BREAKING NEWS
Search

ரஞ்சித்தை மிரள வைத்த ரஜினியின் எளிமை!

ரஞ்சித்தை மிரள வைத்த ரஜினியின் எளிமை!

11887974_668101403289351_3521400430335432755_n

பாபா படத்தில் ஒரு காட்சி. தன்னைக் கொல்ல ஆளனுப்பிய முதலமைச்சரை தலைவர் ரஜினி அதிரடியாக காருக்குள் சந்திப்பார். அப்போது அவர் முதல்வரிடம் சொல்வார்… “புல்லட் ப்ரூப்… செக்யூரிட்டி.. பந்தா… ஷோ ஆஃப்.. எவன் வீட்டு பணம்… மேலருந்து அழைப்பு வந்தா போயிட வேண்டியதுதான்…”

இப்போதும் எப்போதும் அதே மனநிலையில் இருக்கும் மனிதர் அவர் என்பதை இயக்குநர் ரஞ்சித்தின் பேட்டியில் தெரிந்து கொள்ளலாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தை இயக்கும் பா ரஞ்சித் முதல் முறையாக விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் ரஜினியிடம் தான் கதை சொல்லப் போனபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்துள்ளார்.

அந்த பேட்டி:

”நான் ‘மெட்ராஸ்’ படம் முடித்ததும் சூர்யா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தேன். ஒருநாள் யதேச்சையாக சௌந்தர்யாவைச் சந்தித்தேன். என் முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தை முதலில் அவர்தான் தயாரிப்பதாக இருந்தது. ‘மெட்ராஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு சௌந்தர்யா பாராட்டினார். ரஜினி சாரும் போன் செய்து படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் குறிப்பிட்டு ரொம்ப நேரம் பாராட்டினார்.

திடீரென ஒருநாள் சௌந்தர்யா எனக்கு போன் செய்து, ‘அப்பா அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கார். அந்தப் படத்தை யார் டைரக்ட் பண்றதுன்னு டிஸ்கஷன் நடக்குது. அதில் உங்க பெயரும் இருக்கு. அப்பா என்கிட்டே பேசும்போது உங்க பெயரையும் சொன்னார். நீங்க அப்பாவுக்குத் தகுந்த மாதிரி கதை ஏதாவது வெச்சிருக்கீங்களா? இல்லைன்னா, ரெடி பண்ணுங்க’ என்றார். சில நாட்களுக்குப் பிறகு மறுபடியும் போன் செய்து, ‘என்ன இரஞ்சித், அப்பாவுக்கு கதை ரெடி பண்ணியாச்சா?’ எனக் கேட்டார்.

நான் ஏற்கெனவே யோசித்துவைத்திருந்த இரண்டு கதைகளின் ஒன்லைன்களைச் சொன்னேன். நான் இரண்டாவதாகச் சொன்ன கேங்ஸ்டர் கதை சௌந்தர்யாவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ரஜினி சாரிடம் சொல்லியிருக்கிறார். ‘ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கே… இன்னும் டெவலப் பண்ணச் சொல்லு…’ என சௌந்தர்யாவிடம் உற்சாகமாகச் சொன்னாராம். அதன் பின்னர் இடைவெளி விழுந்தது. அதற்குள் ரஜினி சார் படத்தை இயக்குவது குறித்து நிறைய டைரக்டர்களின் பெயர்கள் பேசப்பட்டன. ஒன்றரை மாசம் காத்திருந்தேன். ‘சரி, இனி நமக்கு சான்ஸ் இல்லை’ என முடிவு செய்து சூர்யா பட வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒருவழியாக சூர்யா படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுதாக முடித்து, ஷூட்டிங் கிளம்பத் தயாராக இருந்தேன். சூர்யாவின் கால்ஷீட் தள்ளிப்போனது.

அந்தச் சமயத்தில் ஒருநாள் சௌந்தர்யா மீண்டும் பேசினார். பிறகு, ரஜினி சார் ஒருநாள் கதை கேட்க அழைத்தார்.

எனக்கு, பொதுவாக கதையைச் சொல்லத் தெரியாது. ‘மெட்ராஸ்’ படத்துக்குக்கூட நான் கதை சொல்லவில்லை. முழு ஸ்கிரிப்ட்டையும் அவர்களிடம் காண்பித்த பிறகுதான் ஷூட்டிங் கிளம்பினேன். அதனால் ரஜினி சாருக்கு எப்படிக் கதை சொல்வது என்ற யோசனையில் முதல் நாள் இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. முக்கியமான சில பாய்ன்ட்டுகள் செட்டாகவில்லை. பேசாமல் சந்திப்பையே தவிர்த்துவிடலாமா என்றுகூட யோசித்தேன்.

‘நமக்குத்தான் கதை சொல்லவே வராதே… நிச்சயமாகச் சொதப்பப்போகிறோம்’ என்கிற பதைபதைப்போடு மறுநாள் போயஸ் கார்டன் போனேன். முதலில் நான் சொல்லப்போகும் கதையைப் பற்றி அவர் கேட்கவே இல்லை. ‘மெட்ராஸ்’ படத்தை இரண்டு முறை பார்த்ததாகச் சொன்னார். அந்தப் படத்தில் வரும் கார்த்தி, அன்பு, ஜானி என ஒவ்வொரு கேரக்டரையும் அலசி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசினார்.

எனக்கு எப்படித்தான் தைரியம் வந்தது என்பதை என்னால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. கதையே சொல்லத் தெரியாத நான், ஒன்றரை மணி நேரம் கதை சொன்னேன். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காண்பித்தேன். ரஜினி சாரின் கண்களில் ஆச்சர்யம், சந்தோஷம்… என மாறிமாறி வந்தன. கதையைச் சொல்லி முடித்ததும் ‘ஃபென்டாஸ்டிக்…’ எனப் பாராட்டியவர், கதையில் ‘இந்த சீன்ல நான் நடிச்சா நல்லா இருக்கும்… எனக்கு ஏத்த மாதிரி பெர்ஃபெக்ட்டா இருக்கு’ என உற்சாகமானார். ஆனால், மறுபடியும் இடைவெளி விழுந்தது. அப்போதும் பல டைரக்டர்களின் பெயர்கள் பேசப்பட்டன. எனக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

நான் பாண்டிச்சேரியில் இருந்தபோது சௌந்தர்யா போன் செய்து, ‘அப்பா உடனே உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டார்’ என அழைத்தார். நானும் ஆர்வமாக போயஸ் கார்டன் போனேன். ‘சூப்பர் கண்ணா… நீதான் என் படத்தை டைரக்ட் பண்றே, தாணு சார்தான் தயாரிப்பாளர்’ எனக் கை கொடுத்தார்.

‘இந்தப் படத்துல யார் யார் உங்க டீம்ல ஒர்க் பண்ணணும்னு, ஒரு கிரியேட்டரா நீங்கதான் முடிவு பண்ணணும். நான் தலையிட மாட்டேன். எனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுன்னா சொல்றேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம். படத்துல நடிக்கப்போறவங்க பிரபலமா இருக்கணும்னு அவசியம் கிடையாது. யாரை வேணும்னாலும் நடிக்கவைங்க. நீங்க நினைக்கிற மாதிரி, நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது. ஏதோ மக்கள் ஆசீர்வாதத்துல நடிகனா இருக்கேன்’னு அவர் சொல்லச் சொல்ல, நான் மிரண்டுபோனேன். ரஜினி சார் எளிமையானவர் எனக்  கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு  எளிமையானவரா என ஆச்சர்யமாக இருந்தது.

‘கபாலி’ எந்தப் படத்தின் ரீமேக்கும் கிடையாது. நான் படித்துச் சேகரித்த, சிந்தித்து உருவாக்கிய படம். நான் தனியாக ரிகர்சல் செய்தபோது, ரஜினி வந்து கலந்துகொண்டார் என வந்த செய்திகள் அனைத்தும் பொய். இந்தப் படத்துக்கு ரிகர்சல் உண்டு. இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ரஜினி சார் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்!”

‘இந்தப் படத்துல யார் யார் உங்க டீம்ல ஒர்க் பண்ணணும்னு, ஒரு கிரியேட்டரா நீங்கதான் முடிவு பண்ணணும். நான் தலையிட மாட்டேன். எனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுன்னா சொல்றேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம்.

படத்துல நடிக்கப்போறவங்க பிரபலமா இருக்கணும்னு அவசியம் கிடையாது. யாரை வேணும்னாலும் நடிக்க வைங்க. நீங்க நினைக்கிற மாதிரி, நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது. ஏதோ மக்கள் ஆசீர்வாதத்துல நடிகனா இருக்கேன்’னு அவர் சொல்லச் சொல்ல, நான் மிரண்டுபோனேன்.

ரஜினி சார் எளிமையானவர் எனக்  கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு  எளிமையானவரா என ஆச்சர்யமாக இருந்தது.

‘கபாலி’ எந்தப் படத்தின் ரீமேக்கும் கிடையாது. நான் படித்துச் சேகரித்த, சிந்தித்து உருவாக்கிய படம். நான் தனியாக ரிகர்சல் செய்தபோது, ரஜினி வந்து கலந்துகொண்டார் என வந்த செய்திகள் அனைத்தும் பொய். இந்தப் படத்துக்கு ரிகர்சல் உண்டு. இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும்.

ரஜினி சார் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்!”

என்வழி
6 thoughts on “ரஞ்சித்தை மிரள வைத்த ரஜினியின் எளிமை!

 1. srikanth1974

  ரஜினி என்ற சொல்லுக்கு எளிமை என்றும் பொருள்!

 2. DEEN_UK

  ”எனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுன்னா சொல்றேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம். படத்துல நடிக்கப்போறவங்க பிரபலமா இருக்கணும்னு அவசியம் கிடையாது. யாரை வேணும்னாலும் நடிக்கவைங்க. நீங்க நினைக்கிற மாதிரி, நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது. ”
  _எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத,தன்னம்பிக்கையும் உள்ள ஒரே தலைவன்!
  எந்த ஒரு பிரபல நடிகரும் சொல்ல முடியாத வார்த்தை தான் யாரை வேணும்னாலும் நடிக்க வைங்க,பிரபலமா இருக்கணும்னு அவசியம் இல்ல என்ற வார்த்தை! தன் மேல நம்பிக்கை இல்லாம பிரபல காமெடி குதிரைகள் மேல பயணம் செய்யும் பெரிய நடிகர்கள் மத்தியில் தலைவர் கிரேட்..!

  இந்த படத்தை பொறுத்தவரை…மார்க்கெட்டிங்,பிசினெஸ்..எல்லாமே தலைவரின் பெயருக்காக மட்டுமே நடக்கும்…ar ரஹ்மான் சார், தோட்டா தரணி,எடிட்டிங் ஆண்டனி,கேமரா ராண்டி சார்,அல்லது சந்தோஷ் சிவன் சார், ஸ்டன்ட் பீட்டர் ஹெயின் சார் நு யாருமே இல்லாம,ரஜினி என்ற மூன்றெழுத்து ஜெயிக்க போகும் படம்! அண்ணாமலை ல ஸ்டார் value இல்லாத தேவா சாரை தூக்கி விட்ட ஞாபகம் இப்போ வருது!! இன்னொரு பாஷா!! வாங்க தலைவா! we r waiting for u !!
  மீண்டும் ஒரு முள்ளும் மலரும்..நல்லவனுக்கு நல்லவன்..பாஷா அனைத்தும் கலந்து வரும் தலைவரை பார்க்க போகும் ஆவலில்……
  உயிர் உள்ளவரை….உங்கள் ரசிகன்..
  டீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *