BREAKING NEWS
Search

கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி! – தலைவர் ரஜினிகாந்த்

கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி! – ரஜினிகாந்த் அறிக்கை

Kabali-one crore

சென்னை: கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று தலைவர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவில் ஓய்வெடுத்த ரஜினிகாந்த், கபாலி படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பிறகு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தனது அமெரிக்கப் பயணம் மற்றும் கபாலி வெற்றி குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் வணக்கங்கள். லைகா தயாரிப்பில் திரு சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.O மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா ரஞ்சித் அவர்களின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட கபாலி படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.

அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணுக்குத் திரும்பிய எனக்கு, கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா ரஞ்சித் அவர்களுக்கும் அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சி!

ரஜினிகாந்த்

 
5 thoughts on “கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி! – தலைவர் ரஜினிகாந்த்

 1. Raghul

  Yes, my memories went back to Ejaman days..
  How an unusual and emotional thalaivar film got accepted slowly and became a silver jubilee hit (I recall AVM Saravanan’s marketing skills !)

  Now Kabali, the best of Thalaivar’s in the last couple of decades – is proving my prediction..
  It is an experience, a new experience and a never before experience.
  Those of us who did not like it in FDS, please go and watch, you will realize the value of this movie..

  There are always a bunch of haters – their vaayil mannu now… A new addition: Samuthrakani
  Now we all realize Vairamuthu was looking at his growth whenever he praised Thalaivar and the incident (where he told Kabali failed) shows how selfish and mean he is… (Kabilan’s lines were powerful and suited the film very well).

  I miss Dr. KB at this juncture. He had wished in a programme, that Thalaivar should act in small and emotional movies then and there.. By Now Dr.KB must be cheering the great actor in our Thalaivar, looking from the heaven.

  Within Friday, the movie will cross 500 crores….

  Three Cheers to Pa. Ranjith and Team…

 2. சல்மான்

  யுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது.
  முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.
  சல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது.
  கனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கபாலியின் உண்மையான வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மற்றும் இந்தி இணையதளங்களில் மிகக்குறைவான தொகையையே கபாலி வசூல் என்று வெளியிட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் சில பகுதிகளில் கபாலி வசூலித்த தொகை மட்டுமே என்பது முக்கியமானது.
  கனடாவில் கபாலி 1.67 கோடிகளும், யுகே மற்றும் அயர்லாந்தில் 2.47 கோடிகளும், மலேசியாவில் 4.66 கோடிகளும் வசூலித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

 3. yaseenjahafar

  வைர முத்துவின் கேவலமனா செயல்

  கால் நூற்று ஆண்டு கால கற்பனையீல் இப்படி ஒரு கேவலமான செயல் செய்த வைரமுத்துவா இது. இந்த பாடலை நீ தானே எழுத்தினை கொன்று ஏழுதீனாய் உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேரை சொல்லும் என்று நீயும் பணத்துக்கு அடிமை என நிரூபித்து விட்டாய் அச்சம் இல்லாமல் பேசியே வார்த்தையை கொட்டி இருக்கிறீர் கபாலி படத்தில் உஙகள் பாடல் இடம் பெற வில்லை என எரிச்சல் இப்படி பேசியே வார்த்தை 35 காண்டு நற்பு இதுவா கேவலம் இருக்கிறது கவின்ஞர் கூட இப்படி நாக்கை திருப்பி போட்டு பேசுவார்கள் ஒரு படம் கொடுக்க வில்லை என்று

 4. velmurugan.A

  Samuthrakani explained that he also love this movie… That statement was not given by him.. somebody made it like that…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *