BREAKING NEWS
Search

நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்? – ஷங்கரைக் கேட்ட ரஜினி

நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்? – ஷங்கரைக் கேட்ட ரஜினி


நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்… நான் வேணும்னா கமல்கிட்ட பேசட்டுமா? என இயக்குநர் ஷங்கரைக் கேட்டுள்ளார் ரஜினி.

ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது குறித்து பல கேள்விகள், எதிர்ப்பார்ப்புகள், செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருப்பதாவது:

‘ ‘சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, ‘நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்’னு சொன்னார்.

‘ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்’னு நான் சொன்னேன். ‘எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!

பார்ப்போம்… நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!”

அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்தார் ஷங்கர் – ஹீரோ யார்?

ங்கர் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படம் எது தொடர்பானது? இந்தியன் 2? எந்திரன் 2? என பல கேள்விகள்.

முக்கியமாக ஹீரோ யார் என்பது. ஏற்கெனவே ரஜினியுடன் இணைந்து அவர் எந்திரன் 2 படத்தை உருவாக்குவார் என்று கூறப்பட்டது.

இல்லையில்லை… ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி அவர் எடுக்கும் இந்தியன் 2 படத்தில் இந்த முறை ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஊகங்களுக்குமே தீனிபோட்டவர் ஷங்கர்தான். சமீபத்தில் தனது பேட்டிகளில் அவரே இதைச் சொல்லியும் வருகிறார்.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் கதை – திரைக்கதை பணியை ஆரம்பித்துவிட்டதாகவும், ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார் ஷங்கர்.

ஒரு உற்சாகக் கொண்டாட்டத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் மைன்ட்ல வச்சுக்கங்க சாரே!

-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்? – ஷங்கரைக் கேட்ட ரஜினி

  1. Manoharan

    கேவலமா இருக்கும். அது கமலுக்குத்தான் ஆதாயம். ரஜினிக்கு இல்லை. சிங்கம் சிங்கிளாதான் வரவேண்டும்.

  2. மிஸ்டர் பாவலன்

    ஷங்கர் கதை, ஸ்க்ரிப்ட், வசனம், ஸ்டார் காஸ்டிங்
    எல்லாம் fix பண்ணாலும் படம் ஆரம்பிக்க ஒரு வருஷம்
    ஆகும். அவர் இன்னும் கதையே எழுதி முடிக்கலை.
    யாரு நடிக்கறாங்க ஒன்னும் கிளியராத் தெரியலை.
    அதுக்குள்ளே மனோகரன் emotional ஆகிட்டார்.

    -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *