சார்பாக நாங்கள்
  அவரவர் வணங்கும் கடவுள்களைப் பிரார்த்திக்கிறோம். என் சார்பில்
  நான் நோய் நொடியில் இருந்து குணம் பெரும் தேவாரப் பதிகங்களும்,
  மகா மிருத்யுஞ்சய மந்திர ஜபமும் இன்று செய்கிறேன்.

  ////எனக்கே சில நாட்கள் இங்கே பாவலன்,குமரன்,கிருஷ்ணா,தினகர் அவர்களின் கருத்துக்களை படிக்காமல் சற்றே தளர்வாக தான் இருந்தது.இருந்தாலும்,நேரமின்மை காரணமாக இதேல்லாம் என்ன முடியாமல் இருக்கிறேன்.///

  வெளியூர்களுக்கு நான் Conference செல்லும் போதும் கூட இன்று
  குமரன், என் கருத்து, கிருஷ்ணா என்ன எழுதிக் கொள்வார்கள் என
  யோசித்ததுண்டு. வினோவின் கட்டுரைகள், அதை அடுத்து வரும்
  கருத்துக்கள் என்றும் சுவாரசியமானவை. அவர் கலைஞர் அறிக்கையை
  வெளியிட்டால் போதும். குமரன் பதில், தினகர் கேள்வி, பாவலன்
  entry, பாட்டு, எனது “நண்பர்கள்” கருத்து, கிருஷ்ணா கருத்து என வலை
  களை கட்டி விடும். அடுத்து சில வெளிநாடுகளில் keynote address
  invitations வந்துள்ள நிலையில் வலையை விட்டு இருப்பது சிரமம் தான்.

  திரு. தினகர், ‘என் கருத்து’, தேவராஜன் இவர்களை சில சமயங்களில்
  விமர்சனமாக ஏதாவது எழுதி இருந்தாலும் அது அரசியல் வேறுபாடுகளால்
  தான் ஒழிய தனிப்பட்ட முறையில் அனைவரையும் நண்பர்களாகவே
  மதித்து எழுதி வருகிறேன்.

  ////முன்னறிவிப்பு பாவலன் போல கொடுக்காமல் இருந்ததற்கு மனிக்கவும்.////

  குழப்பம் இல்லா. நிங்கள் பிதா சீக்கிரம் சௌக்கியம் கிட்டி,
  பூரண ஆரோக்கியம் அடைஞ்சிட்டு, பின்னே ஈ வலைக்கு வந்து
  இவ்விடே ஒரு வார்த்தை பறைஞ்சால், அது மாத்திரம் மதி.

  ///திடிரென்று ஏற்பட்டதால்,ஒன்றும் செய்ய இயலவில்லை.மேலும் ஒரு மாதம் ஆகும் என்பதையும் அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.///

  We wish him a fast recovery. We pray to God.

  “If God be for us, who can be against us?” (Holy Bible)

  -===மிஸ்டர் பாவலன் ==

 44. JB

  //என்ன சொல்ல வருகிறீர்கள் பாவலன் எனக்கு புரியவில்லை.அப்படி என்ன உங்களுக்கு கவலை அளிக்குமபடி எழுதிவிட்டேன் என்பதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் கேட்போம் .//

  நான் பாவலன் அவர்கள் கிருஷ்ணாவைத்தான் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.

 45. மிஸ்டர் பாவலன்

  //நான் பாவலன் அவர்கள் கிருஷ்ணாவைத்தான் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.// (JB )

  Yes

 46. Krishna

  //அப்ப கிருஷ்ணா சொல்லியதைபோல தலைவர் சொதப்பிருக்கிறார் என்று சொல்கிறீர்களா.அப்படி தலைவர் சொதப்பிருந்தால் ஜெயலலிதாவை பற்றி பேசியதை மட்டும் இவர் ஜெயா டிவியில் போட்டுகொண்டிருக்கிரார்களே என்று ஆளாய் பறக்க காரணம் என்ன.ஜெயாவை புகழ்ந்தால் அது நியாயமான பேச்சு .ஆனால் கலைஞரை பற்றி பேசினால் சொதப்பல் பேச்சா. என்ன பண்ணுவது பாவலன் நீங்கள் அப்ப அப்ப மனசாட்சி படி மாறினாலும் கலைஞர் என்றவுடன் மட்டும் எப்படியாவது இவரை திட்ட வேண்டும் என்று வேறு ஒரு விஷயம் உங்களை ஆட்கொள்கிறது.//

  ஒருவருக்கு ரசிகன் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்து எழுத வேண்டும் என்பதில்லை. என்னுடைய பதிவில் அவர் ஜெயலலிதாவை புகழ்ந்ததும் தவறு என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். “இந்த விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்ற அளவில் நிறுத்தியிருக்க வேண்டும், “இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவியாக வரவேண்டும்” என்பதெல்லாம் தேவையற்ற கருத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். அதே போன்று கருணாநிதியின் பெயரை இழுத்ததும் பொருத்தம் அற்ற செயல். இந்த விழாவுக்கும் கருணாநிதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே அவர் பெயரை இழுத்தது அனாவசியம் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இதில் நண்பர் பாவலன் அவர்கள் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.
  __________________
  கிருஷ்ணா, தெரியாததை தெரிஞ்சதா காட்டிக்கொண்டு ஏன் படுத்தறீங்க…

  ரஜினி அந்த விழாவில் பேசியது:
  “முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்.”

  உலக அளவில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பதற்கும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவியாக வரவேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசம் கூட உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் நேரில் பார்க்காத ஒரு நிகழ்ச்சியில் ரஜினி இப்படித்தான் பேசி இருக்கிறார் என நினைத்துக் கொண்டால் அது உங்கள் தவறு. ரஜினி இப்படித்தான் பேச வேண்டும் என கூறுவது மகா தவறு. இது தொடர்பான அர்த்தமற்ற வாதத்தை நிறுத்துங்கள் இத்தோடு!

  -வினோ

 47. தினகர்

  கணேஷ் சங்கர் அவர்களே, உங்கள் தந்தை குணமடைந்து நலல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் இருக்க ஆண்டவன் அருள் புரிவான். நம் அனைவரின் பிரார்த்தனைகளும் உடன் இருக்கும்.

  இந்த சூழலில், நீங்கள் இங்கே வந்து படிக்கவில்லை என்ற வருத்தப்படுவதே தவறு. இதில் மன்னிப்பெல்லாம் கேட்பது அதை விட தவறு.. தந்தையை உடனிருந்து நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தலையாய கடமை அது தான்.

 48. கணேசன் நா

  Krishna says:
  //“இந்த விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்ற அளவில் நிறுத்தியிருக்க வேண்டும், “இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவியாக வரவேண்டும்” என்பதெல்லாம் தேவையற்ற கருத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். அதே போன்று கருணாநிதியின் பெயரை இழுத்ததும் பொருத்தம் அற்ற செயல். இந்த விழாவுக்கும் கருணாநிதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே அவர் பெயரை இழுத்தது அனாவசியம் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை//

  நம்ம கிட்ட இருக்கும் பிளஸ் : மத்தவங்க ரசிகர்கள், கட்சி தொண்டர்களை விட நமக்கு சில பல விஷயம் தெரியும். சுதந்திரமா சிந்திக்கிறோம்.

  நம்ம கிட்ட இருக்கும் மைனஸ் : நமக்கு புடிச்ச விஷயத்த மட்டும் தான் தலைவர் செய்யணும், பேசணும் நினைக்குறது.

 49. Krishna

  வினோ அவர்களே, இந்த விஷயத்தில் “புரட்சி தலைவி” என்று சொல்வது தேவையற்றது என்பது தான் என் வாதம். ஏனெனில் ரஜினி அதிமுக உறுப்பினர் அல்ல. தவிர எனது இன்னொரு வாதம் – கலைஞரை பற்றி அந்த மேடையில் பேசியது சரியல்ல என்பது தான். ரஜினி இப்படி தான் பேச வேண்டும் என்பதை விட, சம்பந்தப்படாத ஒருவரைப்பற்றி (கலைஞர்) பேசுவது தவறு என்பது என் வாதம். இந்த உலகத்தில் பிறந்த யாரும் விமரிசனத்துக்கு அப்பார்ப்பட்டவறல்ல. ஆனால் விமரிசனம் அநாகரிகமாகவும் அவதூறாகவும் இருக்கக்கூடாது என்பதில் கவனம் தேவை என்பது தான் என் வாதம். 1960 களில் சோ இதே போன்ற தவறை ஒரு அரசியல் மேடையில் செய்திருக்கிறார் என்பதையும் நினைவு கொள்கிறேன்.

 50. மிஸ்டர் பாவலன்

  கொஞ்ச நாளா ‘என் கருத்து’ எதுவும் பதிவு செய்யல.
  Busy ஆக இருக்காப்ல..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 51. கணேசன் நா

  Krishna says:
  //** இந்த விஷயத்தில் “புரட்சி தலைவி” என்று சொல்வது தேவையற்றது என்பது தான் என் வாதம். ஏனெனில் ரஜினி அதிமுக உறுப்பினர் அல்ல. **//

  அதிமுக உறுப்பினர் யாரும் புரட்சி தலைவி என்று மேடையில் அதுவும் முதல்வர் அமர்ந்து இருக்கும் பொழுது அழைக்கமாட்டார்கள். அம்மா என்று தான் அழைப்பார்கள்.

 52. enkaruthu

  //வினோ அவர்களே, இந்த விஷயத்தில் “புரட்சி தலைவி” என்று சொல்வது தேவையற்றது என்பது தான் என் வாதம். //

  கிருஷ்ணா அவர்களே.நண்பர்களே இங்கே கரண்ட் கட் அடிக்கடி என் ups வேலை செய்ததால் நொண்டி அடிக்கிறது.அடேங்கப்பா புரட்சி தலைவி என்று சொல்வதை கிருஷ்ணா எதிர்கிறார.என்ன ஆச்சரியம் அதை கொண்டாடுவதற்கு தானோ எங்கள் ஊரில் இந்த கரண்ட் கட்.

 53. Ravi

  ரஜினியின் இந்த பேச்சு குறித்து சமீபத்திய குமுதத்தில் வேறு மாதிரி கூறப் பட்டுள்ளது. தனது படம் வெளியாகப் போகும் சமயத்தில், எல்லாம் தலைவர் இம்மாதிரி பேசி நம் ரசிகர்களை சூடாக்கவும் உற்சாகமாக்கவும் செய்வதாக குமுதம் இதழ் தெரிவிக்கிறது. உண்மை இருக்குமோ?

 54. தினகர்

  ”குமுதம் இதழ் தெரிவிக்கிறது. உண்மை இருக்குமோ?”

  இதில் இருந்தே உமது விஷமத்தனம் தெரிந்து விட்டது. அவரது ரசிகர்களுக்கு அவரை முழுமையாக தெரியும்.

 55. ravi

  திரு.தினகர் அவர்களே, நானும் ரஜினி அவர்களின் அபிமானி தான். அதற்காக ஒரு கட்டுரை, பத்திரிகையில் வந்தால், அதில் உள்ள உண்மை பொய்களை விவாதிப்பதில் என்ன விஷமம் உள்ளது? அந்த கட்டுரையை படித்துவிட்டு சொல்லுங்களேன்.

 56. தேவராஜன்

  Ravi //
  அந்த கருமம் புடிச்ச கட்டுரையை படிச்சாச்சு. இப்போ நான் சொல்கி்றேன். அது 100 சதவீத அக்மார்க் விஷமத்தனம்.. ஆட்சியாளரின் காலை நக்கிக் கொடுக்கும் கேவலமே.. போதுமா!!

 57. தினகர்

  “நானும் ரஜினி அவர்களின் அபிமானி தான்.”

  அவரது அபிமானிகளுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். இப்படி மூன்றாம் தரக் கட்டுரையைப் படித்து விட்டு, இருக்குமோ என்று விஷமத்தனமான கேள்வி கேட்க மாட்டார்கள்.

 58. மிஸ்டர் பாவலன்

  //“நானும் ரஜினி அவர்களின் அபிமானி தான்.”// (ரவி)

  ரஜினியைப் பற்றிய உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ள
  தானே திரு. வினோ அவர்கள் என் வழியில் எழுதி வருகிறார்.
  அப்பறம் “குமுதத்தில் இது வந்தது, தினமலரில் அது வந்தது” என
  இங்கு கேட்டால் என்ன அர்த்தம்?!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 59. Satheesh

  ரஜினி தான் உண்மையான ஹீரோ. அவரோட பான அ இருக்குறது எனக்கு பெருமையா இருக்கு. கொச்சடையான் எப்போ ரிலீஸ் ப்ளீஸ் சொல்லுங்க ரஜினி சிற பாக்கணும் போல இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *