BREAKING NEWS
Search

கபாலி டப்பிங்கைத் தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

தொடங்கியது கபாலி டப்பிங்!

kabali-dub

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டப்பிங் வேலைகள் நேற்று தொடங்கின. இதில் ரஜினி நேற்று பங்கேற்று, டப்பிங் பேசினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வருகிறது ரஜினியின் கபாலி. பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ரித்விகா, ஜான் விஜய் மற்றும் மலேசிய, சீன நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

kabali-dub2

சென்னை, கோவா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நேற்று ரஜினி தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பில் இருந்தஅவர், தற்போது அந்த படத்திற்கு சிறு ஓய்வு கொடுத்துவிட்டு, கபாலி டப்பிங் பணியை மேற்கொண்டார்.

டப்பிங் பேச வந்த அவரை இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ‘கபாலி’ டப்பிங்கை முடித்துவிட்டு, மீண்டும் ‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஜூன் இரண்டாவது வாரம் கபாலி வெளியாகும் எனத் தெரிகிறது.

-என்வழி




One thought on “கபாலி டப்பிங்கைத் தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. jegan N

    ்நடிகர் சஙக கிரிக்கெட் போட்டியில் மக்களிடம் பணம் வசூலிதது கடன் அடைககிறார்கள் என்வும் இதில் கலந்து கொள்ளாத இரு நடிகர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்வும் சிலர் கூறிவருகின்றனர்…………நஒஉணமையில் இந்த் இரு நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும்பொது டிக்க்ட் விலை ரூ ௨00-ரூ !000 வரை…இது மக்க்ள் பணம் இல்லையா…அந்த பணம் இவர்களுடைய சொந்த கடனயோ சொத்துக்களயோ குவிக்க உதவவவில்லயா…..்ிவர்கள் கலந்துகொள்ளரதிருக்க சொந்த ஈகோ தவிர வேறு எதுவுமில்லை………………கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள்…….அவற்களிடம் வெரு எதுவும் எதிர்பார்க்காதீர்கள்….யாருக்கும் யாரும் சிங்கி அடிக்காதீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *