BREAKING NEWS
Search

‘தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்!’

‘இதைவிட வேறென்ன நீங்கள் செய்ய வேண்டும்?’ – ஒரு ரசிகனின் மனசு

“ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை…”

– சூப்பர் ஸ்டார் ரஜினி வியாழக்கிழமை காலை, கும்கி பட விழாவில் இப்படிப் பேசியதுமே, தன்னையுமறியாமல் கண் கலங்கிய தம்பி சக்தி, ‘அண்ணே ஒரு மாதிரியா இருக்குண்ணே… இப்படிக்கூட ஒரு மனிதரால் இருக்க முடியுமா.. எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனசுண்ணே?’ என்றார் நெகிழ்வுடன்.

ரஜினி பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியமும் நேர்மையும் ஒளிர்ந்தன.  ரசிகனைப் பற்றி எந்த அளவு நினைத்து கவலைப்பட்டிருந்தால், இந்த மனிதர் மனிதிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்திருக்கும்…!

‘ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்…’ என்ற குரல் கேட்டு எப்படி உடைந்துபோனோமோ.. அதற்கு நிகராக மனசைத் தளும்ப வைத்துவிட்டது, ரஜினி பேசிய விதம்.

யோசித்துப் பார்க்கிறேன். எதை எதிர்ப்பார்த்து ரஜினியை ரசிக்கத் தொடங்கி, அவரை குடும்பத்தில் ஒருவராகவே கருதி நேசிக்க ஆரம்பித்தோம்..? ம்ஹூம்.. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை!

போக்கிரிராஜா படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க முண்டியடித்துக் கொண்டு நின்றபோது, அவர் அடுத்த முதல்வராகப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போ, ரசிகர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்போ எனக்கில்லை. இந்த முப்பது ஆண்டுகளும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


இடையில் வந்தவை வாய்ப்புகள்தான். அதைப் பயன்படுத்துவதும் விடுவதும் அவருக்குள்ள சூழலைப் பொறுத்ததுதான். யாரும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. அரசியல் வாய்ப்புகளை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என பலரும் விரும்பினாலும், ‘விருப்பமில்லாத திருமணத்தை செய்ய முடியுமா’ என்று அவர் கேட்ட பிறகு, எந்த ரசிகரும் அதுபற்றி பேசுவதைக் கூடத் தவிர்த்துவிட்டார்கள். அதுதான் ரஜினி ரசிகர்களின் பக்குவம்.
அதையெல்லாம் மீறி, ஒரு சிலர், ‘தலைவர் இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே.. மனிதாபிமானமும் மக்கள் மீது பாசமும் கொண்ட இன்னொரு காமராஜர் கிடைத்த மாதிரி இருக்குமே’ என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் விட ரசிகர்களுக்கு முக்கியம், ‘ரஜினி ரஜினியாக… அவர் விருப்பப்படி இருக்க வேண்டும்.. திரையை ஆள வேண்டும். அவரைப் பார்த்து நாம் பரவசப்பட வேண்டும்,’ என்பதுதான்.

தலைவா, ரசிகர்களுக்கு நீங்கள் என்றுமே கடன்காரர் அல்ல. உங்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரி வரை வெறும் காலில் ஓராயிரம் பேர் நடந்து போய் பிரார்த்தனை செய்தது, உங்கள் மீதான எதிர்ப்பார்ப்பில்லா அன்பினால்தான்.

இது கடனல்ல தலைவரே. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் மூத்த மகனுக்காக கடவுளிடம் நடத்திய மன்றாட்டு அது… பல தம்பி தங்கைகள் ஒரு அண்ணனுக்காக செய்த பிரார்த்தனை.. பல குழந்தைகள் தங்கள் தாய்மாமனுக்காக நேர்ந்து கொண்ட வெள்ளந்தியான பாசம் அது…


உங்களை நாங்கள் அறிவோம். உங்கள் வெள்ளை மனசுதானே இத்தனை பெரிய அன்பு சாம்ராஜ்யத்தை ஆளுகிறது.

உங்கள் உருக்கமான பேச்சைக் கேட்டு, கண்ணீர் மல்க வெளியில் வந்த ஒரு ரசிகன் சொன்னது இது:

‘தலைவா, எங்களைப் பத்தி இவ்ளோ அக்கறையா இருக்கும் நீ ஏன் கூச்சப்பட்டு ஒளியணும்.. இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்… எப்பவும் போல ச்சும்மா சிங்கம் மாதிரி இரு தலைவா.. அதான் எங்களுக்கு சந்தோஷம்!!’

-எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், இதை முழுசாக ஆமோதிக்கிறோம்!

-வினோ
என்வழி
30 thoughts on “‘தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்!’

 1. மிஸ்டர் பாவலன்

  மிகச் சிறந்த கட்டுரை டாக்டர் வினோ அவர்களே.. எங்கள் மனதில்
  உள்ளதை நீங்கள் எழுதி விட்டீர்கள். சூப்பர் போட்டோ (வழக்கப்படி).

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 2. கணேசன் நா

  ஒவ்வாரு ரசிகனின் மனதையும் படித்தார் போல அருமையான கட்டுரை.

  //**தலைவா, எங்களைப் பத்தி இவ்ளோ அக்கறையா இருக்கும் நீ ஏன் கூச்சப்பட்டு ஒளியணும்.. இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்… எப்பவும் போல ச்சும்மா சிங்கம் மாதிரி இரு தலைவா.. அதான் எங்களுக்கு சந்தோஷம்!!’

  -எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், இதை முழுசாக ஆமோதிக்கிறோம்!**//

  இதை முழுசாக ஆமோதிக்கிறோம்!

 3. தினகர்

  சொல்லத்தெரியாத ஒரு வித நெகிழ்ச்சியான உணர்வுகள்.. மனசும் மனசும் நேரடியாக பேசி புரிந்து கொண்டது போல் பரவசம்..

 4. குமரன்

  நீங்கள்
  ஒளிந்து கொள்ள வேண்டாம்….
  ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும் !!

  Hide thou shall not
  Shine thou shall
  Super Star thou art !!

 5. endhiraa

  ‘தலைவா, எங்களைப் பத்தி இவ்ளோ அக்கறையா இருக்கும் நீ ஏன் கூச்சப்பட்டு ஒளியணும்.. இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்… எப்பவும் போல ச்சும்மா சிங்கம் மாதிரி இரு தலைவா.. அதான் எங்களுக்கு சந்தோஷம்!!’

  சூப்பர் !!!!!!

 6. Basha

  Thalaiva you are the Real Leader / greatest human being Thalaivaa… I feel Great………. to be a fan of a wonderfull human being….GOD…. you need not to worry thalaiva…… This is our family……

  Vino – Nice write up and photoes

 7. Marthu

  தலைவா இப்படி பேச/உன்மையப்பேச ஒரு பெருந்தன்மை வேனும்…அது உன்னத்தவிர இந்த உலகத்தில் வேற எவனுக்கும் கிடையாது.
  ஆனா ஒன்னு எவனுக்கும உன்ன விட்டுக்கொடுக்க மாட்டோம்…அந்த எமனே வந்தாலும் எங்களிடம் இருந்து உன்ன பிர்க்க முடியாது….

 8. arulnithya

  படிக்கும் போதும், படித்த பின்பும் கண்களில் கண்ணீர், இது தான் தலைவருக்கும் நம்மக்கும் உள்ள பந்தம், அன்பு..இன்னும் என்னென்னவோ
  வார்த்தைகள் வரவில்லை

 9. மு. செந்தில் குமார்

  சொல்லத்தெரியாத ஒரு வித நெகிழ்ச்சியான உணர்வுகள்.. மனசும் மனசும் நேரடியாக பேசி புரிந்து கொண்டது போல் பரவசம்..

  நன்றி திரு. தினகர்

 10. MICSON

  ஒவ்வொரு ரசிகனின் உள்ள குமுறலின் பிரதிபலிப்பு உங்கள் கட்டுரை ! அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

 11. Rajmohan

  ‘தலைவா, எங்களைப் பத்தி இவ்ளோ அக்கறையா இருக்கும் நீ ஏன் கூச்சப்பட்டு ஒளியணும்.. இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்… எப்பவும் போல ச்சும்மா சிங்கம் மாதிரி இரு தலைவா.. அதான் எங்களுக்கு சந்தோஷம்!!’

  -எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், இதை முழுசாக ஆமோதிக்கிறோம்!

 12. M,SARO

  வினோ சார் இந்த கட்டுரையை படிக்கும் பொழுது அழுகை தான் வருகின்றது

 13. JHONY

  படிக்கும் போதும், படித்த பின்பும் கண்களில் கண்ணீர், இது தான் தலைவருக்கும் நம்மக்கும் உள்ள பந்தம்

 14. enkaruthu

  தலைவா யார் யாருக்கு கடன்காரர்.உன் வாழ்கை உன் கையில் என்று சொல்லி திசை மாறி சென்ற பலரை உழைக்க வைத்தாய்.

  இன்று சில அரசியல்வாதிகளும்,நடிகர்களும் தன் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சுரண்டுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் உங்களை எப்பொழுது பார்க்க வந்தாலும் எனக்காக எதுவும் செய்யவேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அது போதும் என்று சொல்பவர் நீங்கள்.

  ஒரு நாலு பேர் கூட இருந்தாலே சிலர் தன்னை திட்டுபவரை பார்த்து நான் யார் தெரியுமா என்று சலம்புவார்கள்.ஆனால் இவ்வளவு பெரிய ரசிக பட்டாளங்களை வைத்திருக்கும் நீங்களோ உங்களை யாராவது சீண்டினால் ரசிகர்களை தூண்டிவிடாமல்,பிரச்சனை செய்யும் ரசிகர்களையும் அவர்கள் வாழ்கை கெடாது இருக்க அமைதியா இருக்கும்படி செய்து நீங்களே அந்த பிரச்சினையை அமைதியாக எதிர்கொள்கிறீர்கள்.

  ஒரு தாய்தான் தனக்கு எவ்வளவு வந்தாலும் தன் பிள்ளைக்கு எதுவும் வராமல் காப்பார்.அந்த தாய் போல வாழும் நீங்களா எங்களுக்கு கடன் பட்டவர் உங்களால் பக்குவப்பட்ட நாங்கள்தான் உங்களுக்கு என்றும் கடன் பட்டவர்கள். தலைவா இனிமேல் மறந்தும் இப்படி பேசாதீர்கள்.

 15. s venkatesan, nigeria

  நிச்சயமாக இது ஒரு நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள உறவு அல்ல. நான் தலைவரை என் தாய் தந்தைக்கு சமமாகவே பார்க்கிறேன்.

 16. ragu

  s thalai va athe kannerudan than ovvoru raseganum,ethaiyum yethir parathavan than ungal rasegan thalaiva…neenga naalla erukkanum athuthan yenga yether parpu, thalaiva

 17. deen_uk

  ///போக்கிரிராஜா படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க முண்டியடித்துக் கொண்டு நின்றபோது, அவர் அடுத்த முதல்வராகப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்போ, ரசிகர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்போ எனக்கில்லை. இந்த முப்பது ஆண்டுகளும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.///
  ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் இந்த மனநிலை தான்..
  இடையில் சில வாய்ப்பு வந்த போது அவரை உயர்ந்த சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்க்க எண்ணினார்களே தவிர,அதிலும் யாருக்கும் சுயநல எதிர்பார்ப்பு இருந்தது இல்லை..நாட்டு நலனுக்காக ஆசை பட்டார்கள்.
  இவன் தான் ரஜினி ரசிகன்..பொதுநல மனதுள்ளவன்,சகிப்புத்தன்மை உள்ளவன்.இது தான் (மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட ) ரஜினி ரசிகனின் ஸ்பெஷல் குணாதிசயம்.தலைவருக்கு அரசியல் விருப்பம் இல்லை என்றதும் அவரை யாரும் வற்புறுத்தியது இல்லை.சொல்லபோனால் அந்த ஆசையை மறந்தே விட்டார்கள்.என்னை பொறுத்தவரை தலைவருக்கு அரசியல் சாக்கடையில் இறங்காமல் இருந்ததே நல்லது..அரசியலில் அவரை சுற்றி இருப்பவர்களால் அவர் பெயர் களங்க பட வாய்ப்புகள் அதிகம்.
  நிம்மதி இல்லா வாழ்க்கை வாழ வேண்டி இருக்கும்.நம் நாட்டு அரசியலில் சத்தியத்திற்கும் ,நேர்மைக்கும் ,அன்பிற்கும்,பண்பிற்கும் ,சமாதானத்திற்கும் வேலை இல்லை..இவை அனைத்தின் மறுபெயரான ரஜினி என்ற பெயருக்கும் அங்கு வேலை இல்லை.தலைவன் எப்போதும் போல ,வழக்கம் போல,அவரால் முடிந்த,அவர் விரும்பும் நாட்கள் வரை திரையில் வரட்டும்,கடைசி வரை நாங்கள் அவரை ஆராதிப்போம்…
  நீ கடன் வாங்கவில்லை தலைவா..முப்பந்தைந்து வருடமாக எங்களை சந்தோஷ படுத்தி இருக்கிறாய்,இன்னும் சந்தோசம் கொடுத்து கொண்டு இருக்கிறாய்..அதற்காக ஒரே ஒரு முறை உனக்காக பிரார்த்தனை செய்துள்ளோம்..இன்னும் எங்கள் கடன் தான் அடையவில்லை..எனவே மேலும் மேலும் உனக்காகவும் உனது ஆரோக்கியத்துக்காகவும்,உனது (எங்கள் தலைவர் குடும்பம் ) குடும்பத்துக்காகவும் எங்கள் பிரார்த்தனை தொடரும்….(நாங்கள் உனக்கு பட்ட கடனுக்காக..)

 18. r.v.saravanan

  தலைவா நீங்கள் தக தக மினுமினுக்கும் தங்கம் போன்றவர் நீங்கள்

  உங்களை ஒளித்து வைக்க முடியுமா

  உங்கள் அன்பில் நாங்கள் வாழ்கிறோம்

 19. r.v.saravanan

  தலைவா நீங்கள் தக தக மினுமினுக்கும் தங்கம் போன்றவர் நீங்கள்

  உங்களை ஒளித்து வைக்க முடியுமா

  உங்கள் அன்பில் நாங்கள் வாழ்கிறோம்

 20. enkaruthu

  //தலைவா, ரசிகர்களுக்கு நீங்கள் என்றுமே கடன்காரர் அல்ல. உங்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரி வரை வெறும் காலில் ஓராயிரம் பேர் நடந்து போய் பிரார்த்தனை செய்தது, உங்கள் மீதான எதிர்ப்பார்ப்பில்லா அன்பினால்தான்.

  இது கடனல்ல தலைவரே. ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் மூத்த மகனுக்காக கடவுளிடம் நடத்திய மன்றாட்டு அது… பல தம்பி தங்கைகள் ஒரு அண்ணனுக்காக செய்த பிரார்த்தனை.. பல குழந்தைகள் தங்கள் தாய்மாமனுக்காக நேர்ந்து கொண்ட வெள்ளந்தியான பாசம் அது…//

  சத்தியமான உண்மை எங்களுக்கு வாழ்க்கை என்னும் padathai கற்று கொடுத்தீர்கள்.உழைக்க கற்று கொடுத்தீர்கள்.நேர்மையாக இருக்க கற்று கொடுத்தீர்கள்.மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதுதான் சிறந்தது என்பதர்க்கேற்ப எங்களின் வாழ்கையை செதுக்கி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் நீங்கள்.

  சில பத்திரிக்கைகள் உங்கள் மேல் உள்ள வெறுப்பில் “ஒரு ரஜினி ரசிகனின் ஆதங்கம் ” என்று அவர்களின் விஷ கருத்துகளை ரஜினி ரசிகன் என்ற போர்வையில் போடுவார்கள்.ஆனால் எந்த எதிர்பாப்பும் இல்லாமல் இருக்கும் எந்த ரசிகனும் உங்களை இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று நிற்பந்திக்கமாட்டான்.தலைவரே எங்கள் ரத்தத்தில் நீங்கள் ஒரு அண்ணனாக என்றோ ஊரிவிட்டீர்கள்.அதை யாராலும் என்றும் மாற்றமுடியாது.

 21. J.Renugopal

  படிக்கும் போதும், படித்த பின்பும் கண்களில் கண்ணீர்

 22. மிஸ்டர் பாவலன்

  ///மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதுதான் சிறந்தது என்பதர்க்கேற்ப எங்களின் வாழ்கையை செதுக்கி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் நீங்கள்./// (AK)

  நண்பர் AK எழுதிய இந்த வரிகள் மிகவும் உண்மையானவை.

  இந்த வலையில் ஒரு Power Star ஆக எழுதி வரும் அவரைப் பாராட்டுகிறேன்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

  ” நான் அவன் இல்லை! ” (தினகருக்காக ஒரு குறிப்பு)

 23. srikanth

  உண்மையின் நிழல்நீங்கள் உங்களின் நிழல் நாங்கள்

 24. enkaruthu

  //இந்த வலையில் ஒரு Power Star ஆக எழுதி வரும் அவரைப் பாராட்டுகிறேன்.//

  பாவலன் அவர்களே நீங்கள் முன்பு போட்ட பல கமெண்டுகளின் மேன்மையை பார்த்து உங்களுக்கு எப்பொழுதோ பவர் ஸ்டார் பட்டம் கொடுத்தாகிவிட்டது.ஒரே உரையில் இரண்டு கத்தி இருக்க கூடாது அல்லவா .அதனால் உங்களுக்கு கிடைத்த அந்த அறிய பட்டதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் இந்த பட்டம் அதுவும் உங்கள கருத்துகளை பார்த்து என் நண்பர்கள் உங்களுக்கு வைத்த பொருத்தமான பட்டம். நண்பர்களே எங்கே சொல்லுங்கள் பவர் ஸ்டார் பாவலன் வாழ்க.

 25. மிஸ்டர் பாவலன்

  ///பாவலன் அவர்களே நீங்கள் முன்பு போட்ட பல கமெண்டுகளின் மேன்மையை பார்த்து உங்களுக்கு எப்பொழுதோ பவர் ஸ்டார் பட்டம் கொடுத்தாகிவிட்டது./// (AK)

  மை காட் !

  -== மிஸ்டர் பாவலன் ===-

 26. F.Raja

  படிக்கும் போதும், படித்த பின்பும் கண்களில் கண்ணீர், இது தான் தலைவருக்கும் நம்மக்கும் உள்ள பந்தம், அன்பு..இன்னும் என்னென்னவோ
  வார்த்தைகள் வரவில்லை;;;

  ‘தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்!’”

 27. Tulsipriyan Naicker

  தமிழ் திரை உலகின் மங்காத மாணிக்கம் எங்கள் தலைவர் !!!!!!!!

  படிக்கும் போதும், படித்த பின்பும் கண்களில் கண்ணீர், இது தான் தலைவருக்கும் நம்மக்கும் உள்ள பந்தம், அன்பு..இன்னும் என்னென்னவோ
  வார்த்தைகள் வரவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *