BREAKING NEWS
Search

தமிழ்நாடுன்னா.. அது தலைவர் ரஜினிதான்டா!

இதுக்குப் பேர்தான் தலைவர் பவர்!

Kabali-Movie-HD-Stills (10)

ன்னிக்கு அலுவலக வேலையா மும்பை வந்த இடத்துல காலைலயே செமத்தியான மழை… கம்பெனிக்கு போக ரெடியாகி வெளில வந்து ஒரு ஆட்டோவ கைகாட்டி கூப்டேன். அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு 50 வயசுக்கு மேல இருக்கும். பக்கத்துல ஆட்டோவ கொண்டு வந்து நிறுத்திட்டு,

“எங்க போகனும்?” ன்னாரு..

“ரபாலி (Rabale) போகனும்,” ன்னு எனக்குத் தெரிஞ்ச ஹிந்தில சொன்னேன்.

அவருக்குப் புரியாம “எங்க?”ன்னு திரும்பக் கேட்க,

அந்த இடத்து பேர எப்படி உச்சரிக்கனும்னு தெரியாம ‘ரபாலி’, ‘ரபேலி’ ன்னு ரெண்டு மூணு மாதிரி நா சொல்லவும், “ஓ.. ரபேலி… ஏறி உக்காருங்க” ன்னு சொல்லிட்டு, நா உள்ள உக்காந்தப்புறம் சிரிச்சிகிட்டே சொன்னாரு, “நீங்க மொதல்ல சொன்னது என் காதுல ‘கபாலி’ன்னு விழுந்துச்சின்னு.

எனக்கு ஒரே மகிழ்ச்சி 🙂

கொட்டுற மழைல ஒரு மணிநேரம் ஆட்டோல போய் அந்த கம்பெனில இறங்கி உள்ள போனேன். அந்த கம்பெனி கோ ஆர்டினேட்டர் வந்து உள்ள அழைச்சிட்டு போனான்.

போகும்போது, “Sir are you from Chennai?,” ன்னான்.

“Yes”-ன்னு சொன்னேன்.

அடுத்த கேள்வி என்ன கேட்டான்னு நினைக்கிறீங்க?

“U watched Kabali?” ன்னான். ஷாக் ஆயிட்டேன்.

இண்டர்வல் ஃபைட்டுல துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது தலைவர் எதையுமே கண்டுக்காம ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு இருப்பாரே.. அந்த மாதிரி ஆயிட்டேன் கொஞ்ச நேரம்.

‘ஏண்டா விடியகாலம் 4:30 மணிக்கு படம் பாத்தவன, ஒருவாரம் கழிச்சி பாத்துட்டியாடான்னு ஒரு கேள்வி… தங்களுக்கே வேடிக்கையாக இல்லையான்’னு மனசுல நினைச்சிகிட்டு, “நா பாத்துட்டேன்.. நீ பாத்துட்டியா” ன்னேன்.

“இன்னும் பாக்கல… ஆனா கண்டிப்பா பாக்கனும்,” ன்னான்.

ரெண்டு மராட்டியர்கள்… ஒருத்தர் 50 வயசைத் தாண்டிய ஆட்டோ ஓட்டுநர். இன்னொருத்தர் 25 வயசுக்குட்பட்ட அலுவலகப் பணியாளர். கபாலிங்குற ஒரு பேரு எந்த அளவு ரீச் ஆயிருக்குங்குறத உண்மையிலயே இன்னிக்கு காலையிலதான் கண்கூடா பாத்தேன்.

வட மாநிலங்கள் ஒருசிலதுக்கு அடிக்கடி போயி டேரா போட்டுத் தங்கிருக்கேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அரசியல் ஆர்வம் இருக்க ஆட்கள்னா, தமிழ்நாடுன்னு சொல்லும்போது கலைஞரையும், ஜெயலலிதாவையும் அவங்களுக்கு தெரியுது. மத்தபடி யாருகிட்ட தமிழ்நாடுன்னோ, சென்னைன்னோ சொன்னாலும் அடுத்த கேள்வி ‘ரஜினிகாந்த்?’ அப்டின்னுதான் கேப்பாய்ங்க.

“கோச்சடையான் தனி ஆள் அல்ல.. அவன் ஒரு நாடு…”ன்னு ஜாக்கி ஷெராஃப் சொல்லுவார்.. உண்மையிலயே வட மாநில மக்களுக்கு தமிழ்நாடுன்னா மொதல்ல ஞாபகம் வர்றது ரஜினிகாந்த் தான்.

ஆனா இவியிங்க என்னன்னா அவர தமிழனான்னு கேக்குறாய்ங்க. அடுத்த தடவ இந்த கேள்விய அவரப் பாத்து கேக்கும்போது, தமிழ்நாட்டுல நீங்க பொறந்தீங்கங்குற சரித்திர நிகழ்வத் தவற தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ உங்களால என்ன செய்ய முடிஞ்சிதுன்னு உங்களையே ஒருதடவ கேட்டுக்குங்க!

முத்து சிவா
4 thoughts on “தமிழ்நாடுன்னா.. அது தலைவர் ரஜினிதான்டா!

 1. karthi

  verum mannai aalbhavan mannanalla
  makkalai manadhai aalbhavane mannan

  ithu rajini kochadaiyaanil sonnathu

 2. karthi

  ethir paartha alavu illainnu sonna athu thappu
  ethir paarthathu vera paarthathu kabaliya
  ithu correct

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *