BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது!- சூர்யா

சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது!- சூர்யா
 10498270_944707935545291_1665075751671016701_o
 
சென்னை: சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். வேறு யாரையும் அந்த பட்டத்தில் நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமான விஷயம், என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா நடித்த அஞ்சான் படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது.
இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக கொச்சிக்கு சென்றிருந்தார் சூர்யா. அப்போது அவரிடம், ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார்களே.. அது பற்றி உங்கள் கருத்து?’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சூர்யா, ‘இதெல்லாம் தப்புங்க. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தியாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினி மட்டுமே. அந்தப் பட்டப் பெயரில் வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக உள்ளது.
தயவு செய்து என் படங்களை ரஜினி சார், கமல் சார் படங்களோடு ஒப்பிடாதீர்கள்,” என்றார்.
குறிப்பு: சூர்யா மீது கடுமையான விமர்சனங்களை இதற்கு முன் வைத்திருக்கிறோம். ஆனாலும் தலைவரின் ரசிகன் நான் என்று சொன்ன பிறகு.. அவரின் கருத்துகளையும் என்வழியில் வெளியிடுகிறோம்.. தலைவரை உண்மையாகவே வணங்கும் எவரும் நம் நண்பர்கள்தானே!
என்ன.. சிவாஜியை, எந்திரனை அஞ்சான் மிஞ்சிவிட்டது என அடித்துவிடாமல் இருக்கவேண்டும்.. எந்திரன் வெளியானது 3800 அரங்குகளில்.. அஞ்சானுக்கு 1400 அரங்குகள்!!
-என்வழி



7 thoughts on “சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது!- சூர்யா

 1. குமரன்

  விஜய் மதுரையில் தனக்குத் தானே நடத்திக்கொள்ள இருந்த “சூப்பர் ஸ்டார் பட்ட வெற்றி விழாவுக்கு” எந்த திரையுலக நடிகர், நடிகைகளும் வர மறுத்தி விட்டதால் அந்த நிகழ்ச்சியே ரத்து ஆகி விட்டது!

  அதன் தொடர் நிகழ்வாக சூர்யா இப்போது தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட்டது வாழ்த்தி வரவேற்கத் தக்கது.

  நாடகமாடி ஒரு விஷயத்தை நிலை நிறுத்துவதை “stage managed ” என்பார்கள். விஜய் விஷயத்தில் Stage managed என்பது இப்படி பகிரங்கமாகச் செய்வது வெட்கக் கேடு. நானும் ரவுடிதான் என்னையும் வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டு போங்க என்று “வாண்டனாக” வந்து வடிவேலு வண்டியில் ஏறுவாரே அதுதான் நினைவுக்கு வருகிறது.

 2. குமரன்

  அண்மைச் செய்தி ஒன்று இதோ:

  ‘பாயும் புலி’ ரஜினியைப் போல ‘சூப்பர் ஸ்டார் சூடு’ போட்டுக்கொள்ள ஆசைப்படும் ‘பூனை’கள் பண்பாளர் ரஜினியியைப் பார்த்து பண்பான நடத்தையைக் கற்றுக் கொண்டால் வாழ்வில் நிச்சயம் உயரலாம்.

  http://cinema.dinamalar.com/hindi-news/20974/cinema/Bollywood/Rohit-Shetty-likes-to-Direct-Rajini-and-Ajith.htm

  ரஜினிகாந்த், அஜித்தை இயக்க ஆசைப்படும் ரோகித் ஷெட்டி…!

  சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படங்களின் இயக்குனரான ரோகித் ஷெட்டி, விரைவில் வெளிவர இருக்கும் அவருடைய ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பிரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன் ஐதராபாத் சென்றிருக்கிறார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரோகித், “நான் தெலுங்குப் படங்களை கண்டிப்பாக இயக்க மாட்டேன், ஆனால் தெலுங்குப் படங்களின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், அஜித் ஆகியோரை இயக்க வேண்டும் என்று ஆசை,” என்றும் சொல்லியிருக்கிறார்.

  ஐதராபாத்தில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதைத் தெரிந்து கொண்ட ரோகித் ஷெட்டி, ரஜினிகாந்தை சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது ரோகித் வருவதைத் தெரிந்து கொண்ட ரஜினிகாந்த், அவருடைய இருக்கையை விட்டு எழுந்து வந்து ரோகித்தை வரவேற்றிருக்கிறார். அது மட்டுமல்ல, தான் ரோகித் ஷெட்டியின் ரசிகன் என்றும் கூறி ரோகித்தை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். ரஜினியின் இந்த அணுகுமுறையால் ரோகித் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

  அது பற்றி அவர் கூறுகையில், “இதுதான் ரஜினி சார், என எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகத்திலேயே ரஜினிகாந்த்தான் மிகப் பெரிய ஸ்டார். அவர் மிகவும் அடக்கமாக இருக்கிறார். என்னைத் தேடி நடந்து வந்து என்னைப் பாராட்டிய அவருடைய குணம் பெரிதும் கவர்ந்து விட்டது. அவருடன் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சந்திப்பு மிகவும் அற்புதமான அனுபவம்,” என மெய் சிலிர்க்கிறார் ரோகித் ஷெட்டி.

  ரஜினியோட அடுத்த பட இயக்குனர்கள் போட்டியில் ரோகித் ஷெட்டியும் சேர்ந்து விடுவாரோ….!

 3. Rajagopalan

  Anjan odaradhukaga Suryavin Parvai epodhu rajini pakam…
  Thalaivar padathai thavira endha madhiri alunga padathai pakathinga…

 4. kumaran

  சூர்யா அஞ்சான் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 5. jegan n

  surya..Ajith…sivakartikeyan…vikram…ivanga ellorume thalaivarku respect kudukranga……ana antha …….****** manamketavan…..avan..avant sammantapata ethayume namma site LA discuss pan a vendam.he is not worth for
  that

 6. karthik

  சூர்யா நல்ல நடிகர். கடின உழைப்பாளி. சேவை எண்ணம் உடையவர். வாழ்த்துக்கள் சூர்யா !

 7. vikaram

  இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்திய பங்கேற்பதை எதிர்த்து தலைவர் ரஜினிகாந்த் போரடபோவதாக ஒரு பேச்சு நிலவுகிறது. அது பற்றி கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க வினோ அவர்களே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *