BREAKING NEWS
Search

செய்தியாளருக்கு ரஜினி தந்த சர்ப்ரைஸ்!

கோச்சடையானுக்கு 80 கேமிராக்கள்!


ஜினி நடிக்கும் 3 டி படமான கோச்சடையான் காட்சிகளைப் படமாக்க 80 கேமிராக்கள் பயன்படுத்தப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோச்சடையானில் நடிக்க ரஜினிக்கென்று தனி பாடி சூட் தயாராகியுள்ளது. அவரது ஒவ்வொரு அசைவையும் படமாக்க 80 கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன.

பர்பார்மன்ஸ் கேப்சரிங் டெக்னாலஜியில் சிறப்பான காட்சியமைப்பைப் பெற இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம்,” என்றார்.

சௌந்தர்யா ஹாங்காங் பயணம்!

கோச்சடையான் படத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்காக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி ஹாங்காங் பயணமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் தொழில்நுட்பப் பணிகளை ஹாங்காங் மற்றும் லண்டனைச் சேர்ந்த கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.

படப்பிடிப்பு தொடங்கும் முன் அதற்கான ஆயத்த வேலைகளைக் கவனிக்கவும், கோச்சடையான் காட்சிகளை தனது தொழில்நுட்ப குழுவுக்கு விவரிக்கவும் சௌந்தர்யா ஹாங்காங் சென்றுள்ளார்.

‘3 பட க்ளைமாக்ஸை மாற்றச் சொல்லவில்லை அப்பா!’

டந்த சில தினங்களாக 3 பட க்ளைமாக்ஸை ரஜினி மாற்றச் சொன்னதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா.

இதுகுறித்து அவர் கூறுகையில், “3 படத்தை இன்னும் யாருக்கும் போட்டுக்கூட காட்டவில்லை. அதற்குள் க்ளைமாக்ஸ், அப்பா பார்த்தார், மாற்றச் சொன்னார் என்றெல்லாம் எழுதித் தள்ளிவிட்டார்கள்.

படத்தில் என்ன மாறுதல் என்பதை காலமும் தேவையும்தான் முடிவு செய்யும். கொலைவெறி பாடல் இன்னும் திரையிசை உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்தப பாடலுக்கான காட்சியும் அருமையாக வந்துள்ளது,” என்றார்.

செய்தியாளருக்கு ரஜினி தந்த சர்ப்ரைஸ்!

வர் ஒரு சினிமா பத்திரிகையாளர். பெயரைக் இங்கே குறிப்பிடுவதில் அவருக்கு சில அலுவலக சங்கடங்கள் உள்ளன. அதனால் தேவையில்லை. சம்பவம்தான் முக்கியம்.

ஒரு நாள் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அலுவலகத்தில் அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம் செய்தியாளர். அப்போது சட்டென்று அலுவலகத்தில் பரபரப்பு. ரஜினி வந்துவிட்டார்.

தனிமையாக சந்திக்க வந்திருக்கிறார் ரஜினி. நாம் இருந்தால் சரியாக இருக்காது என செய்தியாளர் தள்ளி நின்றுகொண்டார். ரவிக்குமாருடன் பேச உட்கார்ந்த ரஜினி, செய்தியாளரைக் கவனித்துவிட்டார்.

‘அடடே… வாங்க நல்லாருக்கீங்களா?’ என்று செய்தியாளரை உரிமையோடு அழைத்துப் பேச, இவருக்கு ஒரே திகைப்பு. ‘எப்போதோ ஒருமுறை ரஜினி பார்த்திருக்கிறார். இன்னும் நினைவில் வைத்திருக்கிறாரே… நாமாக அவருக்கு வணக்கம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என உள்ளுக்குள் எண்ணவோட்டங்கள் செய்தியாளருக்கு.

அத்துடன் விடவில்லை ரஜினி. அவரை அழைத்து தேவையான அளவுக்கு புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ள வைத்த பிறகே அனுப்பி வைத்தாராம்!

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “செய்தியாளருக்கு ரஜினி தந்த சர்ப்ரைஸ்!

  1. THAMEEZ

    ஷங்கர் கூட ஆனந்த விகடனில் தலைவருக்கு வணக்கம் சொல்லாமல் மரியாதை நிமித்தம் காரணமாக தள்ளியே நின்றார் ஆனால், தலைவர் பொய் வாழ்த்து சொன்னதாக படித்தேன். அன்றிலிருந்து ஷங்கர் எல்லோரையும் அவர்கள் வாழ்த்து சொல்வதற்கு முன்பாகவே வணக்கம் சொல்லிவிடுவதாக சொல்லி இருக்கிறார். இதுவும் அப்படியே இருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *